என் மலர்
நீங்கள் தேடியது "யாகசாலை"
- மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள், யாகசாலை நடைபெற்றன.
- மேள, தாளங்கள் முழங்க ராஜமுனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே உள்ள ஓடைமதகு ஸ்ரீராஜமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான அஷ்டபந்தன மருந்து திருநெறி தமிழ்மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீராஜ முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.
- யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது.
- மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நெய்க்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் மகா கணபதி, தர்மசாஸ்தா, தில்லை மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
- யாகசாலை மண்டபத்தில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு ஆராதனை.
- புராதனமிக்க கோவில்களை சிறப்பான முறையில் திருப்பணி செய்து குடமுழுக்கு.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்து வக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் 84 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.
இதனையொட்டி யாக சாலை மண்டபம் அமைத்து பூர்வாங்க பூஜையின் முதல் நிகழ்வாக சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் மூலவர் சன்னதிகளில் திருவிளக்கு ஏற்றும் வைபவம் நடந்தது.
மன்னார்குடி ஜீயர் இதனை மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சென்னை நங்கநல்லூர் பிரம்மஸ்ரீ ரமணி அண்ணா, ஆடு துறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், சிவஞா னசம்பந்த சிவாச்சாரியார் ஆகியோர் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
யாகசாலை மண்டபத்தில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு ஆராதனை செய்து பக்தர்களுக்கு மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார்.
பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறி யதாவது:-
பழமையான, புராதனமிக்க கோவி ல்களை சிறப்பான முறையில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வது நாட்டிற்கும், மக்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நல்லது.
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு, தலையிடுவது மிகவும் தவறானது. சமய பாரம்பரிய செயல்பாடுகளில் அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.
கோவில்களில் வரக்கூடிய வருமானங்களை சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்று ம் பணியாளர்களுக்கு தர அரசு முன் வர வேண்டு ம். கோவில்களின் வருமா னத்தை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்ப டுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த குளிச்சார் கிராம குள த்தங்கரையில் உள்ள ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ தேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, நேற்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை குளிச்சார்செல்வம் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
- யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை விமான கும்பத்தை அடைந்தனர்.
- வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ ஓம் சக்தி மா காளியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து மறுநாள் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக தினமான நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் விழா குழுவினர்கள் ரெத்தினசபாபதி சிவநேசன், தென்னரசு, சீனு, செந்தில், பழநிவேல், கலியமூர்த்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- புனிதநீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து பூஜிக்கப்பட்டது.
- புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அபயாம்பி–கை உடனாகிய மயூரநாதர் கோவிலுக்கு 1972 ஆம் ஆண்டு 3 வயது குட்டியாக அபயாம்பிகை என பெயரிட்டு யானை அழைத்துவரப்பட்டது.
இந்த யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொன்விழாவாக கொண்டாடினர்.
இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவிரி ஆற்றுயிலிருந்து புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனித நீர் அடங்கிய கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது.
சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், ராஜகுமார் எம்.எல்.ஏ, நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புனிதநீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
- விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி லயன் கரை பகுதியில் சூடாமணி முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதிதாக பிரம்மாண்டமாக சூடாமணி முனியாண்டவர் சிலை அமைக்கப்பட்டு பரிவார தெய்வங்களான கருப்புசாமி, மதுரை வீரன், நாகாத்தம்மன், ஆகிய சந்நிதிகளுக்கு புதுவர்ணம்பூசி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவிலின் அருகில் யாக சாலை அமைக்கப்பட்டு செம்மேனிநாத சிவாச்–சாரியார் தலைமையில் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
பின்னர் புனித நீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு சூடாமணி முனியாண்டவருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.
- கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது.
1951-ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் கடைசியாக 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நிறைவுற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை விக்னேஸவர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
கும்பாபிஷேக தினமான நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.
விக்னேஷ் சிவாச்–சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் கருவறையில் உள்ள கார்கோடகநாதர் சிவலிங்கதிற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலய அர்ச்சகர் கனேச சிவம் குருக்கள், ஐ.ஏ.எஸ். ஜெயந்தி ரவி, ராமமூர்த்தி ஐயர், சுந்தரேசர் ஐயர், ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஊராட்சி மன்ற தலைவர், கவிஞர் ராதா கிருஷ்ணன், தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
- தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் ஸ்ரீ கரும்பீஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திராளாக பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீ சொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.
- 27-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.
தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
26-ந் ேததி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.
தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
- 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது.
- அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 8 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 24-ந்தேதி காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 25-ந்தேதி தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான பாலாலய விழா இன்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர்கிருஷ்ண குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதா ரர்கள் செய்திருந்தனர்.
- முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
- ஜபம், ஹோமம் நடைபெற்று, பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.
திருநிலை நாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.
இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சித ருகிறார்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து 8கால யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது.
சுவாமி, அம்பாள்,தோணியப்பர்,சட்டைநாதர்,முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்க ப்பெற்று,120 வேதவி ற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் தொடங்கியது.முன்னதாக கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது.
பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. ஜபம், ஹோமம் செய்து பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாரா தனை நடந்தது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர்தம்பிரான் சுவாமிகள், தமிழ் சங்கத்த லைவர் இ.மார்கோனி, காசாளர் செந்தில், மகாலெட்சுமி அம்மாள், உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.