என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்பாட்டம்"
- அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டிஎன்ஜிபிஏ. வட்ட தலைவர் தாசன் தலைமை தாங்கினார்.
மடத்துக்குளம் வட்டக்கிளை நிர்வாகி மாவளப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.எல்லம்மாள், உடுமலை வட்ட செயலாளர் விஜயகுமார் கோரிக்கை விளக்கம் அளித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு உடுமலை வட்ட தலைவர் செல்லத்துரை வாழ்த்துரை வழங்கினார். உடுமலை பொருளாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து ஆர்பாட்டம்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் வாகனங்கள் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே இன்று செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு, ஒன்றிய கழகம் மற்றும் மாமல்லபுரம் அ.தி.மு.க வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர் தினேஷ்குமார், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் அரசு பஸ், கார், வேன் போன்ற வாகனங்களை நகருக்குள் விடாமல் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
- சீமான் ஈரோடு இடைத்தேர்தலின்போது தங்களது சமூக மக்களை இழிவாக பேசியுள்ளார்.
- சீமானின் உருவ பொம்மையை திடீரென சாலையில் எரித்து செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆதி தமிழர் பேரவையினர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி, சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு இடைத்தேர்தலின்போது தங்களது சமூக மக்களை இழிவாக பேசியதாகவும், சீமான் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்ற நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையினர் சீமானின் உருவ பொம்மையை திடீரென சாலையில் எரித்து செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்கள் யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ந்து சேதமாகி வருகிறது.
- சேதமான பயிர்களுக்கும், உயிர்இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகம் முன்பு பா.ஜ.க. எஸ்.டி. அணி சார்பில்யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி. அணியின் மாநில செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திப்பன் வரவேற்றார். இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நரேந்திரன், எஸ்.டி. அணி மாநில செயலாளர் சதீஷ்குமார், எஸ்.டி. அணியின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் வாழும் விவசாயிகள் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்கள் யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ந்து சேதமாகி வருகிறது. அதேபோல யானைகளால் தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். சேதமான பயிர்களுக்கும், உயிர்இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலை வர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசரெட்டி, மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், ஆனந்த், நகர தலைவர் வெங்கட்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்குதல், பயணப்படி 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கால தமதமின்றி பணி வரன் முறை செய்தல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாதப்பன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சின்னசாமி, வட்ட பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
- பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்குதல், பயணப்படி 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கால தமதமின்றி பணி வரன் முறை செய்தல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாதப்பன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சின்னசாமி, வட்ட பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
- விற்பனை மையத்தில் இரண்டுமுறை பில் பதிவு செய்வதை ரத்துசெய்யவேண்டும்.
- மாதா மாதம் ஊதியத்திற்கென நிதி ஒதுக்கவேண்டும்.
தருமபுரி,
தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதல் பொதுவினியோக த்திட்டத்திற்கென தனித்து றை உருவாக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கவேண்டும். விற்பனை மையத்தில் இரண்டுமுறை பில் பதிவு செய்வதை ரத்துசெய்யவேண்டும்.
மாதா மாதம் ஊதியத்திற்கென நிதி ஒதுக்கவேண்டும். பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக்கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகிகள் முருகன் சுகதேவ், குமார் பாலகிருஷ்ணன், சண்முகம், பழனிச்சாமி, சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப் நன்றி கூறினார்.
- அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்
- நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்மா உணவகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அரிசியால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அறந்தாங்கியில் கண்டன ஆர்பாட்டம் ஒன்றியச் செயலாளர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் சி.பி.ஐ. மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், தேசியக்குழு உறுப்பினர் மாதவன், ஒன்றியத் தலைவர் குமார், இராதாகிருஷ்ணன், பெரியசாமி, அஜய்குமார்கோஷ், காமாட்சி, கணேசன், அழகுமன்னன், சுப்பிரமணியன், செல்வராஜ், முருகன், கருப்பையா, ராஜேந்திரன், பழனிவேலு, சேவுக பெருமாள், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
- குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் சார்பில் நடை பெற்ற கவனஈர்ப்பு ஆர்பாட்டத் திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சுமதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலையரசி, தமிழ்பிரியா, ரம்யா, விசா லாட்சி, மணிமேகலை, உமா ராணி, விஜயலட்சுமி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கடலூர் மாவட்ட தலை வர் மணித்தேவன் கலந்து கொண்டு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை களான பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு பொறுப்பாளருக்கான வயது வரம்பை 60 ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், சத்துணவு மையத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். என்பது போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். முடிவில் மீனாட்சி நன்றி கூறினார் இதில் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமத்தின் சத்து ணவு பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சமையலர்கள், உதவியா ளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
- 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.
திருப்பூர்:
தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் 186 மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி கூறியதாவது:-
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும். எச்.ஐ.வி. நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகும். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது.
ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது. இதனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மாத்திரைகளை பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிப்பூர் கலவரம் கண்டித்து நடந்தது
- கோஷங்கள் எழுப்பினர்
ஆரணி:
திருவண்ணமலை மாவட்டம் ஆரணி காந்தி சிலை அருகில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நகர தலைவர் பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜபாபு, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட செயலாளர் உதயகுமார் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பிரபு, நிர்வாகிகள் மருத்துவர் வாசுதேவன், அசோக்குமார். பாபு, பிள்ளையார், குருமூர்த்தி, சம்பந்தம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், காங்கேயம் வட்டக் கிளை செயலாளர் கதிரவன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதாரத்துறை புள்ளியியல் அலுவலர் பெரியசாமி உட்பட அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.