என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசனம்"

    • தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளினார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சிக்க லில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.

    சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.

    அதற்கேற்ப சிக்கல் கோலிலின் சூரசம்ஹார விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளினார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சிக்க லில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.

    சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.

    அதற்கேற்ப சிக்கல் கோலிலின் சூரசம்ஹார விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி.
    • வியர்வையை சிவாச்சாரியர்கள் வெண்பட்டால் துடைத்து அதனைபக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோவில் பிரசித்தி பெற்றது.

    அந்த கோவிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த 24ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    முக்கிய திருவிழாவான அம்பாளிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிநடைபெ ற்றது.

    இதனை முன்னிட்டு முருகப்பெ ருமான் அலங்கரிக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    மகா தீபாராதனைக்கு பிறகு முருகப்பெருமான் அஜபா நடனத்துடன் கோவிலுக்குள் வலம் வந்தார்.அப்போது அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமிக ளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது முருகன் சிலைக்கு முத்து முத்தாக வியர்க்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    அப்போது ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலையின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பும் ஆன்மீக அற்புதம் நடைபெற்றது.

    சிங்காரவேலவரின் முகத்தில் இருந்துஅரும்பிய வியர்வையை சிவாச்சா ரியர்கள் வெண்பட்டால் துடைத்து அதனைஆன்மீக அற்புதத்தின் சாட்சியாக பக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர்.

    கோவிலின் வெளியே காத்திருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    வேல் வாங்கும்விழாவின் நிறைவாக இரவு12 மணி அளவில் சிங்காரவே லவருக்கு மகா அபிசேகம் நடைபெற்றது.

    • மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள், யாகசாலை நடைபெற்றன.
    • மேள, தாளங்கள் முழங்க ராஜமுனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே உள்ள ஓடைமதகு ஸ்ரீராஜமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்திற்கான அஷ்டபந்தன மருந்து திருநெறி தமிழ்மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீராஜ முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.

    • சேவை கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்.
    • மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தரிசனம்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் தற்போது சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனை திரும்ப பெற வேண்டும் எனவும், கட்டண உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் மனு கொடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மனுக்களை உண்டியலில் போட வரும்போது அறநிலைய த்துறை துணை ஆணையர் உமாதேவி, கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ. செந்தி ல்குமார் ஆகியோர் கேட்டுக்கொ ண்டதற்கினங்க மனுக்களை அவர்கள் கைகளில் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரிசி சாதம் கொண்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை.
    • சேந்தங்குடி வள்ளலார் கோவிலில் சாமிக்கு அன்னாபிஷேகம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பாடல் பெற்ற அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரிசி சாதம் கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை மற்றும் சோடச ஆராதனை செய்யப்பட்டது.

    இதில் துணை கண்காணிப்பாளர் கனேசன், கணக்காளர் வெங்கட்ராமன், நகர மன்ற உறுப்பினர்கள் சர்வோதயம், சதீஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் சேந்தங்குடி வள்ளலார் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    ஆலய குருக்கள் பாலச்சந்திர சிவாச்சாரியார் பூஜைகள் செய்தனர்.

    இதில் கண்காணிப்பாளர் அகோரம், நகர மன்ற உறுப்பி னர் ரமேஷ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொன்டு தரிசனம் செய்தனர்.

    • இன்று அதிகாலை முதல் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது கனமழை.
    • பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவு.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்து காட்டாக திகழ்கிறது.

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரியகோவிலை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

    மதியம் 2 மணி வரை தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் இன்று பெரிய கோவிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே காணப்–பட்டது. அவர்களும் குடைபிடித்தபடி பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 4 மணி வரை பெரிய கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது.

    மழை ஓய்ந்த பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    • தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம்.
    • சித்தர்களால் கண்டறிந்து அடையாளப்படுத்தப்பட்ட மூலிகைகள் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    ஜப்பான் நாட்டின் டோக்கியோ பகுதியை சேர்ந்த பழம்பெரும் நடிகை வியாசாமிவசுகி. இவர் பெரும் பொருள், புகழ் ஆகியவற்றை நிறைவாகப் பெற்றிருந்த போதிலும் மன நிம்மதி இல்லாமல் தவித்து வந்தார்.

    இந்நிலையில் தமிழ் மொழியை கற்று தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்களின் பெருமையை அறிந்து அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக தனது பெயரை ஷன்மாதாஜி என மாற்றி அமைத்துக் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணமாக இலங்கை கண்டி கதிர்காம முருகன், தமிழகத்தில் உள்ள முருக கோயில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். ஐந்து பேர் கொண்ட இக்குழுவினரை ஜப்பான் நாட்டில் 35 வருடங்களாக தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் வழி நடத்தி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

    தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பொன்னி விதை நெல் ரகங்களை ஜப்பானில் முருகா எனும் பெயரில் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் பயிரிடப்படுவதாகவும், அதுபோல் சித்தர்களால் கண்டறிந்து அடையாள ப்படுத்தப்பட்ட மூலிகைகள் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    முருகா எனும் பெயரில் பயிரிட்ட அரிசியை இன்று சுவாமி மலை முருகன் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளதாக கூறினர்.

    தமிழக முதல்வரை சந்தித்து அவருக்கும் முருகா எனும் பெயர் கொண்ட அரிசியை வழங்க இருப்பதாக தெரிவி த்தனர்.

    • 18 வகையான வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகம்.
    • 200-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவில் வளாகத்தில் அய்யப்பன் சாமிக்கு தனி சன்னதி உள்ளது.

    இங்கு கார்த்திகை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சம்வஸ்திரா அபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக அய்யப்ப சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு அய்யப்பன் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஐயாறப்பருக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் செய்யப்பட்டது.
    • தொடர்ந்து கட்டளை மடத்தில் குருமகா சந்நிதானம் கொலுக்காட்சி.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயிலுக்கு தருமையாதீனத்தின் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மார்கழி தனுர்மாத தரிசனத்திற்காக வருகை புரிந்தார்.

    இதனை முன்னிட்டு ஐயாறப்பர் மற்றும் அறம்வளர்த்த நாயகி அம்மன், நவக்கிரக சந்நிதி, பாலசுப்ர–மணியர், ஆட்கொண்டார், தென் கயிலாயம் அப்பர் சந்நிதி, வடகயிலாயம் ஆகிய சந்நிதிகளின் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனனை செய்யப்பட்டது.

    மாலையில் குருமகா சந்நிதானத்தின் முன்னிலையில் ஐயாறப்பர் சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும் அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் செய்யப்பட்டது.

    முன்னதாக புஷ்ய மண்டபத்துறை வளாகத்தில் நித்ய அன்னதானத் திட்டத்தை குருமகா சந்நி–தானம் ஏழைகளுக்கு திருவமுது படைத்து தொடக்கி வைத்தார்.

    மாலையில் சுவாமி தரிசனத்தை தொடர்ந்து கட்டளை மடத்தில் குருமகா சந்நிதானம் கொலுக்காட்சி அருளி கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    • அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் கட்டப்பட்டு உள் ளது.

    இந்த கோவிலில் நாளை புத்தாண்டு தரிச னத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழ மை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு நிவேத்திய பூஜை நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. அதன்பிறகு 9 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப்படுகிறது.

    அதன் பிறகு 5 மணி முதல் 5.30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. பின்னர் 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 8.45 மணி முதல் 9 மணி வரை வெங்கடேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

    • நடை திறப்பதற்கு முன்னே திரளான பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சை பெரியகோவில்

    இதனை முன்னிட்டு, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக்கோவிலில் இன்று காலை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    வழக்கமாக பெரிய கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவர். இன்று ஆங்கில புத்தாண்டு என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் காலை முதலே வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.

    இது தவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர்.அவர்கள் அனைவரும் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்ழ கொண்டனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேப்போல் பெரிய கோவிலில் உளன்ள முருகர் சன்னதி, வராகி அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளிலும் நடந்த புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மாரியம்மன் கோவில்

    இதேப்போல் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. நடை திறப்பதற்கு முன்னே பக்தர்கள் திரளானோர் குவிய தொடங்கினர். தஞ்சை மட்டுமில்லாது சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் நடந்தே வந்து மாரியம்மனை மனமுருகி தரிசித்தனர்.

    இந்த ஆண்டில் அனைவரும் நலமுடனும், நோய் நொடியின்றி வாழ வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர்.

    பல பக்தர்கள் முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தினர். தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேப்போல் தஞ்சை கோடியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ×