search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் படுகாயம்"

    • வாகனம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் நகரில் ஏற்கனவே சாலையின் இருபுறமும் அதிக அளவில் கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட் டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை ஜமுனாமரத்தூர் அணைக் கட்டு தாலுகாவை அடுத்த பெரியஎட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (வயது 32) என்பவர் தனது மகள் கவுதமி (13) மற்றும் சகோதரரின் மகன் பூவரசன் (13) ஆகியோரை தானிப்பாடியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்றார்.

    செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து செங்கம் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சாலபோகம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (வயது47) .

    இவர் தனது மனைவி மேனகாவுடன் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கபிஸ்தலம் வழியாக திருவையாறு நோக்கி சென்றார்.

    கருப்பூர் அகிலாண்டேஸ்வரி கோவில் அருகில் எதிரே அவர்கள் சென்ற போது கருப்பூர் குடியானத்தெருவை சேர்ந்த திவாகர்( 25) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பாாலகிருஷ்ணன், அவரது மனைவி மேனகா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் திவாகரும் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரி அடுத்த நம்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேச வன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று இரவு திமிரி யில் இருந்து ஆற்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென் றுள்ளார். அதேபோல் கலவையை அடுத்த மேச்சேரி பகுதி யைச் சேர்ந்த பூவேந்தன் (26), விக்னேஷ் (26) ஆகிய இருவரும் ஆற்காட்டில் இருந்து திமிரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ஆற்காடு அடுத்த விளாபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வரும்போது 2 மோட்டார் சைக்கிளும்' நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் பின்புறம் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு நேற்றிரவு பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
    • சுவற்றுக்கு அடியில் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்னூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கிராமத்தில் முருகன் கோவிலுக்கு எதிரே உள்ள குடியிருப்பில் எல்லப்பன் மகன் சங்கர் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

    இந்த வீட்டிற்கு பின்பு சுமார் 5 அடி உயரத்திற்கு கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக மழை நீர் தேங்கியுள்ளது. வீட்டில் பின்புறம் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு நேற்றிரவு பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் வீட்டில் இருந்த சங்கர் மகள் நந்தினி, மகன் நித்திஷ் மற்றும் சகுந்தலா ஆகியோர் சுவரின் இடர்பாடு களில் சிக்கி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.

    இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிந்து விழுந்த சுவற்றை அகற்றி சுவற்றுக்கு அடியில் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டனர். அங்கு சகுந்தலா, நந்தினி, நித்திஷ் ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் நேற்று இரவு பெய்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கனவாய்காடு தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 53) இவர் தனது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் அண்ணன் சம்பத் ஆகியோருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டின் வளைய காப்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை சம்பத் ஓட்டினார். அப்போது தியாகதுருகம் அருகே திம்மலை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வந்த சிவப்பு நிற கார் இவரது காரை முந்தி சென்ற போது இவரது காரின் பக்கவாட்டில் மோதியது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த இவரது கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த ரவி, இவரது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் டிரைவர் சம்பத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சம்பத் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கார் தாறுமாறாக ஓடி எதிர்புறம் சாலையில் உருண்டு பாலத்தின் தடுப்பு சுவர் மீது தொங்கியது.
    • விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் 4 வழிச்சாலையில் அம்மையநாயக்கனூர் நக்கம்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் வந்தபோது நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி எதிர்புறம் சாலையில் உருண்டு பாலத்தின் தடுப்பு சுவர் மீது தொங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த வெள்ளி குறிச்சியைச் சேர்ந்த ராணுவ வீரரான அசோக் குமார் (24), அதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் கருப்பு ராஜா (34), மாரி மகன் சரவணன் (20) ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்த இளைஞர்கள் சிலர் உதவி செய்து ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். போக்குவரத்து பாதிப்பையும் அவர்கள் சீர் செய்து ஒழுங்குபடுத்தினர்.

    அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல்- மதுரை சாலையில் வந்த கார் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது
    • இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    குள்ளனம்பட்டி :

    வேலூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்தவர் மோகன் (வயது42). இவர் தனது மனைவி சோனியா (36), மகள் அனுஷியா (12) ஆகியோருடன் காரில் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றார்.

    திண்டுக்கல்- மதுரை சாலையில் போக்குவரத்து நகர் அருகே வந்தபோது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் மோகன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவர்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×