search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே   கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்
    X

    படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளி அருகே கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்

    • வீட்டில் பின்புறம் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு நேற்றிரவு பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
    • சுவற்றுக்கு அடியில் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்னூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கிராமத்தில் முருகன் கோவிலுக்கு எதிரே உள்ள குடியிருப்பில் எல்லப்பன் மகன் சங்கர் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

    இந்த வீட்டிற்கு பின்பு சுமார் 5 அடி உயரத்திற்கு கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக மழை நீர் தேங்கியுள்ளது. வீட்டில் பின்புறம் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு நேற்றிரவு பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் வீட்டில் இருந்த சங்கர் மகள் நந்தினி, மகன் நித்திஷ் மற்றும் சகுந்தலா ஆகியோர் சுவரின் இடர்பாடு களில் சிக்கி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.

    இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிந்து விழுந்த சுவற்றை அகற்றி சுவற்றுக்கு அடியில் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டனர். அங்கு சகுந்தலா, நந்தினி, நித்திஷ் ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் நேற்று இரவு பெய்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×