search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுந்து"

    • எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது.
    • கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 51), கூலி தொழிலாளி. இவர் வடிவீஸ்வரம் பகுதியில் லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.
    • கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அணியாபுரம் ஏ.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (62).

    டிரைவர்

    இவர் கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.

    கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அணியாபுரம் 4 ரோடு பகுதியில் கல்லூரி பஸ்சில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கனகராஜ் சென்று கொண்டிருந்தார்.

    நெஞ்சுவலி

    அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.

    கனகராஜ் பஸ்சை நிறுத்திய அடுத்த நிமிடமே டிரைவர் இருக்கையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் ஓடிச் சென்று கனகராஜை பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதையடுத்து உடனடி யாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கனகராஜை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புகார்

    இது குறித்து கனக ராஜின் மனைவி ஜோதி (48) மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிரைவர் கனகரா ஜூக்கு 2 மகள்கள் உள்ளனர். கல்லூரி பஸ்சை ஓட்டிக் கொண்டி ருந்தபோதே நெஞ்சு வலியால் டிரைவர் இறந்த சம்பவம் மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநக ராட்சிக்கு குடிநீர் வினியோ கம் செய்யும் நீரேற்று நிலை யம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.

    வாலிபர் பிணம்

    இந்த நிலையில் இந்த நீரேற்று நிலையத்தின் அடிப்பகுதியில் தலையில் காயத்துடன் வாலிபரின் பிணம் ஒன்று கிடப்பதாக கருமலைக்கூடல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டனர்.

    சாவில் சந்தேகம்

    இதில் இறந்த வாலிபர் மேட்டூரை அடுத்த மாசி லாபாளையத்தை சேர்ந்த நடராஜ் (28) என்பதும், இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதனிடையே நடராஜின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்ப தாக தெரிவித்து உள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கருமலைக்கூடல் போலீ சார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த ஷேக் முகமது பலத்த காயமடைந்தார்.

    கன்னியாகுமரி,

    நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 55). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் பஸ்சில் பயணம் செய்தார்.

    பஸ் ஆசாரிபள்ளம் பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது ஷேக் முகமது ஓடும் பஸ்சிலிருந்து கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த ஷேக் முகமது பலத்த காயமடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஷேக் முகமது பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண் டார்.

    முதற்கட்ட விசாரணை யில் ஷேக் முகமதுவிற்கு வலிப்பு நோய் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வலிப்பு வரும்போது அங்கும் இங்குமாக ஓடுவது வழக்கம். சம்பவத்தன்று பஸ்சில் சென்று கொண்டிருந்த போது ஷேக் முகமதுவுக்கு வலிப்பு நோய் வந்துள்ளது. அப்போது பஸ்சிலிருந்து அங்கும் இங்குமாக ஓடிய ஷேக் முகமது ஓடும் பஸ்சிலிருந்து இறங்கிய போது தவறி விழுந்து பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

    பலியான ஷேக் முகமது வின் உடல் பிரேத பரி சோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த செங்கோடி மாத்தாரை சேர்ந்தவர் மணிதாஸ் (வயது 59 ), பந்தல் தொழிலாளி.

    இவர் மாத்தார் பகுதியில் உள்ள காவு கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மணிதாஸ், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிதாஸ் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிதாசின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    • சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிரா மணியில் இருந்து சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்துபோன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எங்கிருந்து இந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55). இவர் மின் மோட்டார்களை சரி செய்யும் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    இவர் இன்று காலை வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.
    • நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரத்குமார் (வயது 25). இவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கிணற்றில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி வரும்போது, சரத்குமார் கால் தவறி கிணற்றினுள் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டதால் தண்ணீரில் தத்தளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அவரது சகோதரர் மகன் கதறினார். பின்னர் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள், தண்ணீரில் மூழ்கி கிடந்த சரத்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாற்றுத்திறனாளி தவறி விழுந்து இறந்தார்.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (56). மாற்றுத்திறனாளி. நேற்று மதியம் இவர் ஏணிப்படியில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்பாபு பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
    • இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஓரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (52). இந்நிலையில் நேற்று சாந்தி ஓரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள ராட தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

    அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கே வைத்து இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் சத்தியமங்கலம் கோனமுலை அருகே உள்ள சென்னிமூப்பன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள் (57) என்பது தெரிய வந்தது. ரங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது. அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் தெரிவித்தனர்.

    ×