search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி"

    • தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
    • விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாப்பாத்திரம் மக்கள் மனதில் பதிந்தது. பின் 2011ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் ஆளவந்தான் என்ர அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் வரும் காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளான உலா வந்து கொண்டு இருக்கின்றன.

    தற்போது 81 வயதாகும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.

    மனைவி மற்றும் உதவியாளர் ஒருவருடன் வருகை தந்த அவருக்கு, வாக்குச்சாவடிக்குள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற அவரது உறுதியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட திருக்கோ வில் நிர்வாக அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் சுசீந்திரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், ஜோதீஷ்குமார், சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவனந்த புரம் பத்மநாபசாமி கோவி லில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக வருகிற 12-ந்தேதி புறப்பட்டு செல்கிறது. மீண்டும் சாமி சிலைகள் திருவனந்த புரத்தில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு குமரி மாவட்டத் திற்கு வருகிறது. சாமி சிலை கள் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதையும் திருவனந்த புரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு திரும்பி வருவதையும் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் திருக்கோவில் நிர்வாகம் மேற்கொள்வது, மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கும் பட்டு மற்றும் துண்டுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய இணை ஆணையரிடம் அனுமதி கேட்பது, குமரி மாவட்ட திருக்கோவில்களில் நடை பெறும் திருவிழாக்களுக்கு கோவில் மேலாளர் மற்றும் ஸ்ரீ காரியங்களுக்கு முன் பணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

    • ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தங்க கவசம்

    சேலம் கோட்டை மாரி யம்மன் கோவிலில் அம்ம னுக்கு தங்க கவச அலங்கா ரம் செய்யப்பட்டது. பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கப்பட்டது.

    சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திர வியங்களால் சிறப்பு அபி ஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்ம னுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை காண அப்பகுதி யில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தாலி கயிறு

    இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தாலி கயிறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்ச னைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ரத்தின அங்கி

    நெத்திமேடு தண்ணீர் பந்தல் மகா காளியம்மன் கோவிலில் ரத்தின அங்கி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.

    கன்னியாகுமரி:

    தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் காசி திருப்பனந்தாள் திருமடத்தின் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சபாபதி சுவாமிகள் ஆகியோர் நேற்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    அவர்களை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.

    பின்னர் 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவர், ஆஞ்சநேயர், தியாக சவுந்தரி அம்மன், பால சவுந்தரி அம்மன், ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி மற்றும் ஸ்ரீநாகராஜர் சூரிய பகவான் ஆகிய சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை ஐகோர்ட் நீதிபதி நாகா அர்ஜுன் மற்றும் ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி சாம்பசிவராவ் நாயுடு ஆகியோர் தங்களது குடும்பத்துடன் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களும் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் அவர்கள் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். 2 ஐகோர்ட் நீதிபதிகள் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டார்
    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.

    கன்னியாகுமரி :

    மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி பிரித்தீவ் ராஜ் சிங் ரூபன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அவருக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அவர் மாலை 6-20 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் சூரியன் மறைந்த காட்சியை கண்டு களித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார். 2-வது நாளாக இன்று அதிகாலை 6 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு நின்ற படி சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தார். அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். இங்கு வந்து அவரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்புஅளித் தனர். அதன் பிறகு அவர் பகவதி அம்மன் கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகு துறைக்கு சென்றார். அங்கு வந்து அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனிபடகில் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அவருக்கு சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.அதன் பிறகு அவர் படகு மூலம் அருகில் உள்ள திருவள்ளுவர் பாறைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வியந்தார். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சென்றதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை 10 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு விவேகா னந்தர் மண்டபத்துக்கு தொடங்கியது அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்தனர். அவர் சென்ற பாதையான விவேகானந்தர் ராக் ரோடு மற்றும் சன்னதி தெரு பகுதியில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல அதிகாலையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க செல்லவும் போலீசார் தடை விதித்தனர். இதனால் சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலங்களில் நாகரே மூலவராகவீற்றிருக்கும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற் றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற் பொழிவு, பரத நாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து விழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தி னம் நடந்தது. குமரி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளிய காட்சியை ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் இருபுறமும் கூடிநின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் சிறப்பு வழி பாடு ஆகியவை நடந்தது. மாலையில் நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் சாமிக்கு ஆராட்டு விழா நடந் தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆராட்டு முடிந்ததும் சாமி ஒழுகினசேரி ஆராட்டு துறைக்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு அலங்காரம் முடித்து கோவிலுக்கு சாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

    ஆராட்டுத்துறையில் இருந்து கோவிலுக்கு எழுந்த ருளிய சாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

    • சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த 23-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதிதேவி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.

    இதில் திருவனந்த புரத்தில் நடந்த நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. நவராத்திரி விழா முடிவுற்ற பின்னர் 8-ந் தேதி அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. அந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பளித்தனர்.

    இந்நிலையில் நேற்று குமரி - கேரள எல்லைப்பகுதி யான களியக்காவிளையில் பக்தர்கள் மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் திரளாக கூடி நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபு ரம், குழித்துறை, தபால் நிலைய சந்திப்பு வழியாக குழித்துறை மகா தேவர் ஆலயத்தை வந்த டைந்தது. அங்கு நேற்று தங்கலுக்கு பின்னர் இன்று அதிகாலையில் குழித்துறை மகாதேவர் ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகள் வழி அனுப்பப்பட்டது.

    இதில் தமிழக போலீஸ் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு அங்கிருந்து பத்மநாப புரத்திற்கு புறப்பட்டு சென்றது.இந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

    பத்மநாபபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்த சாமி சிலைகள் நாளை (10-ந் தேதி) அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஞாயிற்றுகிழமை மாலையுடன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழா வில் பங்கேற்க கடந்த மாதம் 23-ந் தேதி சுசீந்தி ரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங் கள் ஊர்வலமாக சென்றன.

    நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கிய நிலையில் சுவாமி விக்ர கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்துநேற்று முன்தினம் காலை கரமனை ஆரியசாலை கோயிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரசாமி சரஸ்வதி மண்டபத்தில்எ ழுந்தருளினார். வேட்டைக் களத்தை மூன்று முறை சுற்றி வந்த அவர் வேட்டை முடிந்த பின்னர் மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயிலுக்கு சென்றார்.பள்ளிவேட் டையை தரிசிக்க பூஜைப் புரை சரஸ்வதி மண்டபத் தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    மாலையில் செந் திட்டை பகவதி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனையும், குமாரசாமி யையும் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத் தில் முன்னே எழுந்தருள செய்தனர். அங்கு மன்னர் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் விக்கரங்கள் மீண்டும் கோயில்களுக்கு சென்றன.

    நவராத்திரி விக்ரகங் களுக்கு நேற்று நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக் கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை குமாரசாமி, முன்னுதித்த நங்கை அம் மன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் இன்று மீண்டும் பத்மநாப புரம் புறப்பபட்டன. வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை மாலையு டன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பா ளையம் வெள்ளை கரடு திம்ம ராய பெருமாள் கோவில் 2-வது சனிக்கிழ மையை முன்னிட்டு சாமி ஊர்வலம் விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பா ளையம் வெள்ளை கரடு திம்ம ராய பெருமாள் கோவில் 2-வது சனிக்கிழ மையை முன்னிட்டு சாமி ஊர்வலம் விழா நடந்தது. கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பூ அலங்காரத்தில் சாமி ஊர்வலம் வெள்ளாண்டி வலசை நடுத்தெரு காளியம்மன் கோவில் வீதி வீரப்பம்பாளையம் வழியாக பெண்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக சாமி ஊர்வலம் சென்று பின்பு கோவிலை அடைந்தனர். அதைத்தொடர்ந்து கொடி தீபம் ஏற்றப்பட்டது.

    பின்பு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராமு, கிட்டு, குப்புசாமி பண்டிதர் மற்றும் மருத்துவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

    • ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்

    கன்னியாகுமரி:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பர். மேலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிப்பது சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

    நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூ டங்கள் வேலை நாளாக இருந்தபோதும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் அலயம், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஆலயம் ஆகியவற்றில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவி லில் காலை சிறப்பு பூஜை களைத்தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்ன தானம், மாலையில் சூரி யனின் ஒளிக்கதிர்கள் ஆதி கேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு ஆகியன நடந்தது.

    நேற்று மாலையில் சூரியக் கதிர்கள் விழும் நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இன்றும் சூரியக்கதிர் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு நடைபெறும்.

    புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர் கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி திருவீதி உலா நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விட்டோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா, ராஜ மன்னார்குடி மணவாள மாமுனிகள் பீடம் 4-வது பட்டம், செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதனையொட்டி பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×