search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்த்துக்கள்"

    • மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    • இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கிரிக்கெட் வீரர் கள் 2007-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தி யாவிற்கு வெற்றியும், பெருமையையும் தேடித்தந்தி ருக்கின்றார்கள். இந்திய கிரிக்கெட் வீரார்களின் இந்த சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    விளையாட்டுத் துறையில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். வருங்காலங்களிலும் அவர்களின் வெற்றி தொடர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.
    • தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து.
    • காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    கன்னியாகுமரி:

    விஜய்வசந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

    இந்த தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற மாநில தலைவர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    நேற்று வெற்றி கண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்!
    • பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்! வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

    நீதியையும் இந்திய மக்கள் மிகவும் போற்றும் மக்களாட்சி விழுமியங்களையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் கபில் சிபல் அவர்களது தலைமை அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • தொழில்துறை அமைச்சராக பொறுப்பே ற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.
    • அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியி ருப்பதாவது, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.

    கடந்த 2 ஆண்டுகளாக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவில் அவர் தலைமையில் பயணித்ததில் அவரது செயல் திறனையும், கருத்தியல் உறுதியையும் கண்டு வியந்தேன். டெல்டா பகுதிக்கு அமைச்சர் இல்லையே என்ற குறை நீங்கியது.

    பின்தங்கி யுள்ள நாகப்ப ட்டினம் மாவட்ட த்திற்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தர அவர் பாடுபடு வார் என்று நம்புகிறேன். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ரோடு அருகில் உள்ள அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் விடப்பட்ட பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி த.லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்துவாழ்த்து க்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகரமன்ற தலைவர்செல்வராஜ், அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தின் செயலர்கள் கலாவதி, ஞானசம்பந்தம், தலைமையாசிரியர்கள், மாணவ- மாணவிகள், அரசு வழக்கறிஞர்கள் தனிகை பழனி, அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    10-ம் வகுப்பில் பிரியா என்ற மாணவி 410 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், அட்சயா 396 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சாரா 385 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளார்கள். அதேபோல் பிளஸ்-2 அரசு தேர்வில் லூர்து டென்சிகா என்ற மாணவி 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும், எமிமா 452 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், முகமது நிஸாருத்தீன் 441 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் செல்லம்மாள் சுந்தர்ராஜன், பள்ளி முதல்வர் பரிமளா காந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் வாழ்த்தினார்கள்.

    • விளையாட்டுப்போட்டிகளில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் : கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.
    • போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கான 44-வது பைட் செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கற்பித்தலோடு, மாணவர்களின் அறிவுத்திறனையும் மற்றும் தனித் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். கல்வி கற்பதோடு, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, அறிவுத் திறனையும், உடற்வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போட்டியில் பங்கேற்றுள்ள 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்குஎனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, மாவட்ட உடற்கல்வி இயக்குநர் பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட சதுரங்க கழக தலைவர் பழனி, செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆழ்வார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    ×