search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் மேலாண்மை"

    • மேற்கு தொடர்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க வேண்டாம்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை காரணமாக திடீர் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரதம மந்திரியின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது.
    • பேரிடர் மேலாண்மை ஆணையம் 3 நிலைகளில் நிறுவப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் படி, "பேரழிவு"என்பது இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட விபத்தினால் அல்லது அலட்சியத்தால் ஏற்படும். ஒரு இயற்கை பேரழிவில் பூகம்பம், வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி, சுனாமி, நகர்ப்புற வெள்ளம் ஆகியவை அடங்கும். மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு அணு, உயிரியல் மற்றும் இரசாயனமாக இருக்கலாம்.

    பேரிடர் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படியாக தயாரிக்கப்பட்டது. இது பேரிடர்களை முழுமையான முறையில் கையாள்வதற்கான கட்டமைப்பு வழங்குகிறது. சட்டத்தின் விதிகளின் கீழ், பேரிடர் மேலாண்மை ஆணையம் 3 நிலைகளில் நிறுவப்பட்டுள்ளது. தேசிய, மாநில மற்றும் மாவட்டம்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    1. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரதம மந்திரியின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது, மேலும் அதன் செயல்பாடுகளை நிறைவேற்ற உதவுவதற்காக செயலாளர்களின் தேசிய செயற்குழு உருவாக்கப்பட்டது.

    2. மாநில அளவில், மாநில முதல்வர் தலைமையில் ஒரு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. அதற்கு மாநில செயற்குழுவின் உதவி உள்ளது. அதேபோல் மாவட்ட அளவில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும், இயற்கைப் பேரிடரை தேசியப் பேரிடராகக் குறிப்பிடும் நிர்வாக அல்லது சட்டம் எதுவும் இல்லை. இதன் விளைவாக, ஒரு பேரிடர் தேசிய பேரிடராக தகுதி பெறுவதற்கான நிலையான தரநிலை எதுவும் இல்லை.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    10-வது நிதி ஆணையம் (1995-2000) இது சம்பந்தமாக ஒரு ஆலோசனையை பரிசீலித்தது. மாநிலத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை ஒரு பேரிடர் பாதித்தால், அது தேசிய பேரிடராக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

    எவ்வாறாயினும், விதிவிலக்கான தீவிரத்தன்மையின் பேரழிவு ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறியது. ஒரு பேரிடரை தேசிய பேரிடர் என்று வகைப்படுத்துவதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்கிறார்கள்:

    • பேரழிவின் அளவு மற்றும் அதற்காக தேவைப்படும் உதவியின் அளவு.

    • சிக்கலைத் தீர்ப்பதற்கான அரசின் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அனுசரிப்பு.

    • பகுதிகளின் சேதம், உயிர் சேதம் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது.

    • பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் என்ற பெயரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது.

    மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கட்டுமானம் மற்றும் நகர திட்டமிடலுக்கான மாதிரிகளை உள்நாட்டு தளத்தில் நாம் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

    பேரிடர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    சில நகர அமைப்புகள் பேரிடர் ஏற்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும். இனி அவ்வாறு இருக்க முடியாது. புதிய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும்போது பேரிடர் மேலாண்மையை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். மொத்த அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்தார்.

    • ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை முகமை மூலம் 12 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.231 (சுயநிதிப்பிரிவு) மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தை (சுயநிதிப்பிரிவு) சேர்ந்த 20 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் வைத்து சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் தீ ஆகிய ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி ஜெயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி மற்றும் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை தலைவர்கள் சிரில் அருண், திருச்செல்வன், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் "இயற்கை சீற்றமும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும்" என்ற தலைப்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மானாமதுரை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர், குமரேசன் கலந்துகொண்டு இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 300 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.
    • தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார்

    சுரண்டை:

    சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வீ.கே.புதூர் அருந்தவபிராட்டி குளத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார். ‌சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வன், தலைமையில் போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன், சாமி, உலகநாதன், குமார் பொன்ராஜ் ஆகியோர் தீயணைப்பு துறையின் பணிகள் தீவிபத்து, வெள்ளம், கட்டிட இடிபாடுகள் மற்றும் பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.

    ஆர்.ஐ. ராசாத்தி, கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், கிராம உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, பள்ளி தாளாளர் ஜோசப்சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் வரவேற்றார். இதில் தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நில நடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×