என் மலர்
நீங்கள் தேடியது "பசு மாடு"
- ரெங்கராஜ்பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 65). விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.
இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கால் தவறி மாடு கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
- கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை சுமார் ஒருமணி நேரம் போராடி மீட்டனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். விவசாயியான இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கால் தவறி மாடு கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்தது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வமணி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை சுமார் ஒருமணி நேரம் போராடி மீட்டனர்.
விவசாய கிணற்றில் விழுந்த பசுமாட்டை பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர்.
- இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. விவசாயி. இவரது மனைவி லட்சுமி தேவி.
இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர். இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.
பொதுவாக கன்று ஈனும் பசுக்கள் 1 முதல் 1½ ஆண்டுகள் மட்டுமே பால் கொடுப்பது வழக்கம். 11 ஆண்டுகளாக பால் கொடுக்கும் பசுவை வெங்கடசாமி லட்சுமிதேவி தம்பதியினர் தங்களது வீட்டிற்கு வந்த மகாலட்சுமியாக நினைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர்.
இந்த பசுவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.
- பழுதடைந்த ரேஷன் கடை சுவர் இடிந்து விழுந்து 4 பசு மாடுகள் இறந்து கிடந்தன.
- நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பழைய பல்லகச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே ரேஷன் கடை கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் ரேஷன் கடை கட்டிடம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ரேஷன் கடை அருகே கட்டப்பட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 65) என்பவரின் நான்கு பசுமாடுகள் மீது விழுந்ததில் மாடுகள் சம்பவ இடத்தில் இறந்து போனது. இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பசு மாடுகளை மீட்டனர். பழுதடைந்த ரேஷன் கடை இடிந்து விழுந்து நான்கு மாடுகள் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தாளவாடி அருகே பசு மாட்டை அடித்து கொன்றது
- 2 மாதமாக அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வன விலங்குகள் வசித்து வரு கின்றன.
இதில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளி யேறும் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொல்வது தொடர்கதை யாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடியை அடுத்த சேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி (48) விவசாயி. இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார்.
இவர் மாடுகளை தன்னுடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
அதன்படி வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். மதியம் மாடுகள் திடீரென கத்தின. மாடுகளின் சத்தம் கேட்டு நாகமணி தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு பசு மாடு ஒன்று கழுத்து, முதுகு போன்ற பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாட்டை புலி அடித்துக்கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வன ச்சரகர் சதீஷ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கால் தடம் புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே மாட்டை புலி அடித்து க்கொன்றது தெரிய வந்தது.
கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 நாய், 2 கன்றுக்குட்டி ஆகியவற்றை புலி அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து உள்ளது. மேலும் கடந்த வாரம் மாடு ஒன்றையும் புலி கொன்று உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கிராமத்துக்குள் புலி புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புலி தாக்கி இறந்த மாட்டுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை விவசாயிக்கு வழங்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் இரண்டு நபர்கள் நேற்று இரவு பசு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். இவர்களை மாடு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி மக்கள் சந்தேகித்து, சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் அரியானா மாநிலம் கோல்கானைச் சேர்ந்த அக்பர் கான் (வயது 28) என்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #CowLynching
வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சின்னதாயி இவர்களுக்கு சொந்தமான பசுமாடு நேற்று இரவு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்து கொண்டு வேகமாக ஓடியது.
அப்போது அங்குள்ள சுமார் 50 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.
காலையில் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் வேட்டவலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.