என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூஸ்டர் தடுப்பூசி"
- சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
- கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.
லண்டன்:
சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சீன பயணிகளுக்கு இங்கிலாந்தும் கட்டுபாடு விதித்து இருந்தது. சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பரிசோதனை எடுக்கப்பட்ட, அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கொரோனா உறுதியானாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன பயணிகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ள நிலையில், அவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது.
- உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.
பீஜிங்:
புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.
புது வகை கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. சீனா கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது. அனைவரும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி உறுதியாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
- பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
சென்னை:
சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரானின் மரபணு மாற்றம் அடைந்த 'பி.எப்.7' வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் பலர் சென்னையில் இயல்பாக சுற்றித் திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிவதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொது இடங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஓட்டல்கள், கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் இருந்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மாநகராட்சி பணியாளர்களும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
- பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
நியூயார்க்:
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த வித தகவல்களையும் சீனா தெரிவிக்கவில்லை.
சீனாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பிரான்ஸ், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் சீனா பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என அறிவித்து உள்ளன.
தங்கள் நாட்டில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளது. பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.
ஆனால் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனா மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை, எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க என்னனென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து ஆலோசித்தனர்.
இந்த நிலையில் கொரோனா குறித்து வெளிப்படையான தகவல்களை பகிர வேண்டும் என்றும் சீனாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கூடுதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு மீண்டும் சீனாவை வலியுறுத்தி உள்ளது.
- சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
- உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நியூயார்க்:
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, சீனாவில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
- முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் பலர் உள்ளனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 21.47 லட்சம் முதல் தவணை, 17.33 லட்சம் இரண்டாம் தவணை, 1.96 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி என இதுவரை மொத்தம்40.77 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 18 வயதை கடந்தவர்களுக்கு 22.44 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 12 முதல் 14 வயதை கடந்தவர்களுக்கு 1.19 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக ஆகஸ்டு 31-ந்தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களிடையே ஆர்வம் இல்லாததால் இலக்கு ஒரு லட்சம் நிர்ணயிக்கப்பட்ட போதும் 15 ஆயிரம் தடுப்பூசி செலுத்துவதே மாவட்ட சுகாதாரத்துறைக்கு சவாலாக இருந்தது.
செப்டம்பர் முதல் புதன்கிழமை மட்டும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3 மாதமாக சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திய போதும், மக்களிடையே ஆர்வம் இல்லாததால் பெயரளவுக்கே முகாம்கள் நடந்து வந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 21 முதல் டிசம்பர் 21 வரையிலான ஒரு மாதத்தில் 1,346 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர் 211 பேர், இரண்டாம் தவணை செலுத்தியவர் 758 பேர், பூஸ்டர் செலுத்தியவர் 308 பேர்.
இன்னமும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் பலர் உள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. ஆனால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி பூஸ்டருக்கான காலக்கெடு கடந்த பின்பும் செலுத்தி கொள்ளாமல் பலர் உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், உருமாறிய பி.எப்.,7 வகை வைரஸ் பரவல் உலக நாடுகளில் துவங்கியுள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
- கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்றார்.
- சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
- மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
புதுடெல்லி:
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் பரவி வரும் பி.எப்.7, பி.எப். 12 என்ற ஒமைக்ரான் புதிய வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.
இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளை மோடி அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்றத்தில் பேசும் போது, "வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.
பிற்பகல் 3 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த ஆலோசனயில் பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் இருக்கும் அவர் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
- மாவட்டம் முழுவதும் 82 சதவீதம் பேர் முதல்டோஸ் தடுப்பூசியும் 72 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
- தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் குவிந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 82 சதவீதம் பேர் முதல்டோஸ் தடுப்பூசியும் 72 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். குறிப்பிட்ட நாள் கழிந்த பிறகும் பலரும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருக்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் குவிந்தனர். மெகா தடுப்பூசி முகாமில் 1452 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1894 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும், 13 ஆயிரத்து 800 பேருக்கு 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 72 பேருக்கும் 12 வயது முதல் 14 வயது உட்பட்டவர்கள் 81 பேருக்கு என மொத்தம் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 17299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகரப் பகுதியை பொருத்தமட்டில் தோவாளை ஒன்றியத்தில் மட்டுமே குறைவான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் 1329 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 1436 பேரும் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் 1750 பேரும் குருந்தன் கோடு ஒன்றியத்தில் 1988 பேரும் கிள்ளியூர் ஒன்றியத்தில் 2123 பேரும் முன்சிறை ஒன்றியத்தில் 1794 பேரும் மேற்புறம் ஒன்றியத்தில் 1694 பேரும் திருவட்டார் ஒன்றியத்தில் 1727 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தக்கலை ஒன்றியத்தில் 1556 பேரும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 1502 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
- 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் இலவசமாக செலுத்தப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், 36வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 1,341 இடங்களில் நேற்று நடந்தது.மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி முதல், இரவு,7மணி வரை நடந்த முகாமில் 6,600 பூஸ்டர் உட்பட 22 ஆயிரத்து 135 தடுப்பூசி செலுத்தப்பட்டது.இம்மாதம் 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் இலவசமாக செலுத்தப்படும். அதன் பின் கட்டணம் செலுத்தி தான் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பால், நேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதில், மாவட்ட மக்கள் ஆர்வம் காட்டுவர் என சுகாதாரத்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று 6,600 பூஸ்டர் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உருமாறிய கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை
- தடுப்பூசி செலுத்த சுகாதார அதிகாரிகள் அறிவுரை
கோவை,
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங் களை அடைந்த தால் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவு றுத்தப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
18 முதல் 59 வயதுக்கு ட்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனையடுத்து தமிழகத்தில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது. ஜூலை 15 முதல் அடுத்த 75 நாள்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையிலில் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 29 லட்சத்து 12 ஆயிரத்து 580 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 26 லட்சத்து 70 ஆயிரத்து 84 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 107 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டனர்.
2-வது தவணை தடுப்பூசி கள் செலுத்திக்கொ ண்டவர்க ளுடன் ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் சொற்பமான நபர்களே செலுத்திக் கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.
- 20 லட்சத்து 627 ஆண்களுக்கும், 18 லட்சத்து 63 ஆயிரத்து 399 பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கடந்த ஆண்டு ஜனவரி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது முதல் கோவேக்ஷின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிய பின் பெண்கள் தடுப்பூசி மையத்துக்கு வர துவங்கினர்.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சத்து 627 ஆண்களுக்கும், 18 லட்சத்து 63 ஆயிரத்து 399 பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 60 வயதை கடந்த 4.99 லட்சம் பேருக்கும், அதிகபட்சமாக 18 வயதை கடந்த 22.55 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 1.74 லட்சம் பேர் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர் பலர் இன்னமும் இரண்டாவது தவணை செலுத்தாமல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளனர்.நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். வரும் முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்