என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யோகா பயிற்சி"
- பல்வீர் சிங் கையில் தேசிய கொடி ஏந்திய படி நடனம் ஆடினார்.
- முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்தவர் 73 வயதான பல்வீர் சிங் சப்ரா. இவர் குழு ஒன்றுடன் இணைந்து யோகா பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்தூரில் உள்ள பூட்டி கோட்டி என்ற பகுதியில் பல்வீர் சிங் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ளார்.
பயிற்சிக்கு இடையில், பல்வீர் சிங் தனது கையில் தேசிய கொடி ஏந்திய படி தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். நடனம் ஆடிக் கொண்டிருந்த போது, பல்வீர் சிங் மேடையிலேயே கீழே விழுந்தார். முதலில், அவர் நடனத்தின் அங்கமாக கீழே விழுந்திருப்பார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.
கீழே விழுந்த பல்வீர் சிங் சில நிமிடங்கள் ஆகியும் எழாமல் படுத்த நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குழுவினர் அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பல்வீர் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய பல்வீர் சிங் சப்ராவின் மகன் ஜக்ஜீத் சிங், "எனது தந்தை பல ஆண்டு காலமாக தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். அவர் இதுதவிர சமூக சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்," என்று தெரிவித்தார்.
உயிரிழந்த பல்வீர் சிங் சப்ராவின் கண்கள் மற்றும் சருமத்தை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
हर्ट अटैक से एक फौजी की मौत ?
— Saurabh kumar (@Saurabhk0096) May 31, 2024
लोग परफॉरमेंस समझ बजाते रहे ताली ?
Aek baar Comment me जय हिंद jarur likhe ?#Heartattack #Exitpoll pic.twitter.com/TI4ZCY6HwP
- முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும்.
- இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி.
யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகில் பலதரப்பட்ட வயதுடைவர்களுக்கு உலக அளவில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும். வேலைப்பளு காரணமாக உடல் சார்ந்த குறைபாடுகளில் மக்களுக்கு ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சினை இடுப்பு வலி. இடுப்பு வலி ஏற்படுவதால் மக்களின் அன்றாட பணிகள், உடற்பயிற்சி, மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் யோகாவை பற்றிய ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது பண்டைய இந்திய உடல் மற்றும் ஆன்மீக பயிற்சியான யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
யோகா பயிற்சி மேற்கொள்வதால் வலி நிவாரணம் அளிக்கும் என்றும், உடலின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்னணி எழுத்தாளரான, எல். சூசன் விலாண்ட் கூறியுள்ளார்.
நாள்பட்ட அல்லாத குறிப்பிட்ட இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே எல். சூசன் விலாண்ட் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் இடுப்பு வலி குறைய யோகா பற்றி தனித்தனியாக 12 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பார்த்தோம் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.
உடற்பயிற்சி முறை செய்பவர்களுடன் யோகா பயிற்சி மேற்கொள்பவரை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் யோகா பயன்படுத்திய நோயாளர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இடுப்பு வலியில் மிதமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளது.
அதேபோல் வலியும் சற்று குறைந்து காணப்படுகிறது என்று உறுதியாக ஆதாரங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
- கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், நவ.22-
நாகர்கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் கல்வி குழுமத் தின் சேர்மன் பொன் ராபர்ட் சிங் அறிவுறுத்த லின்படி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும், பொன்ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கும் யோகா பயிற்சி வகுப்பு கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் அருள்சன் டேனியல் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஐசக் சாஜன், பொன் ஜெஸ்லி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வாசு ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா சிறப்பு ரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக யோகா மாஸ்டர் கோமதி பங்கேற்று யோகா பயிற்சியின் விளக்க உரை யும், செய்முறையையும் மாணவர்களுக்கு வழங்கி னார்.
இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட கூடைப்பந் தாட்ட கழக செயலாளர் பி. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு
- அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நாகர்கோவில் :
இரணியல் சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயத்தில், மனித வாழ்க்கையில் யோகா பயிற்சியின் சிறப்பை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீரடி ஸ்ரீ சாய்பாபா அறக்கட்டளை சேர்மன் டாக்டர் கோலப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா அருளாசி வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் டாக்டர் மகேஷ், அன்பாலயத்தின் முன்னாள் தலைவர் கண்ணன் மற்றும் தலைவர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அண்ணாநகர் கோமதி ஆண்டியப்பன் யோகா சென்டர் நிறுவனர் டாக்டர் கோமதி யோகா பயிற்சியின் உடல் ஆரோக்கியத்தின் சிறப்புகளை விளக்கி பேசி, பயிற்சியளித்தார். அவருக்கு அன்பாலயத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீரடி ஸ்ரீ சாய்பாபா அன்பாலயம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்கள், நிர்வாக உறுப்பினர்கள், சாய் ஒயிட்ஷைன் கோல்டேஜ் ஏஜ் ஹோம் நிர்வாகிகள் மற்றும் சாய் பக்தர்கள் செய்திருந்தனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
- வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் பங்கேற்று டாக்டர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புறநோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில், யோகா பயிற்சி கையேடுகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் தலைமை தாங்கினார்.
- பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில் போலீசாருக்கு அது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் போக்குவரத்து போலீசார் 280 பேருக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
வேப்பேரி அழகப்பா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர்கள் கிறிஸ்டோபர், ரவி, சிவக்குமார் மற்றும் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
- யோகாவின் சிறப்புகள், அதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
- தொடர்ந்து பல்வேறு யோகாசன நிலைகளை செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். பதஞ்சலி யோகா சமிதி அமைப்பின் மாநில தலைவர் யோகாச்சார்யா பரஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் யோகாவின் சிறப்புகள், அதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து பல்வேறு யோகாசன நிலைகளை செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பதஞ்சலி யோகா சமிதியின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், யோகா ஆசிரியர் சுமித்ரா, பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
- யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார்.
சூலூர்,
கோவையில் போலீசாருக்கு கடும் பணிச்சுமை உள்ளது. இதனால் அவர்களுக்கு சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே கோவை மாவட்டத்தில் போலீசாருக்கு வாரம் ஒரு நாளில் யோகா பயிற்சி வழங்குவது என்று போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் முடிவு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அப்போது யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார். இதனை போலீசார் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தனர்.
இதுகுறித்து சூலூர் போலீசார் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நிலையில் எங்களுக்கு இந்த யோகா பயிற்சி மனதுடன் உடலையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது என்று தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் போலீசார் மத்தியில் யோகா பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் யோகா பயிற்சி அளிப்பது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- பயிற்சிகள் மூலம் பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
- சத்குரு வழங்கும் தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகள் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
கோவை:
கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்புகள் நடத்தப்பட்டன.
தொழில் உலகில் சக்தி வாய்ந்த பின்புலம் உடைய BNI அமைப்பின் கோவை ரிதம் சேப்டர்-ஐ சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளம் தொழிலதிபர்கள் ஈஷா யோகா மையம் வந்து யோக பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.
ஈஷா சார்பில் இரண்டு நாள் பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆதியோகி திவ்யதரிசனம், தியானலிங்கத்தில் நாத ஆராதனை, லிங்கபைரவியில் அபிஷேகம், நாட்டு மாடுகளை பராமரிக்கும் மாட்டுமனை, உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
BNI என்பது உலகளவில் 75 நாடுகளில் 300,000 உறுப்பினர்களை உடைய உலகின் முன்னணி வணிக பரிந்துரை அமைப்பு. BNI உறுப்பினர்கள் பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய BNI ஊழியர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கும், தங்களுடைய இலக்குகளையும் தாண்டி சாதிப்பதற்கும் தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்.
இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள் மூலம் அவர்களின் உடல் மன நலம், திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஐங்கரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அங்கு அய்யப்பன் அவர்கள் தனது அனுபவம் குறித்து பகிர்கையில், "எனக்கு எப்போதும் மன அழுத்தம், டென்ஷன் இருக்கும். இங்கு வந்து இன்று காலை யோகப்பயிற்சிகள் செய்த போது நிறைய மாற்றம் தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்துவந்தால் குடும்ப வாழ்க்கை, தொழில் என எல்லாவற்றிலும் திறம்பட இயங்க முடியும்" என்று பகிர்ந்துகொண்டார்.
பேபி வேர்ல்ட் உரிமையாளர் அமர் கூறுகையில், "இது மிகவும் வித்தியாசமான அனுபவம். இந்த பயிற்சிகளை தொடர்ந்தால், தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும் வித்தியாசமாகவும், சத்தானதாகவும் இருந்தது" என்றார்.
சத்குரு அவர்கள், அனைவரும் பின்பற்றும் வகையிலான எளிய யோகப்பயிற்சிகள் வழங்குவது மட்டுமல்லாமல், தொழிலதிபர்களும் திறன் மிகுந்தவர்களாக வளர அவர் வழங்கும் 'ஈஷா இன்சைட்' போன்ற தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஒரு வெற்றிகரமான தொழில் புரியத் தேவையான தகுதி குறித்து அவர் சொல்கையில், "எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிந்திப்பதை விடுத்து, நீங்கள் எதை உருவாக்க விரும்புகிறீர்கள் என்று பார்ப்பதாலும், நீங்கள் உருவாக்குவது உண்மையிலேயே பயனுள்ளது என்றால், பொருளாதார வளர்ச்சி என்பது அதுவாகவே நடக்கும்" என்கிறார்.
- மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும்
- குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து கடந்த மாதத்தில் 4 சிறுவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறி சென்றனர். பின்னர் அவர்களை போலீசார் மீட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் , ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று அரசினர் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்த வகையில் ராணிப்பேட்டையில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்றதை தொடர்ந்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.
குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பயிற்றுநர்கள் மையத்தில் 3 நபர்கள் உள்ளனர். குழந்தைகள் இல்லத்தில் கூடுதல் மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும், குழந்தைகளின் மனநலத்தை சீரமைக்க யோகா பயிற்சிகள், விளையாட்டு பயிற்சிகள், திறனை வெளிக்கொண்டுவரும் பயிற்சிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் யாரும் தப்பி போகாமல் மையங்களிலே சிறந்த முறையில் வளர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லங்கள். நல்வழிப்படுத்தும் இல்லங்களாக மாற்றிட குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
- மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
- காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி மற்றும் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றகூடிய அதிவிரைவு படை மற்றும் ஆயுதப்படை காவலர்களு க்குமாநகரகாவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்வாழ்க வளமுடன் அமைப்பின் சார்பில் யோகா பயிற்சி அளிக்க ப்பட்டது.
இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பணியாற்ற கூடிய காவ லர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட னர்.
- காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
- யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.
திருப்பூர் :
காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்க ளுக்கு சரியான உடற்பயிற்சி அல்லது மன வலிமையை ஊக்குப்படு த்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு இயக்குனர் சங்கர் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்ற க்கூடிய காவலர்களுக்கு மனவலிமையை ஊக்கப்படு த்தும் நோக்கத்துடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு காவல் நிலையம்,15 வேலம்பாளை யம் காவல் நிலையம் மற்றும் வடக்கு மகளிர் காவல் நிலைய காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்