என் மலர்
நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்கொலை"
- சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன் கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.
- இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே பூனாச்சி அடுத்துள்ள அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (38). விவசாயி. இவருக்கு நிஷாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சவுந்தர்ராஜன் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருந்து வந்தார். இதனால் தனக்குதானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சவுந்தர் ராஜன் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டு தனது மனைவியின் தங்கை நந்தினிக்கு போன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் பதறி போன நந்தினி தனது அக்காவிற்கு போன் செய்து மாமா விஷம் குடித்து விட்டதாக கூறுகிறார். என்னவென்று போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
உடனடியாக நிஷாந்தியும் அவரது மாமியாரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார்.
- மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு காளியம்மாள், பழனியம்மாள் (60) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் காளியம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பழனியம்மாளுக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். பழனியம்மாள் ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசனின் மனைவி இது குறித்து முருகேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
முருகேசன் வீட்டிற்கு விரைந்து வந்து உறவினர்கள் மூலம் பழனியம்மாளை கார் மூலம் கவுந்தப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு பழனியம்மாள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதில் மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி வைத்தீஸ்வரி. இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
கடந்த தீபாவளி பண்டிகை அன்று விஷம் அருந்திய வைத்தீஸ்வரியை அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரியின் உடலை உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து அரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தீஸ்வரிக்கும் குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமராஜனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், ஒருகட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராமராஜ் பீர் பாட்டிலில் விஷம் கலந்து, அதை குடித்துவிட்டு தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்,
பின்பு இருவரும் விஷத்தை அருந்தி உயிரை மாய்த்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். பீர் பாட்டிலில் விஷம் கலந்த மதுவை வைத்தீஸ்வரி மட்டும் அருந்த, ராமராஜ் அதை குடிக்காமல் குடித்ததை போல நாடகமாடியுள்ளார்.
இதன் காரணத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் அரசு மருத்துவமனை முன்பு இறந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கேடரை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). 4 வருடமாக இடுப்பு வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். எனினும் இடுப்பு வலி குணமாகவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்கும் போது வலது கணுக்காலில் மேல் காயம் ஏற்பட்டு வலியால் அவதி அடைந்து வந்தார். ஏற்கனவே இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாப்பாத்தியை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
- இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி செம்புளிசாம்பாளையம் நடராஜ் தோட்டத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (30). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.
சிவகுமாருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தீபா என்கிற தீபலட்சுமி என்ற மனைவியும், கிஷோர் ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு கள்ளிப்பட்டியில் வசித்துக் கொண்டு பாஸ்ட் புட் கடை நடத்தி வந்துள்ளார். இதில் போதிய வருமானம் இல்லாததால் சிவக்குமார் இத்தொழிலை கை விட்டுள்ளார்.
தற்பொழுது சிவக்குமார் தனது தந்தை வீட்டுக்கு பக்கத்தில் மனைவி குழந்தை–யுடன் இருந்து வசித்து வந்தார். சிவக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு–கிறது.
இந்நிலையில், சிவகுமாருக்கும் அவரது மனைவி தீபாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் சிவக்குமார் வெளியில் சென்று வருவதாக மனைவி தீபாவிடம் சொல்லி விட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தார் சிவக்குமாரை தேடியுள்ளனர். இந்த நிலையில் சிவக்குமாரின் நண்பர் கள்ளிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் சிவக்குமாரின் உறவினர் சென்னியப்பன் என்பவருக்கு போன் செய்து சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவக்குமாரின் குடும்பத்தார் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவக்குமார் இறந்து கிடந்ததை கண்டு உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் விசாரணைக்கு பயந்து விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரம் சமாதான நகரை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 21). இவர் உள்பட 4 பேர் மீது அந்தப் பகுதியில் அடிதடி சம்பந்தமாக புகார் வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக அருள் செல்வம் மற்றும் அவரது நண்பர்களை சத்துவாச்சாரி போலீசார் அழைத்தனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் பயந்துபோன அருள் செல்வம் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.
ஆபத்தான நிலையில் அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள் செல்வம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் ஒன்றை வா ங்கி தரச்சொல்லி நவீன் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
- அவர் மறுத்துவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவீன் விஷம் குடித்து விட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் நவீன் (வயது 19).
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த இவர் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வா ங்கி தரச்சொல்லி நவீன் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.ஆனால் அவர் மறுத்துவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவீன் விஷம் குடித்து விட்டார்.
அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் உயிரிழந்தார்.இது குறித்து சதீஷ்குமார் தந்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார்.
- சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 63). கூலித் தொழிலாளி.
இவரது மனைவி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சேகர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் குணமடைந்து கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு திரும்பினார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முருகேஷ் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- 10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிபாறையை சேர்ந்தவர் ஹென்டி. இவரது மகன் முருகேஷ் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 29-ந் தேதி முருகேஷ் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்து இருந்தார். 10-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டியது இருந்தது. இதனை கூலிவேலை செய்து வரும் தனது தாய் , தந்தையிடம் எப்படி கேட்பது என நினைத்தார்.
இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தங்களது மகனை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முருகேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முருகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
- அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தளபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்.இவரது மனைவி ஆர்த்தி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி இதே போல ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஆர்த்தி விஷம் குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தானநிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணமாகி 7 வருடங்களுக்குள் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஏ.எஸ்.பி.அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
- குடிப்பழக்கத்திற்கு ஆளானதை கணவர் கண்டித்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த அமராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குப்பன் (வயது 30). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் ஓச்சேரி அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் மகள் சுகந்தி (25) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (5), சூரியா (2) என நான்கு பிள்ளைகள் உள்ள னர். கணவன், மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சுகந்தி அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கணவர் மீண்டும் கண்டிதுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுகந்தி நேற்று முன்தினம் மதுவில் கொக்கு மருந்து (விஷம்) கலந்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது தாய் மல்லிகா அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆனந்தன் கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆனந்தன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். வெளியூரிலிருந்து எப்போதாவது வீட்டுக்கு வரும் ஆனந்தன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.300 கடன் பெற்று கொண்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் ஆனந்தன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அடுத்த கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆனந்தன் மனைவி கீதாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.