என் மலர்
நீங்கள் தேடியது "புத்தக திருவிழா"
- விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
- சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.
இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.
- விருதுநகர் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் முதலாவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். பொருட்காட்சி மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இன்று (24-ந் தேதி) முதல் ரூ.200-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தினசரி குலுக்கல் முறையில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.6 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.4 ஆயிரம், அன்றைய இரவே சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- புதிய பஸ் நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது.
- ரூ.10 முதல் 1000-க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டு உள்ளன. இதில் ரூ.10 முதல் 1000-க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவை தினமும் ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள். பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமான புத்தங்களை வாங்கி செல்கின்றனர். இன்றுடன் விழா நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் புத்தகத் திருவிழா வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- புத்தக திருவிழாவில் 80 ஆயிரம் புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.
- சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கடந்த 23-ந் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி நேற்று வரை நடைபெற்றது.
மொத்தம் 104 அரங்குகள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. புத்தக திருவிழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
1 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் புத்தக திருவிழாவினை பார்வையிட்டு உள்ளனர். மேலும் 80 ஆயிரம் புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றியக் குழுத்தலைவர். மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர், சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய குழுத் துணைத் தலைவர் நித்தியா சுகுமார் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் கலெக்டர் பங்கேற்று தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 'முகவை சங்கமம்" என்னும் 5-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் புத்தகத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவு வருகை தந்து புத்தகங்கள் வாங்கிச் செல்லும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரங்குகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் தங்கள் துறையின் மூலம் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் வழங்க வுள்ள நலத் திட்டங்களின் விவரம் குறித்து ஒவ்வொரு நாளும் வருகை தரும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து அரசின் திட்டங்களை பெறுவதற்கு துறை அலுவலர்கள் உறு துணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, புதியன விரும்பு தலைப்பில் மோகனசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
- அகப்பொறியின் திறவுகோல் என்ற தலைப்பில் நந்தலாலா, சிறுகதை செல்வம் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் 19 வது திருப்பூர் புத்தக திருவிழா -2023 காங்கயம் ரோடு வேலன் ஓட்டல் வளாகத்தில் வருகிற 27-ந்தேதி முதல் பிப்ரவரி 5ந்தேதி வரை நடக்கிறது. இதனை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் திறந்து வைக்கின்றனர். பொது நூலக இயக்குநர் இளம்பகவத், கலெக்டர் வினீத், எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், கமிஷனர் கிராந்திகுமார், மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
தினமும் இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும் கலை நிகழ்ச்சியில் 28ந் தேதி இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா? என்ற தலைப்பில் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
29-ந்தேதி சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற தலைப்பில், எம்.பி., வெங்கடேசன், சுபஸ்ரீ தணிகாசலம் தமிழ் வளர்த்த திரை இசை நிகழ்ச்சி, 30ந் தேதி புத்தகம் எனும் போதிமரம் தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசுகின்றனர்.பிப்ரவரி 1-ந் தேதி எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன், 2ந் தேதி அகப்பொறியின் திறவுகோல் என்ற தலைப்பில் நந்தலாலா, சிறுகதை செல்வம் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகின்றனர்.
3-ந் தேதி மரபு வழிப்பாதை தலைப்பில் டாக்டர் சிவராமன், 4ந்தேதி கீழடி சொல்வதென்ன? என்ற தலைப்பில் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, புதியன விரும்பு தலைப்பில் மோகனசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் வேலன் ஓட்டல் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடக்கிறது.விழாவில் திறனாய்வுப் போட்டியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் விழா நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 8-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.
- புத்தக திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
- ராமநாதபுரத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.
இதில் 100 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நாள் தோறும் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார முறையில் உணவகம், குடி நீர், கழிப்பறை, பார்க்கிங் வசதிகள், உள்ளே வெளியே செல்வதற்கு தனி வழிகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உதவி செயற் பொறியாளர் குருதி வேல், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.
- மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வருகை புரிந்ததால் கூட்டம் அலைமோதியது.
அரூர்,
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை சார்பில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.
புத்தக திருவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்அனிதா கலந்துக் கொண்டு, முதல் புத்தக விற்பணையை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் ,அரூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வாசிப்பது குறித்த பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
புத்தக திருவிழாவில் அரசியல் சமூக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான இடம் பெற்ற புத்தகங்களுக்கு பள்ளி மாணவ மாணவிர்கள், இளைஞர்கள் முன்னுரிமை அளித்து ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
மூன்றாம் ஆண்டு புத்தக திருவிழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வருகை புரிந்ததால் கூட்டம் அலைமோதியது.
- ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது.
- 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.
திருப்பூர் :
திருப்பூா் புத்தகத் திருவிழாவை ஒரு லட்சம் போ் பாா்வையிட்டதுடன், ரூ.2 கோடிக்கு நூல்கள் விற்பனை நடைபெற்று ள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்ப ட்டிருந்த 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.
இதன் மூலமாக அரசின் திட்டங்கள், வங்கி, கல்வித் துறை சேவை, மருத்துவத் துறை, மகளிா் திட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
புத்தகத் திருவிழாவை திருப்பூா் மட்டுமின்றி கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளதில், 40 ஆயிரம் மாணவ, மாணவி களும் அடங்குவா். இதன் மூலம் சுமாா் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."
- ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நூலகத்தின் சார்பில் 5-வது ராமநாதபுரம் புத்தகத் திருவிழா பற்றி மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகலை உயிரியல் ஆசிரியர் சங்கர கோமதி புத்தகத் திருவிழா நடத்தப் படுவதன் முக்கியத் துவம், இளம் பருவத்தி லேயே புத்தகம் வாசிப்பதின் அவசி யம் பற்றி எடுத்துரைத்தார். தமிழாசிரியர் சிவகாமி முன்னிலை வகித்தார்.
நூலகப் பொறுப்பாசிரியர் வளர்மதி புத்தகங்கள் படிப்பதால் ஏற்படும் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி பற்றிக் கூறினார். அனைவரும் வாருங்கள் புத்தகத் திருவிழாவிற்கு, புத்தகம் படிப்போம் புது உலகு படைப்போம், நம்ம ராம்நாடு புத்தகத் திருவிழா, புத்தகங்கள் அறிவின் திறவுகோல்கள் ஆகிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திக்கொண்டு அனை வரும் புத்தகத் திருவிழா வில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- கலெக்டர் அம்ரித் தலைமையில் புத்தக திருவிழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது
- கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா குறித்து, அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தகத் திருவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இப்புத்தக திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும். கலை நிகழ்ச்சிக்கான கலையரங்கம், உணவரங்கம் போன்ற சிறப்பம்சங்களுடன் பல்வேறு சிந்தனையாளர்களின் சிந்தனை நிகழ்ச்சிகளும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்புத்தக திருவிழா நடைபெறும் இடத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கை, விழா அழைப்பிதழ்கள், புத்தக அரங்குகள் தயார் நிலையில் வைத்தல், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தல், உணவகம், தற்காலிக ஆவின் பாலகம் ஏற்பாடு, பழங்குடியினர்களின் பொருட்கள் விற்பனை அரங்கம், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைத்தல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை தினந்தோறும் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை பகவத் சிங், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), பூஷணகுமார் (குன்னூர்), ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.