என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானம்"

    • மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது.
    • சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள்

    திருமணத்தின் போது மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்யும் வேடிக்கையான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வேகமாக பரவும் வீடியோ ஒன்றில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதில், மணமக்கள் மேடையில் இருப்பதையும், விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதையும் காண முடிகிறது. அப்போது மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது. பின்னர் அவர்கள் ஒரு குளிர்பானத்தில் மது பானத்தை கலக்கிறார்கள்.

    சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள். அதை குடித்த மணமகன் சிரிக்க தொடங்குகிறார். இதை பார்த்த மணமகளும் விஷயத்தை புரிந்து கொண்டு சிரிப்பது போன்று காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்டுகளை பெற்று வருகிறது. 26 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. இப்படிப்பட்ட நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு பயனரும், மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வேறு லெவல் என ஒருவரும் பதிவிட்டுள்ளனர்.

    • தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது.
    • 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடி பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சில நாட்களுக்கு முன்னர் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மதுபாட்டிலுக்குள் பாசி மிதப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

    மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்க மடைந்து வீழ்ந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடி பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால் இவற்றை பற்றி கவலை இல்லாத தி.மு.க. மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சி காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க ஏழை- எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாத தி.மு.க. அரசு தற்போது அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப்போகிறீர்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
    • மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் பொது நலனுக்கு எதிரானதும் இல்லை என, தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.

    திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் சார்பில் மதுவிலக்கு துறை ஆணையர் ரத்னா பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மதுபான விற்பனை விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒன்று அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்.

    கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது என்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த உரிமங்கள் வழங்கப்படும்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வருவாய் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. மேலும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதனால், அரசின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை, பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அது வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

    • 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கணபதிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விற்பனை செய்த பாக்கியநாதன், பெரிய ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம்.
    • சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவு.

    செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.

    இதையடுத்து, டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    காவல் உதவி ஆய்வாளர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    • மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
    • ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் சமீபகாலமாக மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்ற நிலை வந்துவிட்டதால் மது விற்பனையும் அதிகமாகி வருகிறது. மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

    மதுபான வகைகளை ஒயின், ஜின் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது விற்பனையில் விஸ்கி முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் மது விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விஸ்கி விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் 85 சதவீதம் 10 உள்நாட்டு பிராண்டுகள் பிடித்துள்ளன. விஸ்கியின் விற்பனை சதவீத 66 ஆக அதிகரித்து உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி 3.3 சதவீதம் விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்கி சந்தையில் 96 சதவீத இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் மது வணிகம் மீண்டும் முன்னேற்ற பாதையில் உள்ளது. வோட்கா ரகம் விற்பனையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொருத்தவரை ரூ.53 பில்லியன் மதுபானங்கள் விற்பனை ஆவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன. கடந்த ஆண்டு 40 சதவீதம் இது விற்பனை ஆகி உள்ளது.

    மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கூட இதன் எண்ணிக்கை விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் ஐந்தில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒயின்களே விற்பனை ஆகின்றன. இதில் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட ஒயின்களே அதிகம். தடையற்ற வர்த்தகம் காரணமாக இவை அதிகமாக இறக்குமதி ஆவதால் விற்பனையும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கிகளும் விற்ப னையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்க, ஜப்பானிய, கன்னட விஸ்கிகள் இருந்தா லும் இந்திய தயாரிப்பை மதுப்பிரியர்கள் விரும்புவதாக இந்திய மதுபான விற்பனை சங்கத்தின் தலைமை அதிகாரி நிதா கபூர் தெரிவித்தார். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது.
    • அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தாபா கடைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர் கந்தசாமி( 50) என்பவரை கைது செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் கோ. பவழங்குடி, சந்தனகுப்பம் பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியை சேர்ந்த செல்வராசு மனைவி பன்னீர்செல்வி (வயது 55) என்பவர், தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் பன்னீர்செல்வியை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் குட்டை பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார். அப்போது அவர், தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது இறப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.      

    • மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (வயது 62). கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது குடி போதையில் மது பானம் என நினைத்து ரப்பர் பால் உறைய வைக்கும் ஆசிட்டை குடித்து விட்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். அவரை அவர் மகன் சுஜின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்பு தாசன் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
    • அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது. அதில் உள்ள விலைக்கு தான் அனைத்து மதுபாட்டில்கள், பீர் வகைகள் விற்க வேண்டும், கூடுதலாக ரூ.10 வைத்து விற்றால் விற்பனையாளர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் விசாகன் உத்தரவிட்டு இருந்தார்.

    சமீபத்தில் காணொலி காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் கூட அதை உறுதிப்படுத்தி பேசியுள்ளார். கூடுதல் விலைக்கு விற்கப்படும் விற்பனையாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார், மேலும் விற்பனையை தடுக்க தவறிய சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கடை வேலை நேரத்தில் பணியில் இல்லாத மேற்பார்வையாளர்கள் விற்பனை குறைவான கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள 73 கடைகளில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 7 மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. டாஸ்மாக் பொது மேலாளர்கள் நடத்திய சோதனையில் இது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மீது நிரந்தர பணி நீக்க நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

    இதுவரையில் அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. இடமாற்றம், சஸ்பெண்டு போன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த முறை டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கும் என்பதால் கலக்கத்தில் உள்ளார்.

    மத்திய சென்னையை தொடர்ந்து வடசென்னையில் உள்ள 81 கடைகள், தென் சென்னையில் உள்ள 89 கடை பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மதுபிரியர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலித்தால் கண்டிப்பான நடவடிக்கை என்பது அமைச்சர் முத்துசாமி கட்டுப்பாட்டில் இத்துறை வந்த பிறகு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றின் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுப்பது என்பது இதுவே முதல் முறையாகும். அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையில் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.

    ×