என் மலர்
நீங்கள் தேடியது "slug 235455"
- வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் பெற்றுள்ளார்.
- இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 31). கடலூர் பெரியகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கிருஷ்ணமூர்த்திடம் வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் என மொத்தம் 17 1/2 லட்சம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். ஆனால்இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வெங்கடேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
- அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தனர். தற்போது காவிரி உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் ஏரி தனது முழு கொள்ளளவான 156 ஏக்கர் முழுவதும் நிரம்பியது.
ஏரி நிரம்பியதால் உபரி நீர் நரிக்குறவர்களின் குடியிருப்பு பகுதிகளை முழுவதும் சூழ்ந்தது. இதனால் அவர்களை அனைவரும் வெளியேற் றப்பட்டு தற்போது ஆரூர்பட்டி ஊராட்சி, வெள்ளக் கல்பட்டி பகுதியில் அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் வந்து பார்வையிட்டார்.
வீட்டுமனை ஒதுக்கப்பட்ட இடங்களை முழுவதும் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நரிக்குறவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகள் பயில அங்கன்வாடி மையம், அதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்கு 25 அடி அகல கான்க்ரீட் சாலை, குடிநீர் தொட்டி அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது ஓமலூர் தாசில்தார் வள்ள முனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், வி.ஏ.ஓ. கலைச்செல்வி, தாரமங்கலம் ஒன்றிய ஆணையாளர்கள் கருணாநிதி, அனுராதா, ஆரூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் காங்கேயன், நரிக்குறவர்கள் குடும்பத்தலைவர் பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.
- தனிமனைகளை வரன்முறைப்படுத்துதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் உள்ள கிராம ஊராட்சிகளான சித்தம்பலம், அனுப்பட்டி,கே.கிருஷ்ணாபுரம், வடுகபாளையம்புதூர், பணிக்கம்பட்டி ஊராட்சிகளில் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20ந்தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்துதல் சிறப்பு முகாம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 50 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஊராட்சி செயலாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
- ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 43).இவரது சகோதரர் வெங்கடாசலம்(40). சகோதரர்கள் இணைந்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
தற்போது வீடு கட்டுவதற்காக, இடத்தை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். நிலத்தை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இதுதான் உங்களது வீட்டுமனை இடம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- 120 குடும்பங்கள் இருக்க இடம் இல்லாமல் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் தங்கி குடியிருந்து வருகின்றனர்.
- இதுவரை எந்த அதிகாரிகளும் இவர்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை
காரமடை
மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பா–ளையம் ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் வேடர்காலனி உள்ளது.
இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சுமார் 120 குடும்பங்கள் இருக்க இடம் இல்லாமல் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் தங்கி குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 4.50 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இப்பகுதி மக்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவல கத்தில் மனுக்கள் கொடுக்க ப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் இவர்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வேடர்காலனி கிராம மக்கள் 80க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு துணை வட்டாட்சியர் தெய்வபாண்டியம்மாள் மற்றும் காவல் துறையினர் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நீலகிரி மாவட்டத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் இங்கு உள்ள அரசு அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் இவர்களின் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் எடுத்து கூறி தீர்வு காணுவதாக கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சிங்கம்புணரியில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
- வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
ங்கம்புணரி, ஜூன். 22-
சிவகங்கை மாவட்டம் வடசிங்கம்புணரி விழுப்புனிக்களம், சிலோன் காலனி பகுதிகளில் வசிக்கும் 26 பேர் 2021 ஜூலை மாதம் ஆன்லைன் மூலம் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்தனர். அது சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் சர்வதேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் பெரியய்யா என்ற ராஜா தலைமையில் சிங்கம்புணரி தாசில்தாரிடம் மீண்டும் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் துஸ்யந்தன், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், ஒன்றிய செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.