search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுன்"

    • தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).

    துணிக்கடை

    இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
    • வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).

    துணை வட்டார

    வளர்ச்சி அதிகாரி

    இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.

    பீரோ திறந்து கிடந்தது

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.

    28 பவுன் நகை

    அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 தனிப்படைகள்

    நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கண்காணிப்பு காமிராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
    • தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிருஷ் ணன் கோவில் முதலிமார் தெருவை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகு முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகேஷ் கார்த்திக் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு சென்னைக்கு சென்றார். இதையடுத்து மனைவி பார்வதியை அருகு விளையில் உள்ள அவரது தந்தை வீட்டில் விட்டு சென்றார். நேற்று காலை சென்னைக்கு சென்ற மகேஷ் கார்த்திக் ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்திருந்தது. பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கிருந்த 25 பவுன் நகை கள் திருடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மகேஷ் கார்த்திக் வடசேரி போலீ சுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். கைரேகை நிபு ணர்களும் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரே கைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கொள் ளையன் ஒருவர் வீட்டின் மாடியில் ஏறி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ள னர். மகேஷ் கார்த்திக் வெளியூர் சென்று இருப் பதை அறிந்தே மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடு பட்டு உள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். மேலும் சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் கைவரிசை
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஹெலன் மேரி பிரேமா. (வயது40.) இவர் தக்கலை பகுதியில் ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 8 மணிக்கு தக்கலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது 2 வாலிபர்கள் இவரை பின்தொடந்து வந்து கொண்டிருந்தனர்.இதை கண்ட பிரேமா தனது வாகனத்தை வேகமாக கொண்டு சென்றார். உடனே அந்த வாலிபர்கள் விரட்டி சென்று குழிக்கோடு பகுதியில் மடக்கினர். அதிர்ச்சி அடைந்த பிரேமா சத்தம் போடவே மர்ம நபர்கள் பிரேமாவின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். பலத்த போராட்டத்தில் செயினை பறிக்க முடியாததால் பிரேமாவின் கையில் கிடந்த 2 பவுன் கை செயினை பறித்துவிட்டு பிரேமாவை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது சம்மந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் பிரேமா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். செயின் பறித்த கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

    • நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
    • சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வியாபார விசயமாக வெளியே சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து காசிராஜன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகி றார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள காமிரா பதிவையும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • வீட்டுக்கு பொருட்கள் வாங்க தனது மகளுடன் மொபட்டில் சேரமங்கலம் சென்றார்.
    • ஜெனிதா தாலி செயினை இறுக்கப்பிடித்து கொண்டு சப்தமிட்டார்.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு அருகே சேரமங்கலம் கண்ணிவிளையை சேர்ந்த வர் ஜெயசிங் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெனிதா (45). நேற்று மதியம் இவர் வீட்டுக்கு பொருட்கள் வாங்க தனது மகளுடன் மொபட்டில் சேரமங்கலம் சென்றார். பின்னால் மகள் அமர்ந்திருந்தாள். பொருட்கள் வாங்கி விட்டு வீட்டருகே செல்லும்போது பிள்ளையார்கோயில் - திங்கள்நகர் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்ம நபர்கள் திடீரென ஜெனிதாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க தாலியை பறித்தனர். உடனே சுதாரித்து க்கொண்ட ஜெனிதா தாலி செயினை இறுக்கப்பிடித்து கொண்டு சப்தமிட்டார். மர்ம நபர்களின் கையில் செயின் சிக்காததால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் ஜெனிதா, மகள் இருவரும் கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் அதிர்ஷ்ட வசமாக இருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து ஜெனிதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்க ப்பட்டிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளை முகமூடியால் மறைத்தபடி கொள்ளையன்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்த சி.எஸ்.ஐ காம்ப்ளக்ஸில் முன்னாள் வர்த்தக சங்க செயலாளர் ராஜா செல்வின் ராஜ் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இந்தக் கடையின் முன்பக்க சட்டரை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.கடையில் இருந்த 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்க ப்பட்டிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டார்.கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகைக்கடைக்குள் கொள்ளையன் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

    தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளை முகமூடியால் மறைத்தபடி கொள்ளையன் கடைக்கு வருகிறான். கடையின் முன்பக்க ஷட்டரில் இருந்த பூட்டை உடைத்து அவன் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அந்த உருவத்தை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 5 தனிப் படைகள் அமைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு முன்பு நடந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுடன் தற்போதைய உருவம் ஒத்து போகிறதா அல்லது புதிய கொள்ளையனா? என அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடு பட்டு வருகின்றனர்.

    சம்பவம் நடந்த கடை யில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை திருட்டு சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்கள் நடந்து வருவ தால் முக்கிய வீதிகள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வடக்குத்தெரு, மார்க்கெட் சாலை போன்ற பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கொள்ளையனின் கைரேகை சிக்கியது
    • 2 தனிப்படைகள் அமைப்பு

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் வள்ளிவேல் (வயது 52).

    இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட குடும்ப நல செயலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி (45) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று காலையில் வள்ளிவேல் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மனைவியும், பிள்ளைகளும் வீட்டை பூட்டிவிட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    பின்னர் வள்ளி வேல் மதியம் 2 மணிக்கு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தபோது வீட்டில் பின்ப க்கம் சமையல் அறை யில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. பீரோவில் இருந்த 11 பவுன் எடை கொண்ட 2 செயின்களை யாரோ கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    வீட்டில் ஆள் இல்லா ததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றுள்ளனர். வள்ளிவேல் மற்றும் செல்வி தங்க நகைகளை சிறிய சிறிய பெட்டிகளில் அடைத்து பீரோவில் துணிக்கு இடையில் பல இடங்களில் வைத்துள்ளனர்.

    இதனால் மறைவான இடங்களில் இருந்த 29 பவுன் நகைகள் திருடர் கள் கண்ணில் சிக்காமல் தப்பியது. மேலும் இது குறித்து வள்ளிவேல் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பி ரண்டு ராஜா மற்றும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபு ணர்களும் வரவழைக் கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அதில் கொள்ளையனின் ஒரு கைரேகை சிக்கி உள்ளது.

    அந்த கைரேகையை வைத்து இதற்கு முன்னால் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களின் கைரே கையுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

    பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×