search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊழியர் வீட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை
    X

    அரசு ஊழியர் வீட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை

    • கொள்ளையனின் கைரேகை சிக்கியது
    • 2 தனிப்படைகள் அமைப்பு

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் வள்ளிவேல் (வயது 52).

    இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட குடும்ப நல செயலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி (45) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று காலையில் வள்ளிவேல் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மனைவியும், பிள்ளைகளும் வீட்டை பூட்டிவிட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    பின்னர் வள்ளி வேல் மதியம் 2 மணிக்கு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தபோது வீட்டில் பின்ப க்கம் சமையல் அறை யில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. பீரோவில் இருந்த 11 பவுன் எடை கொண்ட 2 செயின்களை யாரோ கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    வீட்டில் ஆள் இல்லா ததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றுள்ளனர். வள்ளிவேல் மற்றும் செல்வி தங்க நகைகளை சிறிய சிறிய பெட்டிகளில் அடைத்து பீரோவில் துணிக்கு இடையில் பல இடங்களில் வைத்துள்ளனர்.

    இதனால் மறைவான இடங்களில் இருந்த 29 பவுன் நகைகள் திருடர் கள் கண்ணில் சிக்காமல் தப்பியது. மேலும் இது குறித்து வள்ளிவேல் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பி ரண்டு ராஜா மற்றும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபு ணர்களும் வரவழைக் கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அதில் கொள்ளையனின் ஒரு கைரேகை சிக்கி உள்ளது.

    அந்த கைரேகையை வைத்து இதற்கு முன்னால் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களின் கைரே கையுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×