என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "8 பேர் கைது"
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்தல், சூதாட்டத்தில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர் சிப்காட், சூளகிரி, கந்திகுப்பம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.540 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல தடை செய்யப்ட்ட குட்கா விற்பனை செய்த வேப்பனப்பள்ளி, பர்கூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக ஓசூர், சூளகிரி, பர்கூர், நாகரசம்பட்டியை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.
- பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து இரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு அருகே காவாப்பட்டி புளியமரத்தடியில் சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் வேளாவல்லியை சேர்ந்த தமிழரசன் (வயது 23), மாதேஷ் (45) காவாப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (23), சிவா (28) என்பதும் தெரியவந்தது.
இதே போன்று பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே சூதாடிய முத்து கவுண்டர் தெருவை சேர்ந்த சத்தியராஜ் (28), வேல்முருகன் (45) தீர்த்தகிரி நகரை சேர்ந்த சரவணன் (38), சுகுமார் (40) என்பதும் தெரியவந்தது.
உடனே போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த சீட்டு கட்டுக்களையும். 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம். விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தியூர் போலீசார் சம்மந்தப்பட்ட இடத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்மன்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன்(50), அதே பகுதியை சேர்ந்த தங்கவேல்(50), கணேசன்(33), செல்வக்குமார் (49), சீரங்கன் (50), மாரியப்பன் (36), சம்பத் (32), பழனிசாமி (47) ஆகிய 8 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- தீவிர விசாரணை நடத்தி கண்டறிந்த போலீசார் அவர்களில் 8 பேரை கைது செய்தனர்.
- தெய்வம் ஆகியோரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் கைதாகினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைபொருட்களை விற்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி கண்டறிந்த போலீசார் அவர்களில் 8 பேரை கைது செய்தனர்.
கஞ்சா விற்றதாக காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாந்தபுரம் இ.பி.எஸ். நகரை சேர்ந்த சலாவுதீன் (வயது 48), பர்கூர் அருகேயுள்ள ஏ.நாகமங்கலம்பகுதியை சேர்ந்த வேணுகோபால் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல பர்கூர் அருகே ஜெகதேவி ரோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார், போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தெய்வம் ஆகியோரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் கைதாகினர்.
கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பெத்தனபள்ளியை சேர்ந்த முருகன் என்பவரை கிருஷ்ணகிரி போலீசாரும், திம்பன அள்ளி பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரை ஓசூர் போலீசாரும், பேரிகை ஜவுக்கு தெருவை சேர்ந்த இத்ரீஸ், அம்ரீஷ் ஆகிய 2 பேரையும் பேரிகை போலீசாரும் கைது செய்தனர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் நடைபெற்ற இசை நாற்காலி போட்டியை ராஜியின் மகன் பிரவீன்ராஜ் பார்க்க சென்றார்.
- கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 43). பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் நடைபெற்ற இசை நாற்காலி போட்டியை ராஜியின் மகன் பிரவீன்ராஜ் பார்க்க வந்தார் அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜா மகன் கஜேந்திரன் (19) கூச்சலிட்டபடி கொண்டு பிரவீன்ராஜ் மீது விழுந்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட ராஜியை, கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்
. இது குறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் அரசம் பட்டை சேர்ந்த கஜேந்திரன், ரமணா (18), ராஜா மனைவி அன்பு (38) ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர் இதே போல் விளையாட்டு போட்டியை பார்க்க வந்த கஜேந்தி ரனை பிரவீன்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கஜேந்திரன் கொடுத்த புகாாின் பேரில் ராஜி, இவரது மனைவி காந்தி (38), மகன் பிரவீன்ராஜ் மற்றும் சரவணராஜ், விக்னேஷ் (22), முருக வேல் (34), முருவாயி (40) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜி, விக்னேஷ், முருகவேல், முரு வாயி, காந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி அடுத்த கெட்டவாடி கிரிஜம்மா தோப்பு அருகே உள்ள சமுதாய கூட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த விஷ்கண்டா (32), சதீஷ் (23), சிவராஜ் (28), ராஜேஷ் (38), கோபி (57), கணேசா (33), மகேஷ் (31), மாதேவப்பா (63) ஆகியோர் என தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
- சிவகாசி அருகே பட்டாசு-திரி வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் அருகே உள்ள பழைய வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). எளிதில் தீப்பற்றக்கூடிய திரிகளை வைத்திருந்ததாக திருத்தங்கல் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி நாராயணபுரம் ரோட்டில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவை வேலப்பர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (39) என்பவர் அனுமதியின்றி 10 பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்தனர்.
சிவகாசி எம்.மேட்டுப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு குழாய்களை வைத்திருந்ததாக வீரபாகு, ராஜகோபால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,200 பட்டாசு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் பட்டாசு திரி, பட்டாசுகளை வைத்திருந்ததாக கீழகோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இளையராஜா, கங்காகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, திருத்தங்கல்லைச் சேர்ந்த பவுன்தாய், முனியம்மாள் ஆகிய 4 பேரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.
- பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மரப்பாலம், பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியது.
விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி (54), சாகுல் ஹமீது (54), ஆனந்தகுமார் (62), மற்ெறாரு சாகுல் ஹமீது (45), பாபு (59), மாரியப்பன் (42), மைதீன் (44), முஸ்தபா (45) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டும், ரூ. 4,200 பணமும் பறிமுதல் செய்தனர்.
- கொடைக்கானலில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 8 பேர் கைது செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்
- யானை தந்தம் விற்பனை, 8 பேர் கைது
கொடைக்கானல்:
கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்த பாலமலை பகுதியில் யானை தந்தங்கள் விற்பதாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாலமலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 9 பேர் கொண்ட கும்பல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (40), கொடைக்கானல் பெருமாள் மலையைச் சேர்ந்த ஜோசப் சேவியர் (40), மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (40), பிரகாஷ் (24), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (47), திருச்சூரைச் சேர்ந்த சிபின் தாமஸ் (26), பழனி பாலாறு டேம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (56), காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகிய 8 பேர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 2 யானைத்தந்தங்கள், 1 நாட்டு துப்பாக்கி மற்றும் இவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் சுற்றி வளைத்து யானை தந்தங்களை விற்க முயன்ற கும்பலை கைது செய்த போது, கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் தப்பி ஓடி விட்டார்.
அவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து யானை தந்தங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? என்று விசாரித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் தந்தங்கள் விற்பனை செய்யும் முயற்சி இது முதல் முறையா, அல்லது தொடர்ந்து நடைபெற்று வருகிறதா? வேறு ஏதேனும் வன விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் இவர்களிடம் உள்ளதா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- திண்டுக்கல் தாலுகா பகுதியில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் சிலர் இருந்தனர்.
- பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் தாலுகா பகுதியில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் சிலர் இருந்தனர்.
அவர்களை உடனடியாக கைது செய்ய நீதிபதி பிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் உதவிபோலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் அறிவுறுத்தலின்படி தாலுகா இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பூபாலகார்த்திக்(25), மாரி(35), அசோக்(25), சரவணன்(40), கண்ணன்(38), குணசேகரன்(49), வடிவேல்(60), ராஜராஜன்(30) ஆகியோர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பது தெரியவந்தது.
அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் சூதாட்டம் நடத்திய கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் ஒரு கடைக்கு பின் புறம் உள்ள மரத்தடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற போது அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரோஜ்லஷ்கர் (35), ஜாகிர் நௌரேன்காஜி (22), அஜ்கர் முல்லா (22), சகஜீஸ் மொல்லா(21), கார்தின் மொல்யா(30), சத்தம்பியாதா(30), அஜிகல்சர்தார் (22), மஜ்னா ஆழிபாஸ்க் (31) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்