என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அழுகிய நிலை"
- நடராஜ் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
- போலீசார் நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் பேபி தனது கணவரை பிரிந்து தேவாலாவில் உள்ள பெற்றோர் வீட்டில் மகளுடன் வசித்து வந்தார். நடராஜ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் நடராஜ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
பின்னர் போலீசார் நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் நடராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரேசன் கடை ஊழியர் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார்.
- அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
சேலம்:
சேலம் முகமது புறா ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாஜில் பிகர் அலி (வயது 65). ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவர் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. நேற்று இரவு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அறிந்து அந்த பகுதியினர் சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விஷம் குடித்த நிலையில் அவர் இறந்து கிடந்தார்.
மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது .
அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு, பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அருப்புக்கோட்டை அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.
- அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் நான்கு வழி சாலை பகுதியில் உள்ள கொண்டுசெட்டி ஊரணியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அந்தப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிணமாக கிடந்தவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நாகர்கோவில்:
பணகுடி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சென்றவர்கள் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர்.
இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர்.
அப்போது ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது.
எனவே அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி புது பஸ்நிலையம் எதிரே தனியார் காம்ப்ளக்ஸ் பின்புறம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பவானி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உடன் அலுவலரை அழைத்து கொண்டு சம்பவ இடம் சென்று பார்த்த போது புளு, பச்சை, கலரில் வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுடன் ஆண் பிணம் இருந்தது.
மேலும் பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது குறித்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்