search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்நிலை"

    • வரி நிலுவைத் தொகை பாக்கி காரணமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
    • நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும்.

    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு கடந்த 9ம் தேதி அன்று வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

    நீதிமன்ற உத்தரவின்பேரில் கிண்டி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர். நிலுவைத் தொகை பாக்கி காரணமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தவில்லை என புகார் எழுந்ததையடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்நிலையில், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

    பசுமைப் பூங்காவாக மாற்றத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது.
    • குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டம் உடைலூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது. இந்த குளங்களில் குளங்களில் மீன் பிடிப்பதற்கான குத்தகை ஏலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்தினார். ஆனால் விதிகளை பின்பற்றாமல் விடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோவில்களில் இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்க ஏலம் விடப்படுகிறது. ஆனால், இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்காமல் வணிக நோக்கில் பல்வேறு வேதியியல் பொருட்களை கலந்து மீன்களை பெருக்குகின்றனர்.

    மேலும், அப்பகுதி மக்கள் குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே நீரின் தரம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குளத்து நீரையே குடிநீராக பயண்படுத்தினர். தற்போது, குளத்து நீரை கால் நடைகள் கூட குடிக்க முடியவில்லை. இந்த நிலை ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது. கழிவு நீர் குப்பைகள் கொட்டப்படுகிறதா, நீர் நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தஞ்சாவூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மீன் வளத்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
    • கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும்

    அமரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    கடல், நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆனதாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையும் நீரே ஆகும். இந்த சூழலில் நீர் நிலைகளில் ஆக்சிஜன் வேகமாக குறைந்து வருவதால் நீரை சார்ந்துள்ள உயிர்க்கோலம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஏனெனில் கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.

    எனவே ஆக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும். மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்சிஜன் கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது. ஆகையால் கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது.
    • பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும் அரசு ஆவணங்களின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    காஞ்சிபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதில் மத்திய மாசு கட்டுப்பாடுதுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங் வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் , பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.
    • பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகில் கொற்கை ஊரா ட்சியில் உயர் நீதிமன்றம் நீர்நிலை புற ம்போக்கு குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் கொற்கை ஊராட்சியில் சுமார் 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக அகற்றப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் வீடுகள் இல்லாமல் அவதி பட்ட நிலையில் செல்வராஜ் எம்.பி, மாரிமுத்து எம்.எல்.ஏ, தலைமையில் பொதுமக்களுக்கு நிவாரண பொருளாக 10 கிலோ அரிசி 1000 பணம் வேஷ்டி புடவைகள் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    • 2 பேர் சாவு எதிரொலி

    நாகர்கோவில்:

    ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் இறந் ததை தொடர்ந்து, நீர்நி லைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக் டர் அரவிந்த் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப் பாட்டில் உள்ள குளங்களில் துறை தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வும், பெருவெள்ள காலங் களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரை களை சீரமைக்கும்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பருவமழையை யொட்டி அதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் மற்றும் மீட்பு பணிகளும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    மாத்தூர் தொட்டிபாலம் அருகே ஆற்றில் அடித்துசெல் லப்பட்ட இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் வேண்டும். (நீர்வள அமைப்பு) உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அப்ப குதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீச்சல் மற்றும் குளிக்கும் எல்லா இடங்களிலும் எச்சரிக்கை செய்திகள் அல் லது பலகைகள் வைக்க வேண்டும் என்பதை உறுதிப்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

    தற்போது மழை காலம் என்பதால் அணைகளின் நீர் மட்டத்திற்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. எனவே அனைத்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆறுகள், குளங்கள், தாழ் வான பகுதிகளில் குளிப்பது மற்றும் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்ற காலாண்டு நுகர்வோர் கூட்டம், கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்டது. அதன் தீர்மான விபரம் தற்போது நுகர்வோர் அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில்,தெருக்களில் சரியான முறையில் வாட்டமாக மழைநீர் வடிகால் அமைத்து, பிரதான ஓடை, ஆறுகளின் வழியாக தண்ணீர் வழிந்தோடி செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், 15வது நிதிக்குழு மானிய நிதியிலும், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் மூலமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளில் உள்ள தெருக்களில் நீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைப்பு, வடிகால் அமைப்பு, தனிநபர் இல்லம் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    ஊராட்சிகளில் உள்ள குளங்கள் வற்றிய நிலையில் புதர், செடி, கொடி மண்டி, மரம் வளர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு அதில் வழிந்தோடி வரும் மழைநீர் தடைபடும் வகையில் உள்ளது என நுகர்வோர் அமைப்பினர் கூறியிருந்தனர்.இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குளம், ஊரணிகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர் நிலைகளில் உள்ள புதர், செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாதந்தோறும் 5 மற்றும் 20-ந் தேதிகளில் கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை சுத்தம் செய்தல், குப்பை அகற்றுதல் போன்ற மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் இந்த விளக்கம் குறித்து, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா கூறியதாவது:-

    நுகர்வோர் அமைப்பினரின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் விளக்கமளிப்பது பாரட்டுக்குரியது,வரவேற்கதக்கது. அதே நேரம், சரியான தகவலை அளிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் சுத்தமாக இல்லை. உதாரணமாக நல்லாறு, கவுசிகா நதிக்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.பல ஊராட்சிகளை ஒட்டிய சாலையோர மழைநீர் கால்வாய் புதர்மண்டி, மழைநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளன. எனவே, ஊராட்சிகள் வாரியாக ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் நீர்நிலைகளை சர்வே செய்து அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஏழை, எளியோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தமிழக அரசின் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.

    மதுரை

    மதுரை கோட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பில் திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் 840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த, ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட வீடு இல்லாதோர் விண்ணப்பிக்கலாம்.

    400 சதுரடி பரப்பளவு உள்ள குடியிருப்புக்கு மத்திய-மாநில அரசின் மானியம் போக மீதி ரூ.1 லட்சம் தொகையை பயனாளி செலுத்த வேண்டும்.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு வோர் கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டை நகல்கள், பங்களிப்புத் தொகை ரூ.1 லட்சம் செலுத்துவதற்கான சம்மதக் கடிதம், "The Executive Engineer, TNUHDB, Madurai Division, Madurai" என்ற பெயரில் 10 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலை ஆகியவற்றுடன், 'நிர்வாகப்பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எண்.69, கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை 20 என்ற முகவரியில் வருகிற 28, 29-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். தமிழக அரசின் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெ க்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    ×