search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம உதவியாளர்"

    • ஜெயச்சந்திரன் கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50). கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார். இவர், இவரது உறவினர் ரவிச்சந்திரன் (49) என்பவருடன் விழுப்புரம் சென்று, நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து தென்மங்கலத்திற்கு செல்ல சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

    இதில் ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் சிவக்குமார் (30), அவரது மனைவி ஆனந்தி (25) ஆகியோர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 22 மையங்களில் கிராம உதவியாளர் தேர்வு நடந்தது.
    • விண்ணப்பதாரர் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. இங்கு 400-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக 209 கிராம உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வுக்கு, கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ஆண்-பெண் உள்பட இரு பாலரும் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பம் செய்தனர். நவம்பர் 7-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிராம உதவியாளர் பணியி டங்களுக்கான எழுத்துத் திறனறித் தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கான ஹால் டிக்கெட்டுகள், இணைய வழி மூலம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கிராம உதவியாளர் திறனறி தேர்வு 22 மையங்களில் நடந்தன. இதற்காக விண்ணப்ப தாரர்கள் காலை 9 மணி முதலில் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கி விட்டனர்.

    அங்கு அவர்களிடம் ஹால் டிக்கெட் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்வு நடந்தது.

    இதில் முதல் அரை மணி நேரம் தமிழ் எழுத்து திறனறி தேர்வும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில எழுத்து திறனறித் தேர்வும் உள்ளடக்கியதாக இருந்தது. மதுரை மாவட்ட கிராம உதவியாளர் தேர்வு மையங்களில் காலை 9.30 மணி வரை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அதன் பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அதேபோல தேர்வு மையத்தில் இருந்து 10.50 மணிக்கு பிறகு, விண்ணப்பதாரர் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

    • 9 மையங்களில் கிராம உதவியாளர்கள் தேர்வு நடந்தது.
    • கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3 ஆண்டுகளுக்குட்பட்ட காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு 7.11.2022 வரை இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது அந்த பதவிக்கான எழுத்து திறனறித்தேர்வு இன்று நடந்தது.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லுாரி, ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாடானை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, ராஜசிங்கமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே. கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

    மையங்களுக்குள் தேர்வர்கள் பலத்த சோத னைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

    • கிராம உதவியாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 கிராம உதவியாளர் பணியிட ங்களுக்கு இன சுழற்சி முறையில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்ப ங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 4.12.2022 அன்று நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டனாது (ஹால் டிக்கெட்) விண்ணப்ப தாரர்களின் கைப்பேசி எண்ணிற்கு குறுசெய்தியாக அனுப்பப்படும்.

    மின்னஞ்சல் முகவரி வழியாக நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பதாரர் தமிழக அரசின் இணைய தளமான https://www.tn.gov.in, வருவாய் நிர்வாகத்துறையின் இணையதளமான https://cra.tn.gov.in மற்றும் விருதுநகர் மாவட்ட இணையதளமான https://virudhunagar.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32, இதர பிரிவினருக்கு 37 ஆகும்.

    தாராபுரம்:

    தாராபுரம் வட்டாரத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனத் தோ்வு செய்யும் பொருட்டு, தகுதியான நபா்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தாராபுரம் வட்டாட்சியா் ஜெகஜோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் வட்டாரத்தில் தாராபுரம் தெற்கு, கிளாங்குண்டல், பொன்னிவாடி, நஞ்சைத் தலையூா், அரிக்காரன்வலசு, புதுப்பை ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 6 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வயது வரம்பு அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 21 ஆகும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32, இதர பிரிவினருக்கு 37 ஆகும். மாற்றுத் திறனாளிகள் நிா்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குமேல் 10 ஆண்டுகள் வரை வயது வரம்புக்கு மேல் சலுகை உடையவா் ஆவா்.விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தாராபுரம் தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.தகுதியான நபா்கள் இணையதள முகவரியில் நவம்பா் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
    • தகுதியுடைய நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

    விழுப்புரம்: 

    மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறி இருப்பதாவது:-

    மரக்காணம் வட்டத்தில் அனுமந்தை பட்டியல் இனத்தவர் ஆலப்பாக்கம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஊரணி பிற்படுத்தப்பட்டவர் ஓமிப்பேர் பொது பிரிவு கீழ் புத்துப்பட்டு பிற்படுத்தப்பட்டவர் நடுக்குப்பம் கிழக்கு பொது பிரிவு மேற்கண்ட கிராமங்களில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு தகுதியுடைய நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் இவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    • இன்று நடந்தது
    • தோல் நோயாளிகள் பயணடைந்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுமார் 416 கிராம உதவி யாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல் நலத் தினை சிறப்பாக பேணுவதை கருத்தில் கொண்டு அனைத்து கிராம உதவியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக் கான சிறப்பு மருத்துவ முகாம்கள் திருப்பத்தூர், ஆண்டியப்பனூர், கொரட்டி, கந்திலி, ஜோலார்பேட்டை, புதூர்நாடு, நாட்டறம்பள்ளி, அம்மாணங்கோயில், வாணியம்பாடி. அம்பலூர், ஆலங்காயம், ஆம்பூர், மாதனூர், துத்திப்பட்டு, எம்.எஸ்.குப்பம் ஆகிய பகுதிகலில் இன்று காலை நடந்தது.

    முகாமில் காய்ச்சல், தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்க்கு அனைத்து ஆய்வக பரிசோதனைகளும். சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் தோல் நோய்கள், கண்புரை கண்டறிதல், பல் சிகிச்சை உள்ளிட்ட இதர சேவைகள் வழங்கப்படும். இம்முகாமில் கலந்து கொண்டு பரிசோதணை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

    • உருட்டு கட்டையால் தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.
    • புகாரின்பேரில் தாக்கிய கிராம உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி என்ற பாலசுப்பிரமணியம் (வயது 60). இவர், மணலூர் ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பெரும் பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்திற்கு சென்றார். அப்போது பாலசுப்பிரமணியத்துக்கும், அதே ஊரை சேர்ந்த முத்து வேலுக்கும் (45) இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த மஞ்சள்பரப்புவை சேர்ந்த கூலித் தொழிலாளியான சோனைமுத்து (54) தகராறை விலக்கிவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம், சோனைமுத்துவை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு செய்து தேடி வருகின்றனர்.

    • கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.

    சிவகங்கை

    தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.

    கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநில இணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் சுருளிபாண்டி, பொருளாளர் ஜெயபாலன், மகளிரணி செயலாளர் காளீஸ்வரி, துணைச் செயலாளர் ஜெயக்குமாரி, வட்டத் தலைவர் செல்வகுமரன், பொருளாளர் கார்த்திகேய ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×