என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குளிர்பானம்"
- செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
- செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.
குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.
செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.
குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.
செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
- ரோஜா கீரை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம்.
- கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.
ரோஜா கீர் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானம், இது ரோஜா இதழ்கள், பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இனிமையான மற்றும் சுவையான பானமாகும், இது கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.
ரோஜா கீரை நீங்கள் பல வழிகளில் பரிமாறலாம். நீங்கள் அதை தனியாக பரிமாறலாம் அல்லது இனிப்புகளுடன் பரிமாறலாம். நீங்கள் அதை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம் அல்லது அதை கேக்குகள் அல்லது டேனிஸ் ஆகியவற்றில் ஊற்றி பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
அரிசி - 1/2 கப்
ரோஸ் வாட்டர் - 3 சொட்டு
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உலர்ந்த ரோஜா இதழ்கள் - சிறிதளவு
நறுக்கிய பாதாம் பருப்பு - சிறிதளவு
நறுக்கிய முந்திரி - சிறிதளவு
உலர் திராட்சை - சிறிதளவு
செய்முறை:
முதலில் அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு அடிகடிமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அரிசியை நன்றாக கழுவி கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் அரிசி பாலில் குழையும் வரை வேக வைக்க வேண்டும்.
அரிசி பாதிக்குமேல் வெந்ததும் உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். அரிசி முழுவதுமாக வெந்த பிறகு அதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி, மற்றும் திராட்சையை தூவி விடவும். தித்திப்பான ரோஸ் கீர் தயார். சுடாகவும் பரிமாறலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
- காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவடம் கமுதி வட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள அச்சங் குளம், அகத்தாரி ருப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரமற்ற கெட்டுபோன குளிர் பானங்கள், பழங் களை வெயிலை சாதகமாக பயன்படுத்தி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
அபிராமம் பகுதியில் கடைகள் மற்றும் சாலையோர தள்ளுவண்டிகளில் ஆரஞ்சு. ஆப்பிள், தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இனிப்பிற்காகவும், சுவைக்காகவும் சாக்கிரின் பொடி மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகையான குளிர் பானங்களை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வாங்கி குடித்துவிட்டு சளி, இருமல், வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், சமுக ஆர்வலர்கள் கூறியாதவது:-
அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யில் தரமற்ற குளிர்பானங்கள், பழ ஜூஸ்களை கத்திரி வெயில் முடிந்த பின்பும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் கொடுமையை சமாளிக்க இதுபோன்ற தரமற்ற குளிர்பானங்களை குடிக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படு கின்றனர். எனவே சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.
- திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டார்/
விழுப்புரம்:
திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேரு வீதியில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு துறை அணி சார்பாக விளையாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளரும், நகர மன்ற உறுப்பினருமாகிய சந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பழம், குளிர்பானங்கள், நுங்கு, இளநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இதில் மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ரிஸ்வான் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த பகுதியில் கோடை காலம் முழுவதும் நீர் மோர் பந்தல் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
- வியாபாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை
- சாலையோர உணவு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம்
நாகர்கோவில் :
கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் குளிர்பான கடைகளை அதிக அளவில் நாட தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ள இந்த தருணத்தில், சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.
சாலையோர உணவு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிழ் பெற்றிருத்தல் அவசியம்.
குளிர்பானங்கள் தயா ரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப் பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, பயன் படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும்.
பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது. பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப் பொருட்களையும் சேர்க்க கூடாது.
பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைகளில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைகளில் மட்டுமே வழங்க வேண்டும். இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், போதுமான அளவு உடலின் நீர்ச்சத்தை பராமரித்து உடல்நலனை பேணவும், தரமான, பாதுகாப்பான குடிநீர், மோர், இளநீர், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், உணவு வணிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் வாட்ஸ் அப் மூலம் 94440 42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரி விக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மத்திய சிறையில் போலீசாருக்கு மோர், நன்னாரி குடிநீர் வழங்கப்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மத்திய சிறையில் பணி புரியும் போலீசார் மற்றும் வழி காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு மோர் மற்றும் வெட்டிவேர், நன்னாரி கலந்த குளிர்பானம் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மத்திய சிறையில் காவலர்களுக்கு கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானம், மோர் ஆகியவை இன்று காலை முதல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை காவலர்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளுக்கு காதலனே விஷம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு
- நித்திரவிளை மாணவி சாவில் தாயார் பரபரப்பு புகார்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர். இவரது 3-வது மகள் அபிதா (வயது 19). களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவியது.
இதற்கிடையில் அபிதா காதல் விவகாரம் காரணமாக விஷம் அருந்தி இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அபிதாவுக்கு பழக்கம் இருந்ததும், அந்த வாலிபருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. தற்போது பெங்களூருவில் படித்து வரும் அந்த வாலிபர், அபிதாவுடன் பேசுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்துள்ளார்.
இதுபற்றி அபிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பழகி விட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசி உள்ளனர். அப்போது அபிதாவை திருமணம் செய்வதாக வாலிபர் உறுதி அளித்துள்ளார். அதன்படி வருகிற 13-ந் தேதி அவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிதா மர்மமாக இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அபிதாவின் தாயார் தங்கபாய், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவுக்கு அவளது காதலன் தான் காரணம் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகளை அவர் அழைத்துச் சென்றார். அவரை சந்தித்து விட்டு திரும்பியதில் இருந்து தான் அபிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவர் தான், அபிதாவுக்கு விஷம் கலந்த எதையோ கொடுத்துள்ளார் என்றும் புகாரில் அவர் கூறி உள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அபிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்கலை பள்ளி மாணவன் அஸ்வின் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்து வந்தவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தான்.
இதில் இன்னும் குளிர்பானம் கொடுத்தது யார்? என்பது தெரிய வில்லை. இதேபாணியில் குமரி மாவட்டம் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன்ராஜ், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் நித்திரவிளை மாணவி அபிதாவும், காதலனால் விஷம் கொடுத்ததில் இறந்துள்ளார் என அவரது தாயார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காதலி-பெற்றோரிடம் போலீசார் விசாரணை
- வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.
அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைைமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது.
- குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
கன்னியாகுமரி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்தநகர் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில்
6-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின் கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் வைத்து மர்மநபர்கள் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்துள் ளான்.
இதில் மாணவன் அஸ்வின் உயிருக்கு ஆபத் தான நிலையில் நெய் யாற்றின் கரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் 17-ந்தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளார். இதற்கு காரண மான சமூக விரோதிகளை உடனடியாக போலீ சார் கைது செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.முதல்-அமைச்சர் இக்கடி தம் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மதியம் பள்ளியில் இருந்து இவன் வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மாணவன், குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளான்.
அதனை வாங்கி சுனில் மகன் குடித்துள்ளான். சிறிதளவே குடித்த அவனுக்கு இரவில் காய்ச்சல் மற்றும் வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் குடித்த குளிர்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினர். இதனால் சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
விரைவில் குற்றவாளியை கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் சிறுவனின் பெற்றோர், இன்று காலை குறைதீர்க்கும் நாளில், மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு அளித்தனர். அதில், போலீசார் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை.எனவே கலெக்டர் தலையிட்டு, எங்கள் மகனுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எனது குடும்பத்தின் சூழ்நிலை கருதி மகன் மருத்துவ செலவிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
- நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர்.
- அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விழுப்புரம்:
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். அவரது மகன் ஆண்டனி சாங் கோசன் (வயது 14). அதே பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆண்டனி சாங் கோசன் தாய் பொற்செல்வி,சகோதரி அனுசியா உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர். அந்த ஹோட்டலில் ஆண்டனி ஜான் கோசன் குளிர்பானம் குடித்துள்ளான். குளிர்பானம் குடித்த பின்னர் 4 முறை வாந்தி எடுத்துள்ளான்.
அவரது தாய் பொற்செல்வி பார்த்து பஸ்சில் சென்று வருவதால் இப்படி இருக்கும் என்று நினைத்து பின்னர் மயக்க நிலையில் இருந்த ஆண்டனி ஜான் கோசனை தூங்க வைத்துள்ளனர். பின்னர் பஸ் திண்டிவனம் வந்தது. பொற்செல்வி பஸ்சில் மகன் ஆண்டனிஸ் ஜான் கோசனை எழுப்பினார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்செல்வி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆண்டனி ஜான் கோசனை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திண்டி வனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் எந்த காரணத்தினால் இறந்தான் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- காதல் மனைவி கொடுத்த குளிர்பானத்தை குடித்த வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த புதுசூரங்குடியை சேர்ந்தவர் சிவா (வயது 23), ஆட்ேடா டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.
அந்த பெண் திருமண வயதை அடையவில்லை என்பதால் சிவாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கடந்த 15-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவர் கையெழுத்திட வந்தபோது அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணும், மகா லட்சுமி என்பவரும் அவரிடம் பேச்சு கொடுத்து குடிக்க குளிர்பானம் கொடுத்தனர். அதனை வாங்கி குடித்ததும் சிவா மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்