என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவிளக்கு"
- வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம்.
- வீட்டை துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
* வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.
* வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
* வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
* வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.
* குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.
* 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
- ஜோதிடர் சுப்பிரமணியன்
- சோழவந்தான் அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
- பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி வைகையாற்று கரையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவில் நேற்று கோவில் பூசாரி ராமசாமி தலைமையில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
இரவு 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் கமிட்டினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு 31-ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது.
அந்தியூர் பிராமணர்கள் சங்கம் சார்பில் ஓம் சக்தி என்ற 108 பிரணவ தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினி தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
- கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 2000 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
- மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு அம்மனுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக மும், லட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேகமும் இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பூச்சொரிதல் விழா அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை பால்குடம், காவடி, அக்னி சட்டி, இரவு முளைப்பாரி அம்மன் கோவில் வந்தடை கிறது. மறுநாள் (புதன்கிழமை) காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.
முளைப்பாரி திருவிழா பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல் மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.
- சிவன் கோவிலில் அய்யப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடை பெற்று வருகிறது.
- இதில் 108 திருவிளக்குகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குங்கு மாட்சனை, மலராட்சனை செய்யப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஈஸ்வரர் சிவன் கோவிலில் அய்யப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடை பெற்று வருகிறது. அதன் படி 34 -ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 திருவிளக்குகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குங்கு மாட்சனை, மலராட்சனை செய்யப்பட்டது.முன்னதாக அய்யப்பன்
சுவாமி பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பஜனைப்பாடியும், 18 படிக்கட்டுகளை கற்பூர தீபம் ஏற்றியும் வழிபாடுகளை நடத்தியும் வழிப்பட்டனர்.
- தேவகோட்டை புவனேசுவரி அம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.
- வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.
தேவகோட்டை
தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள புவனேசுவரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 12-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
நேற்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் வழிபாடு செய்தனர். அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால்குடமும், இரவு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.
- ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
- கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஆடி 3-ம் வெள்ளியையொட்டி அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
பாரதி நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுமிகளுக்கு கன்னிமார் அலங்காரம் செய்யப்பட்டு, பாதபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
பெண்கள் பக்தி பாடல்கள் பாடியவாறும், கும்மியடித்து ஆடியவாறும் கன்னிமார் சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- உற்சவத்திரமூர்த்தி முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- மாலையில் பழனி ஆண்டவர் வழிபாட்டு சங்க மகளிர் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உற்சவத்திரமூர்த்தி முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மூலவருக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மாலையில் பழனி ஆண்டவர் வழிபாட்டு சங்க மகளிர் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பெண்கள்கலந்து கொண்டு பக்தி சிரத்தையுடன் வழிபாடு நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்