என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அபிஷேகம்"

    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது
    • கார்த்திகைமாத சோமவார பிரதோஷம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயரமருந்து வாழ்மலை அமைந்து உள்ளது.

    இந்த மலையில் ஜோதி லிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகைமாத சோமவார பிரதோஷம்  நடைபெற்றது.இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகை யான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • 16 வகையான திரவியங்களால் நடைபெற்றது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வேதநாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சனிக்கிழமையையொட்டி நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு 108 வடைமாலை, வெற்றிலை மாலை மற்றும் பூ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • இன்று மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, திருநீறு, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7-ந்தேதி) மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு கோவிலை வலம் வந்து ஏழு மணி அளவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

    பிறகு சுடர் (சாம்பல்) எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி முழு ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண (தங்க) சனீஸ்வரராக 20 அடி அகலம், 27அடி நீளத்தில், 10 அடி ஆழ பாதாளத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண (தங்க) சனீஸ்வரராகவும், ஒன்றரை அடி உயரத்தில் நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரராகவும் தனித்தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் சனீஸ்வரர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    முன்னதாக சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் நடைபெற்றது.யாகத்தில் பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக உழவர் திருநாளான நேற்று ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். மேலும் இன்று ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் பூர்த்தி விழா, வருகிற 23-ந் தேதி 41அடி உயர சக்கரத்தாழ்வார் ஸ்தூபி பூமி பூஜை விழா, 27-ந்தேதி 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பகவானுக்கு முதலாமாண்டு வருஷாபிஷேக விழா, 28-ந் தேதி ரத சப்தமியை முன்னிட்டு 7 குதிரைகள் கொண்டு அஸ்வமேத பூஜை விழா, 29-ந் தேதி லக்ஷ அஸ்வாரூடா ஜப ஹோமம், மஹா பூர்ணாஹூதி விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்ப ட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்றுவட்டா ரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மாசி மகம் சதுர்தசியினை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை நடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள திருஞானசம்பந்தர் மடாலயத்தில், மாசி மகம் சதுர்தசியினை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை நடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    கைலாய வாத்தியம் முழங்க, தேவாரம், திருவாசகம் ஓதலுடன், சிவகாம சுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகேஸ்வர பூஜை யும், அன்னம் பாலிப்பும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பா லித்த காட்சி.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமான், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமான், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,

    எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில்,

    பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு, சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப் பெருமானை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு, சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள், அருகம்புல் மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப் பெருமானை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகப் பெருமான், மகா மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், பரமத்திவேலூரில் உள்ள ஹேரம்ப பஞ்சமுக விநாயகர், சக்தி நகரில் உள்ள விநாயகர், நல்லியாம்பாளையத்தில் உள்ள விநாயகர், காவிரி பாலம் அருகே உள்ள சத்திரத்து விநாயகர், பாண்டமங்கலத்தில் உள்ள விநாயகர், பிலிக்கல் பாளையம் விநாயகர், வடகரையாத்தூர் விநாயகர், கபிலர்மலை விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அடர்ந்த வனப்பகுதியில் மேலகிரி அய்யப்பன் கோவில் உள்ளது.
    • சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா கூச்சுவாடி, நெல்லுகுந்தி கிராமங்களுக்கு அருகே அடர்ந்த வனப்பகுதியில் மேலகிரி அய்யப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சித்திரை விஷூவையொட்டி கோவில் குருசாமி கோபால் தலைமையில் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் நெல்லுகுந்தி, கூச்சுவாடி, கோவை குட்டை, குடியூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    • பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பால முருகன், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அணிச்சம் பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், கு.அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில்,

    ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், காவேரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    • சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை கைலா சநாதர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தினை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

    சித்திரை மாதம் வசந்த காலமாகவும், சித்திரை மாதம் திருவிழாக்கள் நிறைந்த மாதமாகவும் தமிழக கோவில்களில் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டா டப்படுகிறது.

    சிறப்பு மிக்க சித்திரை மாதம் வரும் திருவோண நட்சத்திரம் சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

    இதையொட்டி சென்னி மலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு பால், தயிர் உட்பட 16-க்கும் மேற்பட்ட ேஹாம திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சாமிக்கு வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சாமிக்கு வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி, பொத்தனூர் அருகே உள்ள பச்சைமலை முருகன், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், வேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன்,

    அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், சக்தி நகரில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி யாண்டவர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர் களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    ×