என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அபிஷேகம்"

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால் ,தயிர், இளநீர், பன்னீர் ,சந்தனம், விபூதி ,மஞ்சள் ,திருமஞ்சனம் , தேன்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் , பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் , அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில் ,பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் ,வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கிருத்திகையை முன்னிட்டு கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,

    பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், சுள்ளிப்பா ளையம் அருகே அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அபிஷே கமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    • பரமத்திவேலூர் பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசனத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜ பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதுதலும், அதனை தொடர்ந்து சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜப் பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது.

    நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் 1 மணி அளவில் மகேஸ்வர பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதே போல் கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் கோவிலில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆனி உத்திர தரிசனத்தை முன்னிட்டு பரமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் மற்றும் பாண்டமங்கலம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜப் பெருமானையும், பரமேஸ்வரரையும் தரிசனம் செய்தனர்.

    • 16 வகையான வாசனைத்திரவியங்களால் அபிஷேகம் நடத்தப் பட்டது.
    • சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வ ரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தி னி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆனி மாத மகாசனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனைத்திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப் பட்டது.

    அபிஷேகத்தை சிவாச்சா ரி யார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண் பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • கோ-பூஜையினை காண பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    சென்னிமலை:

    ஆடி மாதத்தில் பக்திக்கு முக்தி தரும் மாதமாக கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம் ஆகும், இது தேவர்களுக்கு இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.

    ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்பாக போற்றப்படுகிறது. ஆடி அமாவாசையில் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் செய்து வேண்டு தல் வைப்பர். இந்த நாளில் வேண்டுதல் வைத்தால் நினைத்த காரியம் நிறைவே றும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை நடந்த கோ-பூஜையினை காண பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    தொடர்ந்து நடந்த அபிேஷ கத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேன் மூலம் வந்திருந்தனர்.

    அவர்கள் பால், தயிர் உட்பட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது. பொது தரிசனத்தில் பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிக மாக இருந்து வாகன நெரிசல் ஏற்பட்டதால் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது .இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன்,அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில் , ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில் , மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும்.
    • ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

    சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும். அன்றைய தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    வைகாசி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் இரவு ஊஞ்சல் உற்சவம் நடை பெறும்.

    ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஆடிமாதம் முழுவதும் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலிப்பர்.

    ஆவணி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    புரட்டாசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மறுநாளில் இருந்து நவராத்திரி கொலுவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். விஜயதசமி அன்று மாலையில் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் கையில் வில், அம்புடன் குதிரை வாகனத்தில் மந்தைவெளியில் எழுந்தருள்வார். பின்பு வன்னிமரத்தின் மீது அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஐப்பசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தீபாவளி அன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    கார்த்திகை மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    திருவண்ணாமலை தீபத் திருநாள் அன்று உற்சவ அம்மன் மாலை நேரத்தில் பல்லக்கில் வந்து தென்மேற்கு மூலையில் இருந்து திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மனுக்கு தீபாரதனை நடைபெறும்.

    மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    தை மாதம் பொங்கல் அன்று வடக்கு வாசல் அருகில் பெரிய பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கும் அம்மனுக்கும் படைப்பார்கள். அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் நடைபெறும்.

    மாசி மாதம் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறும். இம்மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    பங்குனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    • கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும்.
    • பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும்

    சில கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல், குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல்மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு, மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்திக் கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    • தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது.
    • மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும்.

    தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களுக்கு எல்லாம் தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது. பிற ஊர்களில் அங்காள பரமேஸ்வரி கோவில் கட்ட விரும்புகிறார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு வந்து மண் எடுத்து எந்த ஊரில் கோவில் கட்டுகிறார்களோ அந்த ஊரில் கோவில் கட்டுவதற்கு முன்பு இந்த மண்ணை போட்டு அதன் பிறகு கட்டிட வேலைகளை தொடங்குவார்கள்.

    அதேபோல் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் இருந்து தீர்த்தங்களையும் எடுத்து செல்வார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா தொடங்கும் போது, பிற ஊர்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள் மேல் மலையனூர் வந்து அக்னி தீர்த்தத்தில் தீர்த்தம் எடுத்துச்சென்று அன்னையிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தங்கள் ஊரில் திருவிழாவுக்கு கொடி ஏற்றுவார்கள்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து உருவான முக்கியமான கோவில்களில் பாண்டிச்சேரி சின்ன சுப்பராய வீதியில் உள்ள அங்காள பரமஸ்வரி கோவில் முக்கியமானதாகும். மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும். இத்திருவிழா தொடர்ந்து 24 நாட்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேல்மலையனூரில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
    • 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட 6 விதமான அசுத்த மலங்கள் சுரந்த வண்ணமாக உள்ளதாகவும் இந்த 6 அசுத்த மலங்களில் ஒவ்வொருநாளும் 3 வித அசுத்த மலங்களே களையப்படுவதாகவும், சுத்தம் செய்யப்படுகிறது.

    மீதமுள்ள உட்புற 3 மலங்களான ஆணவ மலம், கண்ம மலம், மாயை மலம் ஆகிய ஆணவம், இறுமாப்பு, தலைக்கணம், அகங்காரம் போன்ற தீய எண்ணங்களான குணங்கள் அங்காளம்மனை தியானம் செய்வதாலும், வழிபாடு செய்வதாலுமே சிறிது சிறிதாக உடலைவிட்டு விலகி தூய சிந்தனை ஏற்படுவதாகவும் அதற்காகவே தினந்தோறும் வீடுகளில் விளக்கேற்றி வைத்தே தியானம் செய்யப்படுவதாகவும் வருடத்திற்கு ஒருமுறையாகிலும் இக்குணங்கள் ஏற்படா வண்ணம் அறவே அழித்து ஒழிக்கவுமே இவற்றை தலைமையிட அங்காளம்மன் கோவிலிலே அழித்து ஒழிப்பதாகவே கருதப்படுகிறது.

    மனித இயக்க 5 செயல்களுக்கும் முக்கிய இடமாகிய ஐம்பொறி என்ற கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய அனைத்தையும் தாங்கி நிற்கும் தலைமை இடமான தலையையே! அங்காளம்மன் தலைமையிட கோவிலிலே தலையில் தாங்கியுள்ள முடிகளையே அகற்றும் வண்ணம் தலையை மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    அங்காளம்மன் திருக்கோவிலில் இருந்து தெளிவான ஞானத்தையும் அம்மன் பேரில் தூய அன்பையும் அவளின் அருளையும் தான் மொட்டைத் தலை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்காகவே அங்காளம்மனுக்கு வேண்டுதல் பெயரில் மொட்டை அடிக்கப்படுவதாகவே வழக்கத்தில் உள்ளதற்கு உண்மை விளக்கமாகவே அமைகிறது.

    குலதெய்வ கோவில் ஜடாமுனீஸ்வரன்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக பெரிய ஏரிக்கரையின் கீழ் அமைந் துள்ள ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார். இந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு இக்கோவிலில்தான் முடி காணிக்கை செலுத்தி காது குத்துவார்கள். ஆடி மாதம் வெகு விமரிசையாக இங்கு விழா நடத்துவார்கள்.

    • திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள்.
    • பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகும்.

    1. அங்காளபர மேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

    2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் 4 திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

    3.நான்கு கரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிளம்பு உள்ளது.

    4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.

    5. கோவிலுக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.

    7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.

    8. இக்கோவிலில் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும்போது அவ்வப்போது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

    9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

    10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

    11. கோவிலின் தெற்கு பகுதியில் மல்லாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

    12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாடானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.

    14. இந்த இடத்தில் வழிபடும் பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பவுர்ணமி தினங்களில் ஆலயம் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுகிறது.

    16. சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.

    17.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.

    18.ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

    19.எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

    21. மயானத்தில் அன்னையை ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள். இதனால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.

    ×