என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு ஒத்திகை"

    • ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
    • ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 7-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, நேற்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். இப்பயிற்சியின் தொடக்கமாக முழு ஒத்திகைக்கான தயாரிப்புகள், கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

    பின்னர், வாரத்தின் இரண்டாவது பாதியில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை பயிற்சி நேரடியாக நிகழ்த்தப்படும். இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.

    இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும்.

    இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
    • நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.

    அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.

    இதேபோல், நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட்டது.

    இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும்.

    மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாளை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
    • பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.

    அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றும் (வியாழக்கிழமை), நேற்று முன்தினமும் (புதன்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

    இந்த ஒத்திகை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் சென்னையை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது.

    இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
    • மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும்.

    சென்னை:

    பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆகியவற்றைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

    இதைத் தொடா்ந்து துறைமுகத்தின் கடல் பகுதியில் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் கடலோரக் காவல் படையின் 2 கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே வந்தடைந்தன. வான்வழித் தாக்குதலின்போது, கொள்கலன் மீது தீப்பற்றியது.

    அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதர குழுவினா் பொது மக்கள், ஊழியா்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், காணாமல் போனவா்களை அடையாளம் கண்டறியவும், காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டனா்.

    இதைத் தொடா்ந்து, சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, மணலியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் (சி.பி.சி.எல்.) மற்றும் காமராஜா் துறைமுகம், எண்ணூா் ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரகால சூழலையும் எதிா்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஒத்திகை பயிற்சியில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊா்க்காவல் படையினா், சென்னை பெருநகர காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்புப் படையினா், தன்னார்வலா்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

    இந்தப் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபாா்த்துக்கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும். இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ அடைய தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை.

    பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெறும் என்றும் இது இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.

    இந்நிலையில், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை தொடங்கியுள்ளது.

    ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.

    இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது.

    மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையிலும் போர் சூழலில் பாதுகாப்பு ஒத்திவை நடைபெற்று வருகிறது.

    • பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    • இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயங்கரவாத தாக்குதலின்போது மக்களை பாதுகாப்பது தொடர்பாக நாடு முழுவதும் மே 7ம் தேதி அன்று ஒத்திகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    வான் வழித்தாக்குதல் எனும் பட்சத்தில் எனும் பட்சத்தில் எச்சரிக்கும் வகையில் சைரன் அமைப்பை நிறுவ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கடல் வழியாக ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு.
    • சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. எனவே அங்கிருந்து கடத்தலை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோரப் பகுதியில் 'சஜாக்' எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை கடலோர பாதுகாப்பு குழு போலீசாரால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

    வருடத்திற்கு சுமார் ஏழு முறைக்கு மேல் நடக்கும் இந்த சஜாக் எனப்படும் ஒத்திகை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ லைத் தடுப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தற்போது காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிர வாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து தொண்டி கடல் பகுதிக்கு அருகே உள்ள இலங்கை கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் போன்ற அன்னியர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கடலில் வரும் படகுகளை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வேறு ஏதும் கடத்தல் பொருட்கள் உள்ளதா? ஆயு தங்கள் ஏதும் வைக்கப்பட்டு உள்ளதா? என படகுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடல் மார்க்கம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை வழியாவும், சாலை வழியாகவும் சோதனைச் சாவடிகளில் தீவிரகண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆரம்பிக்கும் எஸ்.பி.பட்டினம் முதல் தேவி பட்டணம் வரை உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குடும்பத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் துளசி மற்றும் ஏட்டு, போலீசார் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடற்கரை பகுதிக ளில் புதிய நபர்கள் நட மாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • இறுதி நாளான நாளை பிரமாண்ட ஒத்திகையை நடத்த கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    • ஒத்திகை சென்னையையொட்டிய கடலோர பகுதியில் நாளை நடைபெறுகிறது.

    சென்னை:

    கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்றுபாது காப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடலோர பாதுகாப்பு படையினர், இந்திய கடற்படையினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் இணைந்து 'சீ விஜில்' என்ற பெயரில் ஒத்திகையை மேற்கொண்டனர்.

    தமிழக காவல்துறையினர் கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் அனைத்து மாவட்டங்களில் இன்று காலை இந்த ஒத்திகை மற்றும் பயிற்சி தொடங்கப்பட்டது.

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்த ஒத்திகை ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது.

    கடல் வழியாக ஊடுருவி முக்கிய இடங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்றும், அதனை முறியடிப்பது போன்றும் இன்றைய ஒத்திகையின் போது பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

    2 நாட்கள் இந்த ஒத்திகை நடைபெறும் என்று கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 5 ஆயிரம் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் இன்றைய ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய கப்பல் படையினரும் ஒத்திகையில் இணைந்துள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் ஆகியவையும் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தன. சென்னை முதல் குமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவ கிராமங்கள் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக பரபரப்பாக காட்சி அளித்தது.

    இறுதி நாளான நாளை பிரமாண்ட ஒத்திகையை நடத்த கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த ஒத்திகை சென்னையையொட்டிய கடலோர பகுதியில் நாளை நடைபெறுகிறது.

    முதல் நாளான இன்று சென்னை கடலோர பகுதியில் அனைத்திலும் விரிவான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பெசன்ட் நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும், மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து போலீசார் ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    மாறுவேடத்தில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவர் பயங்கரவாதி போன்று செயல்பட்டு டம்மி வெடிண்டு போன்ற பொருளை எடுத்து வருவது போன்றும், அதனை போலீசார் மடக்கி பிடிப்பது போன்றும் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    பட்டினப்பாக்கத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை மணல் பகுதியில் டிராக்டரில் ரோந்து சென்று போலீசார் கண்காணித்தனர்.

    இந்த கண்காணிப்பு மற்றும் ஒத்திகையால் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் துணை கமிஷனர் பாலகிருஷ்ண ரெட்டி, உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் பிராங்ளின் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து கண்காணித்தனர்.

    மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வழியாக பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருபவர்களை பிடிக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கல்பாக்கம் அணு உலை பகுதியிலும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னேரி மற்றும் பழவேற்காடு சுற்று வட்டார பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இந்திய கடற்படையினர் கப்பல் மற்றும் ரோந்து படகுகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் இன்று காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் குமரி மாவட்டத்தில் உள்ள 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு போலீசார் மாறுவேடத்தில் புகுந்துள்ளனர். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • கடல் வழியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க இன்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
    • கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, உள்ளூர் போலீசார் இணைந்து சீ விஜில் என்ற ஒத்திகையை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு கடலோர மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர காவல் பாதுகாப்பு குழுமத்தின் பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சீ விஜில் என்ற பெயரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ஆபரேஷன் நாளை மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதில் தீவிரவாதிகள் வேடத்தில் கடல் வழியாக வந்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்குள் நுழையும், மத்திய கடலோர பாதுகாப்பு படை வீரர்களை எப்படி அடையாளம் கண்டு கைது தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்கிறார்கள், அவர்களிடம் விசாரிக்கும் விதம் எப்படி இருக்கிறது, கடல்பகுதி தகவல் தொடர்பு கருவிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கண்டறியவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மாமல்லபுரம் வருவதால் அவர்களைத் தாக்கவும், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வழியாக நுழையலாம். ஆபத்தான அணு உலை கல்பாக்கத்தில் உள்ளதால் அதை தகர்த்து எரிய சட்ராஸ் பகுதி கடலோரம் வழியாக நுழையலாம் என்பது போன்ற ஒத்திகையில் கடலோர காவல் படையினர், போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கோவளம் கடலில் சந்தேகத்திற்கு இடமான படகில் வந்த நபர்கள் 8 பேரை கடலோர காவல்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒத்திகைக்காக தீவிரவாதிகள் வேடத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி, வாக்கி டாக்கி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடலோர காவல் படைவீரர்கள் அவசர அவசரமாக கடலுக்குள் படகை இறக்கி, வேகமாக எடுத்துச் செல்வதைப் பார்த்த மீனவர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டது. அதன்பின் அது ஒத்திகை என தெரிய வந்ததும் இயல்பு நிலை திரும்பியது.

    • கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
    • கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    'சிவிஜில் 2022' என்ற பெயரில் நேற்று தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகள் போல ஊடுருவியவர்களை பல இடங்களில் போலீசார் மடக்கி பிடித்தனர். சில பகுதிகளில் கோட்டையும் விட்டுள்ளனர். இறுதி நாளான இன்றும் கடலோர பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறையினரும் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது 4 பேர் கடற்கரை வழியாக பயங்கரவாதிகள் போல் நடித்து ஒரு படகில் தப்பிசெல்ல முயன்றனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மடக்கி பிடித்தனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது
    • தீவிரவாதத்தை தடுக்கும் முறைகள்

    திருச்சி:திருச்சி விமான நிலையத்திற்கு தமிழகத்தில் அதிக அளவில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் சென்னைக்கு அடுத்தபடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளால் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றது வாடிக்கை. இந்த நிலையில் ஆண்டுதோறும் திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடத்தப்பட்டது இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தமிழக போலீசார் கமாண்டோ படையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி , மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வில் தீவிரவாதத்தை தடுக்கும் முறை பற்றி ஒத்திகை முறையில் நடத்தி காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×