என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு"

    • எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.
    • மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க பொதுகுழு உறுப்பி னர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் இல.சு.மணி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஆடுதுறை நசீர் முகமது, ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம், மாநிலங்க ளவை உறுப்பினர் மு. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி. இரா. தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வன், மாநில அயலக அணி துணை செயலாளர் விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் துரைமுருகன், ஜெயலட்சுமி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் இராமபிரபு, சிவ.மணிமாறன், பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி பெருந்தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரை.மணிமாறன், சரபோஜி ராஜபுரம் கிளை செயலாளர் பழ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா ர்கள்.

    கூட்டத்தில் நடைபெற்று முடிந்த 15 வது தி.மு.க பொது தேர்தலில் மீண்டும் கழக தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினையும் அவர்களையும், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பொது குழுவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் சு.கல்யாணசுந்தரம் அவர்களையும், மாவட்ட கழக நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்த தி.மு.க தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்க ளை தெரிவித்து கொள்வதெனவும், புதிய உறுப்பினர்களை கிளைகள் தோறும் அதிக அளவில் சேர்ப்பது என்றும்.

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி முகவர்க ளையும், வாக்குச்சாவடிக்கு 10 உறுப்பினர்கள் கொண்ட நிலை குழு உறுப்பினராக இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிப்பது எனவும், கிளை கழகம் தோறும் அனைத்து கிளைகளிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்துவது எனவும், மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர ராஜா பங்கேற்று ஈரோட்டில் நடைபெற உள்ள மே-5, வணிகர்தின மாநில மாநாடு சம்பந்தமாக சிறப்பு பேருரையாற்றுகிறார்.
    • பழைய பொருள் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் இருதயராஜ் நன்றியுரையாற்றுவார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழைய பொருள் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, அண்ணாநகர், திருமங்கலம், பெரியார் சமுதாய நலக்கூடத்தில், சென்னை மாநகர பழைய பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் இ.எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.

    செயலாளர் சேதுராமன், காமராஜ், செல்வம், சீனிவாசன் வரவேற்கிறார்கள். நிர்வாகிகள் பாலசுந்தரம், வைரவன், பரமசிவம், ராஜாசிங், சூசைமிக்கேல், தாமஸ், நாசர்கான், செல்வராஜ், கென்னடி, அருள் ரூபான், ஜெயபிரகாஷ், செய்யதுபாரூக், பிரகாஷ், மணிவண்ணன், செல்வகுமார், ஜெயராஜ், கொடி அரசன், அப்துல்மாலிக் முன்னிலை வகிக்கின்றனர்.

    விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர ராஜா பங்கேற்று ஈரோட்டில் நடைபெற உள்ள மே-5, வணிகர்தின மாநில மாநாடு சம்பந்தமாக சிறப்பு பேருரையாற்றுகிறார்.

    பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ராஜ்குமார், சென்னை மண்டலத்தலைவர் கே.ஜோதிலிங்கம், காஞ்சி மண்டலத் தலைவர் அமல்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், பழைய பொருள் வியாபாரிகள் சங்க அனைத்துப் பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர். பழைய பொருள் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் இருதயராஜ் நன்றியுரையாற்றுவார்.

    பழையபொருள் வியாபாரிகளுக்கு மிகவும் தலையாய பிரச்சனையாக உள்ள ஜி.எஸ்.டி-யில் உள்ள முரண்பாடுகள், குளறுபடிகள் சம்பந்தமாக கலந்து ஆலோசித்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார்

    தஞ்சாவூர்:

    தஞ்சை சண்முகா நகரில் இன்று தஞ்சை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநகர கிளை சங்க 29-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கோபால் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளரும் கிளை தலைவருமான கந்தசாமி வரவேற்றார். மதுரை மண்டல தலைவர் விவேகானந்தன் நிர்வாக அறிக்கை வாசித்தார்.

       மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் தனபாண்டியன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கூட்டமைப்பு மாநில செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னர்.இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் மறைவிற்கு பின்னர் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநகராட்சி கிளை துணை செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.

    • மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • அனைத்து செட்டியார் சமூகத்தினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தலைமை செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தேசிய செட்டி யார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.

    மாநில தலைவர் தமிழ்ச் செல்வன், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி தென்னவன், மாநில பொருளாளர் ராஜ ராஜசேகரன், மாநில மகளிர் அணி தலைமை ஒலிங்கி ணைப்பாளர் ராஜேஸ்வரி, சட்ட ஆலோசகர் வக்கீல் ஜெயராமன், மாநில தலைமை ஒருங்கிணைப் பாளர் மோகன், மாநில துணைப் பொதுச் செய லாளர் வக்கீல் ராம கிருஷ்ணன், தலைமை நிலைய செயலாளர்கள் கோவிந்தமணி, மோகன், ரகுபதி, தலைமை நிலைய இணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி ஒருங்கிணை்ப பாளர் சுறா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மூர்த்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ காஞ்சி காமாட்சி அறக்கட்டளை நிறுவனர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் உள்ள அரசி யல் கட்சிகளில் நமது சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் மாநில முழுவதும் மாவட்ட வாரியாக சிறப்பு கூட்டங் கள் ஏற்பாடு செய்து நலத் திட்டங்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு அனைத்து சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து வைத்தல்.

    நமது சமுதாயத்தின் நூற்றாண்டு மாநாடு அனைவரும் ஒருங்கிணைந்த பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். உடுமலை நாராயண கவிக்கு சென்னை அண்ணா சாலையில் முழு உருவசிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கேரளா எல்லையில் அமைந் துள்ள கண்ணகி கோவிலில் தமிழ் மாதந்தோறும் சாமி தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வர லாற்றை பறைசாற்று கின்ற அளவுக்கு தேனி லோயர் கேம்ப் பகுதியில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும். அனைத்து செட்டியார் சமூக மக்களையும் மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்பட முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மணி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, தமிழக, கேரளா, கர்நாடக, புதுச்சேரி, ஆந்திரா உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய தீர்ப்புகள் அமைந்தன.
    • இளைஞர்கள் கூடுதல் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வருகிற 15-ந் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கட்சியின் விதிப்படி பொதுக்குழுவை கூட்ட 5 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். அதை 18 நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டார்.

    ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பொதுக் குழுக்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோரின் பலத்தைக் காட்டும் போட்டிக் கூட்டங்களாகவே இருந்தன.

    மேலும் இரட்டைத் தலைமையாக இருந்ததை மாற்றி ஒற்றைத் தலைமையாக அறிவித்த பொதுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்றார் ஓ.பி.எஸ்..

    ஆனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய தீர்ப்புகள் அமைந்தன.

    எனவே இந்த பொதுக் குழுவை விரிவான பொதுக் குழுவாக கூட்டுகிறார்.

    அதன்படி இந்த பொதுக் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக 2 ஆயிரம் பேர் அழைக்கப்படுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரையும் சேர்த்து சுமார் 5 ஆயிரம் பேர் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே முழு அளவில் நடைபெறும் இந்த பொதுக் குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த தீர்மானங்கள் தயாரிப்புக்குழு, வரவேற்புக்குழு, உணவு உபசரிப்புக் குழு உள்ளிட்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க.வில் கடந்த ஒரு மாதமாக கள ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த கள ஆய்வுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், மாவட்ட மறு சீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகள் ஆகியவை தொகுக்கப்பட்டு அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமியிடம் கள ஆய்வுக் குழுவினரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க.வில் மாவட்ட மறுசீரமைப்பு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இளைஞர்கள் கூடுதல் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கூட்டணி பற்றி பேசுவதற்கான அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
    • பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டிருந்த நிலையில் அது கை கூடாமல் போய்விட்டது.

    இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

    அதே நேரத்தில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

    இது போன்ற பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (15-ந் தேதி) நடைபெறுகிறது.

    அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர், சிறப்பு அழைப்பாளர்களான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2 ஆயிரம் பேர் என 5 ஆயிரம் பேர் நாளை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். வழி நெடுக தோரணங்களும், அ.தி.மு.க. கட்சி கொடிகளும் கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கு கட்சியினர் தயாராகி வருகிறார்கள். பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    • அரசியலில் சாணக்கிய தன்மையோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டுக்கு தருவார்.
    • தி.மு.க. தலைவராக பொதுக்குழு தேர்ந்தெடுத்து நம்மை ஆள்வதற்கு நம் இனத்தை ஆள்வதற்கு ஒப்புதல் தந்துள்ளது.

    பொதுக்குழுவில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    தி.மு.க.வில் அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பொதுச் செயலாளராக இருந்துள்ளனர். என்னை 4-வது பொதுச்செயலாளராக உட்கார வைத்திருக்கிற தளபதியே உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிப்பேன். அண்ணாவுக்கு பிறகு கலைஞர் இந்திய துணை கண்டத்தையே ஆட்டிப்படைக்கின்ற தலைவராக இருந்தார். அவர் நினைத்தவர் தான் ஜனாதிபதியாக வர முடிந்தது. அவர் நினைத்தவர் தான் பிரதமராக வர முடிந்தது.

    கலைஞர் கூட முதல்- அமைச்சரான பிறகு டெல்லிக்கு போய் அவர் அரசியல் சாணக்கிய தனத்தை காட்டிய பிறகு தான் அவர் அங்கு பிரபலமானார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போகாமல் இங்கு உட்கார்ந்து கொண்டே இந்தியா முழுவதும் பிரபலமான பெருமை தளபதிக்கு மட்டுமே உண்டு.

    அவர் இன்னும் அரசியலில் சாணக்கிய தன்மையோடு விளங்கி மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டுக்கு தருவார். இந்த கழகம் மேலும் மேலும் வளருவதற்கு உறுதுணையாக இருப்பார். அவருக்கு உறுதுணையாக ஆலோசனை சொல்ல அவரோடு இருந்து பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தளபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:-

    அன்புத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை 2-வது முறையாக தி.மு.க. தலைவராக பொதுக்குழு தேர்ந்தெடுத்து நம்மை ஆள்வதற்கு நம் இனத்தை ஆள்வதற்கு ஒப்புதல் தந்துள்ளது.

    பொதுக்குழுவில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாகவே சிந்தித்து இவர்தான் தலைவர், இவர்தான் பொதுச்செயலாளர், இவர் தான் பொருளாளர் என்று ஒரே மாதிரியாக முடிவு எடுத்து உள்ளனர். இந்த இயக்கத்தை ஒற்றுமையாக கொண்டு செல்ல நம் தலைவர்தான் தகுதியானவர்.

    இங்கே தம்பி உதயநிதி பேசும்போது எல்லாமே அப்பாதான் என கூறிவிட்டு சென்றார். உங்களுக்காக மூத்தவர்கள் எங்களை போன்றோர் உதவி செய்ய காத்திருக்கிறோம். எதிர்காலத்தில் இளைஞரணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வருங்காலம் உங்கள் கையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்குழுவில் கே.என்.நேரு பேசியதாவது:-

    நீங்கள் கழக தோழர்கள் யாரையும் மறவாமல் நினைவில் கொண்டு எந்தெந்த நேரத்தில் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மறக்காமல் செய்கின்ற மாபெரும் தலைவராக கலைஞருக்கு பிறகு நீங்கள் திகழ்கிறீர்கள். நாங்கள் பல இடங்களில் பார்த்து இருக்கிறோம்.

    கழகத்தில் ஒவ்வொருவரின் உணர்வையும் புரிந்து கொண்டு இருக்கின்ற தலைவர் நீங்கள். நாங்கள் கலைஞருடன் நீண்டகாலம் பயணித்து இருக்கிறோம். உங்களோடும் நீண்டகாலம் பயணித்து இருக்கிறோம்.

    தலைவர் என்ன நினைப்பார் என்று நாங்கள் முகத்திலேயே தெரிந்து கொள்வோம். தலைவருக்கு பிறகு அவரை விஞ்சிய தலைவராக அனைவரையும் அரவணைக்கும் தலைவராக அனைவரிடமும் வாஞ்சையோடு பழகுகிற தலைவராக நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் பணியை முதன்மை பணியாக தட்டாமல் செய்யும் வகையில் நாங்கள் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.
    • சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க. பொதுக்குழுவில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.

    திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழுவில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி.க்கு கூடுதல் பதவியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணைப் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்த ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் 2-வது முறையாக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

    • திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
    • திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும்.

    அதன்படி தி.மு.க.வில் கடந்த 6 மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடந்து வந்தது. இதில் கிளை கழக நிர்வாகிகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு பேரூர் வாரியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    இதன் பிறகு ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், மாநகர, மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூட்டம் இன்று காலையில் சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

    இந்த பொதுக்குழுவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 4100 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்கத்துக்கு வந்து அமர்ந்திருந்தனர். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் பகுதியை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 மணியளவில் பொதுக்குழுவுக்கு வந்தார். அவர் வந்தபோது தொண்டர்கள் ஆரவாரம் செய்து தலைவர் வாழ்க என முழக்கமிட்டனர்.

    அவர் வந்ததும் பொதுக்குழு காலை 10.15 மணிக்கு கூடியது. பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வு முதலில் நடைபெற்றது.

    ஏற்கனவே இந்த பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் (7-ந்தேதி) பெறப்பட்டிருந்தது. இதில் கட்சி தலைவர் பொறுப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவரது பெயரில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    இதே போல் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு துரை முருகனும், பொருளாளர் பொறுப்புக்கு டி.ஆர். பாலுவும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 4 தணிக்கை குழு உறுப்பினர் பதவிகளுக்கும் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலையில் கூடிய பொதுக்குழுவில் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கான நிகழ்ச்சி முதலில் நடை பெற்றது.

    இதற்காக தேர்தல் நடத்தும் ஆணையரான முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை தலைமை கழகம் நியமித்தி ருந்தது. அவர் மேடைக்கு வந்து அமர்ந்து தேர்தல் முடிவை அறிவித்தார்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கழகத்தின் 15-வது பொதுக்குழு தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பை கேட்டதும் பொதுக்குழு உறுப்பினர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    தலைவர் தளபதி வாழ்க என்று முழக்கமிட்டனர். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை மேடைக்கு வந்து அமருமாறு ஆற்காடு வீராசாமி அழைப்பு விடுத்தார். அவர் மேடைக்கு வந்ததும் தலைமை கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து அவர்களும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    பின்னர் 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு தமக்கு வழங்கிய சிறப்பு அதிகாரம், உரிமையின் அடிப்படையில் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர்களை நியமனம் செய்தார்.

    இதன் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை தி.மு.க. முன்னோடிகள் வாழ்த்தி பேசினார்கள். இறுதியில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    2-வது முறையாக தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் பேச ஆரம்பிக்கும் போது பொதுக்குழு உறுப்பினர்கள் தளபதி வாழ்க என்று மீண்டும் முழக்கமிட்டனர். அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டனர். அவர் பேசி முடித்ததும் தளபதி வாழ்க என்று மீண்டும் முழக்கமிட்டனர்.

    பொதுக்குழுவில் 4100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் அவர்களுக்கு சைவ-அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இதற்காக 2 தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    தி.மு.க. பொதுக்குழுவை காண்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் வெற்றி பெறும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும். அதன்பிறகு தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும்.

    இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று தெரிகிறது. இந்த பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    • தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்து.
    • இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு.

    அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்தானது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து, வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    • நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என்று நீதிபதி கூறினார்.
    • வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓபிஎஸ் சார்பில் தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில், நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்த ஓபிஎஸ் தரப்புக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜூலை 11-ம் தேதி உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் விதமாக செயல்பாடு உள்ளது எனவும் அவர் கூறினார். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் முறையிட்டு இருக்கலாம். ஆனால் இவ்வாறு செய்தது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என்றும் அவர் கூறினார்.

    மேலும், அதிமுக பொதுக்குழு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரணை நடத்துகிறார். வைரமுத்து தரப்பில் கோரிக்கையை ஏற்று வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ×