என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நூல்கள்"
- டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.
- கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.
மன்னார்குடி:
மன்னார்குடி அடுத்த வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார்.
வேளுக்குடி ஊராட்சி தலைவர் நீலமணி பிரகாஷ், சித்தனக்குடி ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் ராசகணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்:-
மாணவர்கள் பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசிப்பழக வேண்டும். பிழையின்றி தமிழ் எழுத அடிப்படையாக பாட நூல்களை கடந்து நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும்.
இலக்கிய படைப்புகளை தந்த ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளிலேயே தனிச்சிறப்பு பெற்ற சொற்களை கொண்ட தஞ்சை வட்டார வழக்கு சொற்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
நிறைய திருமுறை பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள், நீதி இலக்கியங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் அறிவியல் ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
- புத்தக திருவிழாவில் மொத்தம் 1.25 லட்சம் போ் வருகை தந்தனா்.
- தஞ்சாவூா் மாவட்டத்தை சாா்ந்த 60 எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.
இதில், முன்னணி பதிப்பகங்கள், நூல் விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டன.
இதில், நாள்தோறும் சுமார் 11 ஆயிரம் பேர் வருகை தந்தனா்.
இந்நிலையில், இந்தப் புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.
நிறைவு நாளில் நடைபெற்ற சிந்தனை அரங்கத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:
கடந்த 11 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் 50 ஆயிரம் பேரும், கல்லூரி மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 50 ஆயிரம் பேரும் என மொத்தம் 1.25 லட்சம் போ் வருகை தந்தனா்.
இந்த விழாவில் மொத்தம் ரூ. 1.50 கோடி அளவில் நூல்கள் விற்பனையாகின. உணவு அரங்கில் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
நிகழாண்டு புத்தகத் திருவிழாவில் தஞ்சாவூா் படைப்பாளா்களுக்காகத் தனி அரங்கம் அமைக்க ப்பட்டது.
இந்த அரங்கில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த 60 எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றன.
காலையில் நடைபெற்ற இலக்கிய அரங்கத்தில் உள்ளூரைச் சோ்ந்த 31 அறிஞா்கள் பங்கேற்றனா்.
அஞ்சல் சேவை மூலம் ஏறத்தாழ 50 நூல்கள் அனுப்பப்பட்டன.
சிறைவாசிகளுக்கான புத்தக தானம் திட்டத்தில் 3 ஆயிரம் நூல்களை பொதுமக்கள் அளித்தனா்.
அரசுப் பள்ளிகள், இல்லங்களுக்கு ஆயிரத்து 500 நூல்கள் தானம் செய்யப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் சுமாா் ஆயிரத்து 500 மாணவா்கள் பங்கேற்றனா்.
தென்னகப் பண்பாட்டு மையம், கலை பண்பாட்டு துறை ஆதரவுடன் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சுமார் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவுக்கு உணவு அரங்கமும், பண்பாட்டு அரங்கமும் மேலும் பெருமை சோ்த்தது.
தஞ்சாவூா் மக்களின் மாபெரும் ஆதரவால் இந்த புத்தகத் திருவிழா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் சிவராமன் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் கோபால கிருஷ்ணன், தாமரை பன்னாட்டுப் பள்ளி தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.
- நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
- 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மொழிஞாயிறு தேவநேயப் பாவணாரின் பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா மதுரை அண்ணாநகர் அருகே உள்ள அவரது மணிமண்ட பத்தில் நடை பெற்றது. உலக தமிழ் கழக தலைவர் நிலவழகன் தலை மை வகித் தார். பொது செயலாளர் இளந்திரையன் வரவேற் றார்.
நெறியாளர் கதிர் முத்தை யன் கொடியேற்றினார். இணத்தலைவர் தமிழ் வாணன், இணை பொதுச் செயலாளர் இளங்கோவன், துணைத் தலைவர் சக்கர பாணி, தலைமையக செய லாளர் கீரைத்தமிழன், கணக் காய்வாளர் இளஞ் சேட் சென்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்-இந்தோ ஐரோப் பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்ட இயக்குநர் பூங்குன்றன் பாவாணரியல் நூல்களை வெளியிட முதல் பிரதியை சிறப்பு நிலை பதிப்பாசிரியர் ஆல்துரை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன் பேரவை செந்திலை கவுதமன் சிறப்பு ரையாற்றினார்.
உலக தமிழர் கழக தலைமையக செயலாளர் மன்னர் மன்னன், மதுரை மாவட்ட அமைப்பாளர் சீவா பாவா ணர் (எ)சோழன்( பாவாணர் பேரன்) ஆகியோர் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்தனர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- மதுரை வாடிப்பட்டி திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கி வள்ளலாரின் நூல்களை வழங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பாக வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் தனபாலன் தலைமை தாங்கி வள்ளலாரின் நூல்களை வழங்கினார். உலக நல சத்திய ஞான சித்தாந்த சபை நிர்வாகி பழக்கடை பாண்டி, காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கண்ணதாசன் இலக்கியபேரவை தலைவர் கவிஞர் பொன் கலை தாசன் வரவேற்றார். திருவள்ளுவர் மன்ற செயலாளர் முனைவர் நவநீதகிருஷ்ணன் வள்ள லார் உருவபடத்திற்கு மாலை அணிவித்தார். பொருளாளர் வக்கீல் சந்திர சேகரன் பசிபிணியை போக்கும் பொங்கல் அன்னதானம் வழங்கினார். இதில் ஆட்டோ கண்ணன், ராமராஜசேகரன், குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவக்குமார் நன்றி கூறினார்.
- பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
- மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-
புத்தக கண்காட்சி பன்முகத் தன்மையுடன் நடந்து வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.
இதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டரின் சிறந்த முயற்சிக்கும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்