என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணிக்கம் தாகூர்"
- பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.
விருதுநகர்:
காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த அரசு கள்ளச்சாராயத்தையும், போதை பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அரசுடன் காங்கிரஸ் கட்சி இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் மது இல்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும். தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது. அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தை வஞ்சிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வராமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து என்றைக்கு இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என தெரியவில்லை.
பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகின்றது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்துகின்றது என மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பாராட்டினார். தமிழகத்தை பொறுத்தமட்டில் அறிவார்ந்த மக்கள் உள்ளதால் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.
எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் அது யூடர்ன் எடுக்கின்றது. அல்லது நிலைக்குழுவிற்கு அனுப்பப்படுகின்றது. 2024 தேர்தலுக்கு பின்பு அந்த வீரவசனம் எல்லாம் முடிந்துவிட்டது. ஆந்திராவில் கடந்த ஆட்சியாளர்கள் திருப்பதி உண்டியலில் கை வைத்து விட்டார்கள் என பவன்கல்யாண் புகார் கூறியுள்ளார். பவன்கல்யாண் பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இருக்கின்றார். அவர்கள் ஆட்சிக்கு வரும் போது பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ரூ.2,000 நிதி, படிக்கின்ற குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.6,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதனை மறக்கடிக்க மத அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை ஆந்திர மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, நாகேந்திரன். நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ஏழைகளுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
- ரூபாய் தாள்கள் மக்களுக்கு கிடைப்பதை தடுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவது ஆகும்.
இந்தியாவில் 10, 20 மற்றும் 50 உள்ளிட்ட குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஏழைகளுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதை குறைந்துள்ளதால் சிறு குறு தொழில்கள், தினகூலி வேலை செய்து வருமானம் ஈட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
அன்றாட தேவைகளுக்கு அத்தியாவசியமான ரூபாய் தாள்கள் மக்களுக்கு கிடைப்பதை தடுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவது ஆகும். பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்த இந்த குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
ஆனால் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்புக்கான வழிவகை இல்லை. எனவே ரிஷர்வ் வங்கிக்கு நேரடி அழுத்தம் கொடுத்து குறைந்த மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Wrote a letter to Hon'ble Finance Minister @nsitharaman regarding the severe shortage of Rs. 10, 20, and 50 denomination notes, which is causing hardship in rural and urban poor communities. Urging for immediate intervention to resume 1/2 pic.twitter.com/NEYXsIOZ9d
— Manickam Tagore .B??மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 21, 2024
- அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
- செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேசிய இந்த வீடியோவை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "செபி தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை பேசியதை வரவேற்கிறோம். பிரதமர் மோடி தனது கட்சி மாநிலத் தலைவரின் பேச்சைக் கேட்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக் குழு உடனடியாக இதை விசாரிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
- இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலத்தவன் வழக்கம்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.
ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். வாக்கு என்னும் மையத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் சென்னையில் சின்ன பையனா இருந்தா என்ன என்று பிரேமலதா பேசுகிறார். இது என்ன வடிவேல் படமா" இது பாராளுமன்ற தேர்தல். இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவின் வழக்கம். வேண்டுமானால் அவர் சட்ட போராட்டம் நடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார் .
மேலும் பேசிய அவர், "மோடியின் பதவியேற்பு விழாவில் அதானியும் அம்பானியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதானி அம்பானிகளுக்கானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலோடு பாஜக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வரும். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் நிர்வாக தோல்வி" என்று பேசியுள்ளார்.
- பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
- ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார்.
சிவகாசி:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களிடம் ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு அதிக உரிமை உள்ளது. வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும், அதில் மாணிக்கம் தாகூர் அமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது பட்டாசு பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாகவும், சம்பளம் 400 ஆகவும் உயர்த்தி தரப்படும். தேர்தல் முடிந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை திட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் செயல்படுகிறது. பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
அதனைப் போன்று ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும். அதற்காக பத்திரம் ஒன்று எழுதி உறுதி கொடுத்துள்ளார் என்றார். பிரசாரத்தில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கைச்சின்னத்தில் வாக்களித்து சமூக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது.
- மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், ஹார்வி பட்டி, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.ஆயிரத்திற்கு மேல் சென்று விட்டது. தற்போது தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்தவர்கள், மீண்டும் வெற்றி பெற்றால் சமையல் கேஸ் விலையை ரூ.2000 ஆக உயர்த்தி விடுவார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும். இது தவிர மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து செய்யப்படும். மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல ஏழைகளுக்கு ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு ஊரக வேலை உறுதித்திட்டம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். மேலும் அதற்கான ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதே போல இளைஞர்களுக்கு மத்திய அரசில் 30 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும். எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் பிரதமராகும் வகையில் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், பகுதி செயலாளர் உசிலை சிவா, மண்டல தலைவர் சுவிதா, மண்டல தலைவர் கவிதா விமல், அணி அமைப்பாளர்கள் விமல், ஆலங்குளம் செல்வம், கீழக்குயில்குடி வி.ஆர். செல்வந்திரன், காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் எம்.பி.எஸ். பழனிக்குமார், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், கரு வேலம்பட்டி வெற்றி, சாமி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு.
- கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.
விருதுநகர்:
இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குளம், செக்கானூரணி, கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தீவிர வாக்கு சேரித்தார். செக்காலூ ரணியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையணிவித்து அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு. இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும். யார் வரக்கூடாது தீரமானிக்கும் தோதல். 100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்றும் பிரதமர் வேண்டுமா? அல்லது 100 நாள் வேலையை முடித்து வைக்கிற பிரதமர் வேண்டுமா? என்பதை பொதுமக்கள் யோசித்து பார்க்க வேண்டும். சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தும் பிரதமர் வேண்டுமா? இல்லை ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயாக குறைக்கும் பிரமர் வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். பிரதமர் மோடி 100 நாள் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொன்று வருகிறார். தேர்தல் மூலம் மோடிக்கு நீங்கள் வழியனுப்பு விழா நடத்த வேண்டும். அதற்காக வரும் 19ந் தேதி நீங்கள் கை சின்னத்துக்கு ஓட்டு போடணும். ராகுல் காந்தி பிரதமர் ஆனால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்துவார். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்ச ரூபாய் ஆண்டுக்கு கிடைக்கும். 10 கோடி பெண்களுக்கு இந்த திட்டம் கொடுக்க போகிறார். இந்த திட்டத்தில் பெண்கள் திரளாக சேர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கப்பலூர் அருகே உச்சப்பட்டியில் மாணிக்கம் தாகூர் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில், கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.
டோல்கேட்டால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கப்பலூர் டோல்கேட் மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார்.
- மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது.
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சூலக்கரை, சின்னவள்ளி குளம், மாசி நாயக்கன்பட்டி குல்லூர் சந்தை, ராமசாமிபுரம் பால வநத்தம், கோவிலாங்குளம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் முடிந்ததும் மனு செய்தால், உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார் . இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாகவும், சம்பளத்தை 400 ஆக உயர்ததவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்வு வளம் பெறும். மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனப் பேசினார். பிராசரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.
- பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது.
விருதுநகர்:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியனில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டாசு தொழில் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பட்டாசு தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு ஆதரவு தேவை.
ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். இந்தியாவில் 10 கோடி பெண்களுக்க வருடந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களிடம் பணம் இருந்தால் குடும்பம். ஊர், மாவட்டம், மாநிலம், நாடு நன்றாக இருக்கும்.
எனவே தான் ராகுல் காந்தி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது. அவர்களுக்கு ரூ.17 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதானி, அம்பானி போன்றவர்களுக்காக பாஜக செயல்படுகிறது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏழை தாய்மார்களின் அரசாக இருக்கும். எனவே என்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
- பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அவருக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நான் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் தீவிர ஆதரவாளர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
வருகிற 24-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
அவர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.
இந்த சந்திப்பு வருகிற 31-ந் தேதி வரை தொடரும் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
இதில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாத்தா காந்தி கடந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.
- பிரதமர் மோடி இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசும்போது மகாத்மா காந்தி- பிரதமர் மோடி ஆகியோரை ஒப்பிட்டு கூறினார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசும்போது "மகாத்மா காந்தி கடந்த நூற்றாண்டின் மாமனிதர். பிரதமர் மோடி இந்த நூற்றாண்டில் சிறந்த மனிதர்.
உண்மை மற்றும் வன்முறையைற்ற வழியில் ஆங்கிலேயர் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தார். பிரதமர் மோடி நாம் பார்க்க விரும்பிய வளர்ச்சியில் நாட்டை கொண்டு வந்துள்ளார்." என்றார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கம் பதிவில் "மகாத்மா காந்தியுடன் நீங்கள் ஒப்பீடு செய்தது வெட்கக்கேடானது சார். ஒருவரை உயர்த்தி பேசுவதற்கு ஒரு எல்லை உண்டு என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தற்போது அந்த எல்லையை நீங்கள் மீறிவிட்டீர்கள். உங்களது பதவி மற்றும் நிலைக்கு இப்படி துதி பாடுவது மதிப்பை சேர்க்காது" எனத் தெரிவித்துள்ளார்.
ஜக்தீப் தன்கர் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். அப்போது அதிகாரம் யாருக்கு என்பதில் மம்தா பானர்ஜிக்கும்- இவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவர்னர் ஒப்புதல் வழங்காதது மக்கள் நலனுக்கு எதிரானது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். கல்விக்கடன் விருதுநகரில் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி யளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் ரூ. 143 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ. 9 கோடியே 5 லட்சம் மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய அரசு கல்வி கடனில் கவனம் செலுத்தாததை காட்டுகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மாவட்டத்தில் ரூ. 120 கோடி வரை கல்விக்கடன் வழங்கப்பட்டது. ரூ.143 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில் தமிழக அரசு திட்டத்தினை செயல்படுத்த குழு அமைத்து அதற்கு தேவையான நிதியினை நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்கும் நிலையில் விவசாய காலம் தவிர பிற நாட்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு எதிரான ஆன்லைன் ரம்மிதடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர் பாத்திமா நகரில் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்