search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலங்கு"

    • ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் நடந்தது.
    • அப்போது பேசிய சந்திரபாபு, திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது கண்டு அதிர்ந்தேன் என்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில், ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் பேசியதாவது:

    திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.

    திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம் என தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடு முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
    • இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுப்போக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கருடன்' படத்தை தொடர்ந்து, கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

    'ஹாட்ரிக் கமர்சியல் ஹீரோ' சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.

    இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    சூரி -பிரசாந்த் பாண்டியராஜ் -லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால் இந்தத் திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.

     

    இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுப்போக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் ஒன் லைன் கேட்ட சூரி " இந்த மாதிரி ஒரு கதைக்குத்தான் இவ்வளவு நாள் காத்து இருந்தேன் என்று கூறியுள்ளார்.

    படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக தற்பொழுது நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
    • ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.

    குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.

    இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.


    இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.

    இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.

    • நஞ்சப்பன் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த10 ஆடுகளை மர்ம விலங்குகள் கழுத்து வயிறு தொடை பகுதிகளில் கடித்தது. இதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
    • இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் லட்சுமிபுரம் கணபதி நகர் பகுதியில் நஞ்சப்பன் என்பவர் ஆடு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த பகுதி நகர மலை அடிவாரம் ஒட்டி இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த நிலையில் நேற்று இரவு நஞ்சப்பன் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த10 ஆடுகளை மர்ம விலங்குகள் கழுத்து வயிறு தொடை பகுதிகளில் கடித்தது. இதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

    காலையில் ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்த நஞ்சப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆடுகளை கடித்த விலங்கு என்ன? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம விலங்கு நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • ஒரு கன்று குட்டியும் பசுவும் தப்பின.
    • வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உடுமலை :

    உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி சடைய கவுண்டன் புதூர். இங்குள்ள தோட்டத்தில் வசிக்கும் ராமசாமி மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இவரது தோட்டத்தில்இருநாட்களுக்கு முன்பு அதிகாலையில் தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்குகள் இரண்டு கன்று குட்டிகளை கடித்து கொன்று விட்டன. ஒரு கன்று குட்டியும் பசுவும் தப்பின. இது தொடர்பாக அந்தியூர் ஊராட்சியினர் மற்றும் வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதியில் மர்ம விலங்கு கடித்து மாடுகள் இறந்துள்ளன. வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது இரண்டு கன்று குட்டிகள் இறந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×