search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் மறுப்பு"

    • சட்டம் அதை மோசடி என்று கூறவில்லை.
    • ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள சப் இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார்.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டர் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த 2021 இல் போலீசில் புகார் அளித்தார். கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை மருந்துகளை அவர் தனக்கு கொடுத்ததாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவிதிர்ந்தார்.

    இந்த வழக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு முதல் உறவிலிருந்தனர். இருவரும் தங்கள் சம்மதத்துடன் ஒரு உறவில் நுழைந்தனர். ஆனால் இந்த உறவு திருமணமாக மாறவில்லை. அது தனிப்பட்ட குறைகளால் இருக்கலாம், ஆனால் காதல் தோல்வி ஒரு குற்றமல்ல. தனிப்பட்ட ஏமாற்றத்தை சட்டம்  மோசடி என்று வரையறுக்கவில்லை என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

    மேலும், நமது சட்ட அமைப்பு மற்றும் அதை வடிவமைக்கும் சமூக உணர்வு இரண்டிலும், உடல் உறவு மற்றும் திருமண பந்தங்களை பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு பெண்ணின் பாலியல் தேர்வு ஒரு ஆண் தரும் திருமண உறுதிப்பாட்டுடன் பிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உருவாக்குகிறது. திருமணம் என்பது ஒரு இலக்கு அல்ல. உறவையும் திருமணத்தையும் கலப்பது என்பது மனித உறவுகளைப் பழமையான எதிர்பார்ப்புகளில் சிறை வைப்பதாகும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    • கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார்
    • இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேசம் சத்தர்பூரில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர், தன்னை பக்கத்து வீட்டை சேர்ந்த வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தித்தார்.

    இதைத்தொடர்ந்து வீரேந்திர யாதவ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான எப்ஐஆரை எதிர்த்து வீரேந்திர யாதவ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த மனு  நீதிபதி எம்.எஸ்.பாட்டி அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வீரேந்திர யாதவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, திருமணமான ஒரு பெண், பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூற முடியாது என்று வாதிட்டார்.

    பதிவுசெய்யப்பட்ட எப்ஐஆரில் புகார் கொடுத்த பெண்ணுடைய வாக்குமூலத்தை நீதிபதி ஆராய்ந்தார். அதில், இளைஞனுடன் மூன்று மாதங்களாக தான் உறவு கொண்டிருந்ததாக அப்பெண் விவரித்துள்ளார். தனது கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார் என்றும், அவர்கள் ஒருமித்த உடல் உறவுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தங்கள் உறவில் வற்புறுத்தலோ அல்லது கட்டாயப்படுத்தலோ இல்லை எனவும் அந்த பெண்ணே கூறியுள்ளார். இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் அந்தப் பெண் பொய்யான வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதற்கான நேரடி அறிகுறி எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதி திருமணம் ஆன பெண்ணுக்கு பொய்யான திருமண வாக்குறுதியை அளித்து உடல் உறவுக்கு மனுதாரர் சம்மதம் பெற்றார் என்பது தவறான புரிதல் என கூறி அவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்து இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டார். 

    தமிழரசனுக்கும் அவரது உறவினர் ெபண்ணுக்கும் திருவந்தி புரம் கோவிலில் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குழந்தைக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மகன் தமிழரசன்(29).பி.காம் பட்டதாரி. இவர், குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அப் பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் தமிழரசன் அப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அப் பெண் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தமிழரசனுக்கும் அவரது உறவினர் ெபண்ணுக்கும் திருவந்தி புரம் கோவிலில் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்துதமிழரசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குழந்தைக்கு தாயான நிலையில் இளம்பெண் திருமணத்துக்கு மறுத்துள்ளார்.
    • மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை கீழச்சந்தை பேட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அதில், நான் மேல அனுப்பானடி, வீட்டு வசதிவாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தேன். அவர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அடிப்படையில், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    நான் கர்ப்பம் ஆனேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த வாலிபர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். போலீசார் இதில் தலையிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல அனுப்பானடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×