என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிமெண்டு சாலை"
- சிமெண்டு சாலை பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
- பணிகளின் நிலை குறித்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் அவரிடம் விளக்கி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மானா மது ரையில் 27 வார்டுகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் சாலை, தார்சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், சிமிண்ட்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகிறது.
இதில் சிவகங்கை ரோட் டில் இருந்து அண்ணாமலை நகருக்கு எளிதாக செல்லும் வகையில் சுப்பன் கால்வாய் அருகில் நடைபெறும் புதிய சிமெண்ட் சாலை பணி களை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிக ளின் நிலை குறித்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் அவரிடம் விளக்கி கூறினார்.
இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்த காரர்களை தலைவர் மாரி யப்பன் கென்னடி அறிவுறுத் தினார். இந்த ஆய்வின்போது துணைத் தலைவர் பாலசுந்த ரம், ஆணையாளர் ரெங்க நாயகி, வார்டு உறுப்பினர்கள் இந்துமதி திருமுருகன், கங்கா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
- ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
- அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக உள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இதில் மங்களம் கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டு, குழியுமாக காணப்பட்டது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று என்.என்.டி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது
கலவை:
மேல்விஷாரம் நகராட்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் அஞ்சுமன் தெரு மற்றும் பெரிய மசுதி தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
இதற்கான கல்வெட்டினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
இதில் கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, நகரமன்றத் தலைவர் முஹமது ஹமீன், துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, நகராட்சி ஆணையாளர் (பொ) சந்தானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
- ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பெரப்பேரி ஊராட்சியில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு சாலை அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன், துணைத்தலைவர் சுமதி ஐயப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- டாக்டர் அம்பேத்கார் நினைவு நுழைவுவாயில் ஒன்றினை ஒன்றிய குழு உறுப்பினர் தனது சொந்த நிதியில் அமைத்துக்கொடுத்தார்.
- பேண்ட்-வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் பெருமாள் கோவில் வரையில் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. எல்லாபுரம் ஒன்றிய குழு 18-வது வார்டு உறுப்பினர் ஜி.சரவணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில், ரூ.7 லட்சம் செலவில் டாக்டர் அம்பேத்கார் நினைவு நுழைவுவாயில் ஒன்றினை ஒன்றிய குழு உறுப்பினர் தனது சொந்த நிதியில் அமைத்துக்கொடுத்தார்.
இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக (ஓபிஎஸ் அணி) செயலாளரும், எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினருமான ஜி.சரவணன் தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் லிட்டில், 5-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், அதிமுக அம்மா பேரவை மாநில செயலாளர் வேதாரண்யம் மோகன்குமார், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம் ஆகியோர் கலந்து கொண்டு சிமெண்ட் சாலை மற்றும் நுழைவுவாயிலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர்.
இதன் பின்னர், பேண்ட்-வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் பெருமாள் கோவில் வரையில் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், தாமரைப்பாக்கம் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
- சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாய்கடை ஹாப்பிவேலி பகுதியில் சுமார் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உபயோகித்து வந்த சிமெண்ட் சாலை பழுதடைந்ததால் அதனை சரி செய்து தர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் மனு மூலமாக கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.
பழுதடைந்த சாலை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நுழைவு வரி திட்டம் மூலம் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். அதன் மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
5 மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த சாலையில் சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை 5 மாதத்தில் பெயர்ந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
- பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, அண்ணா நகர் 3வது வார்டுக்கு உட்பட்ட ஆற்று பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
அதனை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டது.
அதேபோல், 15 வார்டுகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், அரசின் இலவச வீடு வழங்குதல், மினி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
மேலும், குடிநீர் பைப்புகளில் அடிக்கடி ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகிற 5 ம் தேதி முனீஸ்வரன் கோவில் கும்பா பிஷேகம் நடைப்பெ றுவதால் அதற்கான சாலையை சீரமைத்து தரவேண்டும். பக்தர்கள் வாகனத்தில் வரும் போது போக்கு வரத்துக்கு ஏற்றவாறு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக சாலை அமைத்து தருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உறுதியளித்தார்.
- ஜோதி எம்.எல்.ஏ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு:
செய்யாறு ஊராட்சி ஒன்றியம், வட தண்டலம் கிராமம் கன்னிகாபுரம் பகுதியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலையை நேற்று ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், கவுன்சிலர் ஞானவேலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடந்த மாதம் 28-ந் தேதி செய்யாற்றை வென்றான் கிராமத்தில் வெறி நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியானதில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதன் உரிமையாளர் கலைமணி குடும்பத்தாருக்கு ஜோதி எம்.எல்.ஏ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்