என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பிரஸ் ரெயில்"

    • ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்கள் நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
    • தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் யார்டு பகுதியில் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ரெயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வருகிற 13-ந் தேதி ஈரோடு - நெல்லை செல்லும் விரைவு ரெயில் (வ.எண்.16845) திண்டுக்கல்- நெல்லை இடையேயும், நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (வ.எண்.16846) நெல்லை,திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    கோவை-நாகர்கோவில் சந்திப்பு விரைவு ரெயில் (வ.எண்.16322) திண்டுக்கல் நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில் சந்திப்பு- கோவை விரைவு ரெயில் (வ.எண்.16321) நாகர்கோவில் - திண்டுக்கல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    பாலக்காடு சந்திப்பு- திருச்செந்தூர் விரைவு ரெயில் (வ.எண்.16731) திண்டுக்கல்-திருச்செந்தூர் இடையேயும், திருச்செந்தூர்- பாலக்காடு சந்திப்பு விரைவு ரெயில்

    (வ.எண்.16732) திருச்செந்தூர், திண்டுக்கல் இடையேயும், பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரெயில் (வ.எண்.22627) திருவனந்தபுரம் இடையேயும், திருவனந்த புரம்-திருச்சி விரைவு ரெயில் (வ.எண்.22628) திருவனந்தபுரம், விருதுநகர் பகுதியாக ரத்து இடையேயும் செய்யப்படும்.

    மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் விருதுநகர், தூத்துக்குடி இடையேயும், தூத்துக்குடி - மைசூர் செல்லக் கூடிய விரைவு ரெயில், (வ.எண்.16235) தூத்துக்குடி, விருதுநகர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    தாம்பரம்-நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20691) திருச்சி-நாகர்கோவில் சந்திப்பு இடையேயும், நாகர்கோவில்-தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.20692) நாகர்கோவில், திருச்சி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    குருவாயூர்-சென்னை எழும்பூர் செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண்.16128) நாளை (12-ந் தேதி) நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.

    நாகர்கோவில் சந்திப்பு- மும்பை சி.எஸ்.எம்.டி. செல்லக்கூடிய விரைவு ரெயில் (வ.எண் 16340) நாளை மறுநாள் 13-ந் தேதி நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக மும்பையை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.
    • மேல்மருவத்தூர் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மேல்மருவத்தூரில் இருந்து இன்று, 8-ந்தேதி, 10-ந்தேதி மற்றும் 15-ந்தேதிகளில் காலை 11.30 மணிக்கு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06725) முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    இதைபோல, மறுமார்க்கமாக அதே தேதிகளில் விழுப்புரத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு மேல்மருவத்தூர் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06726) விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறும் பயணிகள் இருக்கைகளுக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், மோதலில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    அதிலும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மதுரையை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு அல்லாத இரண்டு பெட்டிகளிலும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் நின்றவாறும் பயணம் செய்தனர். இதற்கிடையே படிக்கட்டுகளிலும் இளைஞர்கள் சிலர் தொங்கியவாறும் சென்றனர்.

    அப்போது படியில் அமர்வதில் பயணம் செய்வதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை கண்டித்ததோடு, உள்ளே வருமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவாறு வந்தனர்.

    ஒருகட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விருதுநகரை தாண்டி ஆர்.ஆர். நகர் பகுதியில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    பலியான இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓடும் ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயில் அருகில் வந்தபோது திடீரென முருகேசன் ரெயில் முன்பு பாய்ந்தார்.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சேதுராமன், ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு முருகேசன், முத்தழகு ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் முருகேசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் மதுரை வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வெளியில் சென்றுவிட்டு வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட முருகேசன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் வந்தார்.

    பின்னர் அங்குள்ள வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயில் அருகிலுள்ள தண்டவாளத்தின் ஓரமாக நின்றிருந்தார்.

    அப்போது நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. ரெயில் அருகில் வந்தபோது திடீரென முருகேசன் ரெயில் முன்பு பாய்ந்தார்.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் நள்ளிரவு நேரமாக இருந்ததால் ஒருசில விநாடிகளில் காப்பாற்றக்கூட யாரும் இல்லாத நிலையில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முருகேசன், சென்னையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

    இந்த விபத்து குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கணவரை இழந்த லதா, தற்கொலை செய்துகொண்டு இறந்த மூத்த மகன் முருகேசன் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இதன் பின்புறம் இன்று காலை மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயி லில் அடிபட்டு 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தின் அருகே பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக் டர் கேசவன் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னார். அப்போது அந்த வாலிபர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை.

    அவர் மஞ்சள் நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். பூணூல் அணிந்திருந்தார். சட்டையில் வில்லாபுரத்தில் உள்ள ஒரு டெய்லர் கடையின் பெயர் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அணிந்திருந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு தைத்தது என்பது தெரிய வந்தது. வேறு விவரம் ஏதும் தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்த–வர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாபநாசம் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.
    • கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்பொழுது திடீரென பசு மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது.

    இதில் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.

    இதில் பசு மாடு ரயில் என்ஜினில் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது.

    இதனால் ரெயில் என்ஜின் கோளாறு ஆனது.

    பின்னர் கும்பகோணத்திலிருந்து மாற்று ரயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது .

    இது சம்பவத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்ர மணியம், ஏட்டு ஆறுமுகம் ஆழ்கியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிக்னல் கிடைக்காததால் என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.
    • பயணிகளிடம் முடிந்த வரை நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு இறங்கி ஓடிவிட்டனர்.

    சென்னை:

    ஆந்திராவில் அடுத்தடுத்து 2 சென்னை ரெயில்களை நிறுத்தி மர்ம கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்-சென்னை இடையே ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல இந்த ரெயில் ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    நள்ளிரவு 1.20 மணிக்கு ரெயில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராய கொண்டா மற்றும் கவாலி ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டு இருந்தது.

    இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சிக்னல் கிடைக்காததால் என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

    அந்த சமயம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் கத்தியுடன் ரெயில் பெட்டிகளில் திபு திபு என ஏறினார்கள். அவர்கள் எஸ்-2,எஸ்-4,எஸ்.5-எஸ்6-எஸ்.-7 மற்றும் எஸ்.8 ஆகிய பெட்டிகளில் புகுந்தனர். மர்ம மனிதர்களை பார்த்ததும் தூங்கி கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர்.

    உடனே கொள்ளையர்கள் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்தனர். நகை-பணத்தை கொடுக்க மறுத்த பயணிகளை அடித்து உதைத்தனர். பயணிகள் வைத்து இருந்த விலை உயர்ந்த செல்போன்களையும் பிடுங்கினார்கள். இதனால் பயணிகள் . பயத்தில் அலறினார்கள்.

    கொள்ளையர்கள் கையில் கத்தி வைத்து இருந்ததால் பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். சிலர் தங்களது நகை, பணத்தை திருப்பி தருமாறு கொள்ளையர்களிடம் கெஞ்சினார்கள். பெண்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.

    ஆனாலும் அவர்கள் மனம் இறங்க வில்லை. பயணிகளிடம் முடிந்த வரை நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு இறங்கி ஓடிவிட்டனர்.

    பின்னர்அந்த கும்பல் சிறிது நேரத்தில் அந்த வழியாக செகந்திராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி வந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி எஸ்-1 மற்றும் எஸ்-2 பெட்டிகளில் தூங்கி கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பி கத்தி முனையில் நகை பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதற்குள் இது பற்றி அறிந்ததும் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மர்ம கும்பல் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்கள். போலீசார் அவர்களை சிறிது தூரம் விரட்டி சென்றனர். அப்போது கொள்ளையர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கி விட்டு இருட்டுக்குள் மறைந்து தப்பி விட்டனர்.

    அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களும் நள்ளிரவு 1.20 மணியில் இருந்து 1.50 மணிக்குள் நடந்ததாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    மர்ம கும்பல் சிக்னலை உடைத்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் 2 ரெயில்களும் கவாலி ரெயில் நிலையத்துக்கு சென்றது. பயணிகள் இது தொடர்பாக கவாலி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தனர்.

    கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்ற விவரம் தெரியவில்லை. எத்தனை பேரிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள் என்பதும் தெரியவில்லை. மொத்தம் 30 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் சில நகரங்களுக்கு ரெயிலில் பயணம் நேரம் குறைகிறது. அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள 144 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அனுமதித்து உள்ளதால் வரும் நாட்களில் பயண நேரம் குறைந்தது 20 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

    அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாளம் மற்றும் சிக்னல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பெங்களூர் செல்லும் ரெயில்களின் பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இப்போது வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    இது 4 மணி நேரமாக குறையும். சதாப்பதி அல்லது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் தற்போதுள்ள 6 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் 30 நிமிடங்களாக குறையும். அரக்கோணம்-ஜோலார்பேட்டை இடையே பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் 130 கி.மீ. வேகத்தில் 124 ரெயில்களை இயக்க அனுமதி அளித்து உள்ளது.

    இதுபற்றி ரெயில் இயக்குனரகம் என்ஜின் டிரைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    எல்.எச்.பி. பெட்டிகள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதே வேளையில் ஐ.சி.எப். வடிவமைப்பு பெட்டிகள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடியவை. பல ரெயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள் இருப்பதால் பெங்களூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், மும்பை மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் குறைக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளதால் படிப்படியாக ஒவ்வொரு ரெயில்களையும் அதிவேகத்தில் இயக்க முடிவு செய்யப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

    பெங்களூர் மற்றும் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் சென்னை மற்றும் அரக்கோணம் இடையே 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட பாதையை ஜோலார்பேட்டை வரை நீட்டிப்பதன் மூலம் மற்ற ரெயில்களும் சிறந்த வேகத்தில் இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
    • ஆகஸ்டு 30-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்டு 27-ந்தேதி வரை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 16127) படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

    இதேபோல ஆகஸ்டு 27-ந்தேதி இரவு 9.55 மணிக்கு தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16866), இன்று முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16343), நாளை மற்றும் ஆகஸ்டு 30-ந்தேதிகளில் காலை 8.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16382) கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
    • இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    அரக்கோணம்:

    சென்னை செண்ட்ரல் அரக்கோணம் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் இன்று நடந்தது.

    இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்கள்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்த போது டிக்கெட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவித்தனர். முன் அறிவிப்பு இன்றி திடீரென அறிவித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதுபோன்று தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இன்று காலை 4 மணிநேரம் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    • சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் போக்குவரத்து இயக்கப்படவில்லை.
    • இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேரில் பாார் ஆய்வு செய்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் இருந்து வர்த்தகர்களும், வியாபாரிகளும் தொழில் நிமித்தமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு அதிகமாக செல்ல வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வேதாரண்யம் மற்றும் திருத்து றைப்பூண்டி- அகஸ்தி யம்பள்ளியில் இருந்து சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் ரெயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

    எனவே, அப்பகுதி மக்களும், வணிகர்களும் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வேதாரண்யம் - சென்னைக்கு திருத்து றைப்பூண்டி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

    இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    ×