search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பணி"

    • விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது.
    • பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்படும்.


    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 329 காலி பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு ஐகோர்ட்டு மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை, கல்வித்தகுதிகள், முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

    எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி ஏதாவது ஒரு மாவட்டத்தில் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏனென்றால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒரே விதமான பதவிக்கான பொது எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு ஆகியவை அந்தந்த மாவட்டங்கள் அல்லது வேறு இடங்களில் ஒரே நாளில் நடைபெறும்.

    எனவே விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது. அதே போல் தேர்வு செய்யப்படுவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் மிக கவனமாக மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் (நீதித்துறை) செல்வநாதன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பு, விண்ணப்பத்தாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை ஐகோர்ட்டின் ஆட்சேர்ப்பு இணையதளமான https://www.mhc.tn.gov.in பார்த்து கொள்ளலாம்.

    இந்த பணியிடங்கள் மற்றும் காலி இடங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    நகல் பரிசோதகர் -60 பணியிடங்கள், நகல் வாசிப்பாளர் - 11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 100, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 242, கட்டளை எழுத்தர் - 1, ஒளிப்பட நகல் எடுப்பவர் - 53, டிரைவர்கள் - 27, நகல் பிரிவு உதவியாளர் - 16, அலுவலக உதவியாளர் - 638, தூய்மை பணியாளர் - 202, தோட்ட பணியாளர் - 12, காவலர் - 459, இரவு காவலர் மற்றும் மசால்ஜி - 85, காவலர் மற்றும் மசால்ஜி - 18, தூய்மை பணியாளர் மற்றும் மசால்ஜி- 1, வாட்டர் ஆண் - வாட்டர் பெண் - 2, மசால்ஜி - 402 ஆகும்.

    இந்த பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்படும். நேர்மையற்ற முறையில் வேலை வாங்கித்தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் மோசடியாளர்கள் மற்றும் தரகர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 27-ந் தேதி கடைசி நாளாகும். தேர்வு கட்டணத்தை (மே) 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 94 ஆயிரத்து 630.
    • 46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 94 ஆயிரத்து 630; பெண்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 60 ஆயிரத்து 846; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 290 என மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766 பேராகும்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 87 ஆயிரத்து 537 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 53 ஆயிரத்து 916 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 51 ஆயிரத்து 474 பேர்.

    46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கு 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 98 ஆயிரத்து 879; பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 71 ஆயிரத்து 680; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266 என மொத்தம் 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 பேராகும்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேர்.

    46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 391 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் மத்திய அரசு பணிக்கான தேர்வு இன்று நடந்தது.
    • 67 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை

    மதுரை

    மத்திய அரசின் பொறியியல் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு இன்று காலை நடந்தது. அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் உறுப்புக்கல்லூரி, கோரிப்பாளையம் அரசினர் மீனாட்சி கல்லூரி, கே.கே.நகர் வக்புவாரிய கல்லூரி ஆகிய 3 இடங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

    காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 1087 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 353 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். மீதமுள்ள 734 பேர் (67சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை.

    • ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.
    • மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனருமான அமுதவள்ளி அரசு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் இரா.லலிதா உடனிருந்தார்.

    தரங்கம்பாடி வட்ட அலுவலகத்தில் இசேவை மையத்தை பார்வையிட்டு அலுவலக கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வட்டாச்சியர் புனிதா தாலுகா அலுவலக பணிகள் குறித்து விளக்கினர்.

    அதனை தொடர்ந்து பொறையார் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையை ஆய்வு செய்து அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்கள் ஸ்ரீநாத், சங்கர், ஆகியோர் மருத்துவமனையை சுற்றி காட்டி மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

    அதை தொடர்ந்து தரங்கம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த கழிவறை வசதி, குடிநீர் வசதி இல்லை என்று புகார்கள் தெரிவிக்கபட்டது.

    பொறையார் மருத்துவமனையில் ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.

    அதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் லலிதா தாலுகா அலுவலகத்தில் விரைவில் கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்யபடும் என்றும் மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.

    அதை தொடர்ந்து தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தையும் கோட்டையையும் சுற்றி பார்த்தார்.

    தரங்கம்பாடியில் பேரூராட்சி உதவி இயக்குநர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினர்.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் பையை மாவட்ட கண்காணிப்பு அலவலர் வழங்கினார்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை
    • கட்டையன்விளை பஞ்சபாண்டவர் கோவில் பகுதியில் சாலை பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட கட்டையன்விளை பஞ்சபாண்டவர் கோவில் பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது 7 குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 5 குவாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‌.

    சித்திரங்கோடு பகுதியில் எடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. களியக்கா விளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் எடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கனிமவளங்கள் எடுப்பதில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அரசு பணிகளுக்கு கனிம வளங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேம்.

    அரசு பணிகளுக்கு தேவையான ஜல்லி, எம்சாண்ட் வழங்காத குவாரிகள் மீது கடும் நடவடிக்தகை எடுக்கப்படும். தற்போது ெரயில்வே திட்டப் பணிகளுக்கும் நான்கு வழி சாலை பணிகளுக்கும் கனிவளங்கள் அதிகம் தேவைப்படுகிறது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 39 குவாரிகள் இருந்தது.இதில் பல குவாரிகள் மூடப்பட்டுள்ளது. 6 குவாரி கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அனுமதியில்லா மல் குவாரிகள் எதுவும் செயல்படவில்லை.

    குமரி மாவட்டத்தில் சமீபத்தில் மட்டும் அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களுக்கு இதுவரை ரூ.2.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதம் ஏற்படா மல் சிறிய வாகனங்களில் மட்டுமே கனிம வளங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளோம். கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருந்தது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் கடுமையான போக்குவரத்து தெருக்கடி ஏற்பட்டு வந்தது.அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரவுண்டானா பணி முடிவடையும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடி தீர்வு ஏற்படும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த்மோகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடந்த 11 ஆண்டுகளாக அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, நல்ல ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
    • தினமும் வகுப்புகளுக்குச் செல்லும் விவேக், வகுப்பில் படித்ததை வீட்டில் எனக்கு கற்றுக் கொடுப்பான்.

    திருவனந்தபுரம்:

    கல்வி, வேலைக்கு வயது முக்கியமில்லை. இடைவிடாத முயற்சி தான் தேவை என நிரூபித்துள்ளார் பெண் ஒருவர்.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரியாகோடு தெற்கு புத்தளத்தைச் சேர்ந்தவர் சந்திரன். கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி பிந்து (வயது 41). அங்கன்வாடி ஊழியர். இவர் தான் அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர். இவர் தனது மகன் விவேக்குடன் சேர்ந்து அரசுப் பணி (எல்.ஜி.எஸ்)தேர்வை எழுதினார். இதில் அவர் 92-வது ரேங்க் பெற்றுள்ளார்.

    அவரது மகன் விவேக் 38-வது ரேங்க் வென்றார். இதன் மூலம் தாய்-மகன் இருவரும் அரசு வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர். தான் தேர்வானது குறித்து பிந்து கூறியதாவது:-

    கடந்த 11 ஆண்டுகளாக அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, நல்ல ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

    இதற்காக வீட்டு வேலைகள் மற்றும் அங்கன்வாடி வேலைகளுக்கு மத்தியில் படிப்பதற்கான நேரம் ஒதுக்கி ஆர்வத்துடன் படித்தேன்.

    அப்போது எனது மகனும் பி.எஸ்.சி. புவியியல் படித்துவிட்டு வீட்டில் இருந்தான். இதனால் அவனையும் படிப்புக்கு கூட்டாளியாக்கினேன். 2 பேரும் பயிற்சி மையத்தில் சேர்ந்தோம். ஆனால் நான் வேலை பார்த்ததால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி மையத்திற்கு சென்று வந்தேன்.

    இதற்கிடையில் தினமும் வகுப்புகளுக்குச் செல்லும் விவேக், வகுப்பில் படித்ததை வீட்டில் எனக்கு கற்றுக் கொடுப்பான். தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன், லீவு போட்டுவிட்டு, நானும் மகனுடன் கோச்சிங் சென்டருக்குச் சென்று படித்து தேர்வு எழுதினேன். நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன் என எதிர்பார்த்தேன். தற்போது அது நடந்துள்ளது. மகனுடன் சேர்ந்து ஒன்றாக படித்தது வெற்றியை எளிதாக்கியது. இடைவிடாத முயற்சி அதற்கான பலனை தந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சங்கராபுரத்தில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா நடைபெற்றது.
    • பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் சீனிவாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர், பொது செயலாளர் டாக்டர் பார்த்திபன், பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் மாவட்ட சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதைத் தொடர்ந்து மாநில பொது செயலாளர் சந்திரகுமார், செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் தொகுப்பூதியம், தற்காலிக, நீண்டகால ஒப்பந்தம், சிறப்பு கால முறை ஊதியம் ஆகிய அடிப்ப டையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலி யர்கள், ஊர்புற நூலகர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போன்ற ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்து தர முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள். இதில் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
    • பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.

    4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.

    இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.

    உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    ×