என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலத்தகராறு"
- பலத்த காயம் அடைந்த மகபூபியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிலானியை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலத்தகராறில் சொந்த அக்காவை கோடரியால் கொடூரமாக தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
கர்லாடின்னே மண்டலத்தில் உள்ள பெனகசெர்லா கிராமத்தில் நேற்று, வீட்டு மனை தொடர்பான தகராறில், ஜிலானி என்பவர் தனது சகோதரியான மகபூபியை கோடரியால் தாக்கினார். அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும், சகோரியின் அழுகுரலுக்கு மத்தியிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த மகபூபியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிலானியை கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மகபூபி வசித்து வந்த பெனகசெர்லா கிராமத்தில் உள்ள வீடு தொடர்பாக தகராறு இருந்ததாகவும், ஜிலானி தனது சகோதரியை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ந்து மிரட்டி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
- சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.
இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
- பிரியங்காவுக்கும், சுனந்தா வுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அகரம் அருகே உள்ள கெம்பேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுனந்தா (வயது 44). இவர்களது மகள் பிரியங்கா (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (37). இவரது மனைவி மஞ்சுளா (31). இவர்கள் பிரியங்காவின் உறவினர்கள் ஆவார்.
இருதரப்பினருக்கும் அதே பகுதியில் சொந்தமாக விவசாயம் நிலம் உள்ளது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பிரியங்காவும், அவரது தாயார் சுனந்தாவும், நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மஞ்சுநாத் அவர்களிடம் கேள்வி கேட்டதில், அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, மஞ்சுநாத், பிரியங்காவையும், அவரது தாயாரையும், கைகள் மற்றும் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கி மிரட்டினார். இதன் காரணமாக, பிரியங்கா வுக்கும், சுனந்தா வுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
- 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை
- புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இருசன் மனைவி செல்வி (வயது 41), இவர் அதே நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவனிடம் 10 சென்ட் நிலம் கிரையம் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வி, சகாதேவன் குடும்பத்தினரிடம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் எழுந்த பிரச்சனையில் சின்ன சேலம்போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் செல்விக்கு சேர வேண்டிய இடத்தில் சகாதேவன் குடும்பத்தினர் கல், மண் கொட்டி உள்ளனர். அதைப் பார்த்து செல்வி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது கோபம் அடைந்த சகாதேவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சகாதேவன் மகன் மணிகண்டன் இவரது மனைவி கலையரசி சகாதேவனின் மனைவி அங்கம்மாள் மற்றும் உறவினர்கள் ராஜேந்திரன், விண்ணம்மாள், மணிவேல், செல்வம், மணிமாறன், சகாதேவன், பார்த்தசாரதி, வெங்கடேசன், பாஞ்சாலை, சங்கர், உள்ளிட்ட 13 பேர் செல்வியிடம் தகராறு செய்து அசிங்கமாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து செல்வி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சின்ன சேலம் போலீசார் செல்வியை தாக்கிய 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பலத்த காயம் அடைந்த குப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
- நிலத்தகராறில் பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 47). விவசாயி. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கிளை தலைவராகவும் இருந்து வந்தார்.
இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வேணு மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோர் அதே பகுதியில் நிலம் வாங்கி இருந்தனர்.
இந்த சாலை வழியாக குப்பன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த இடம் தொடர்பாக குப்பனுக்கும், வேணுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பொது வழி பாதையை வேணு மற்றும் சரவணன் ஆகியோர் டிராக்டர் மூலம் ஊழுததாக தெரிகிறது. இதற்கு குப்பன் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார்.
இதனால் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேணு, அவரது மகன் சரவணன் வேணுவின் மனைவி பூங்கா வனம், மற்றும் அவர்களது உறவினரான முனியம்மாள் ஆகியோர் சேர்ந்து குப்பனை கட்டையால் தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த குப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் வேணு, பூங்காவனம், முனியம்மாள் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
நிலத்தகராறில் பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார்.
- 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
விழுப்புரம்:
மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் ஓமிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 42). விவசாயி. இவர் கடந்த 22-ந்தேதி தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் செல்வம் (57) மோகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரை யும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வம் நடந்தவைகளை குடும்பத்தா ரிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வெண்ணிலா, மகன்கள் ஆனந்து, அரி மற்றும் உறவினர்கள் செல்வத்தை மோகன் வீட்டிற்கு அழைத்து சென்று தகராறில் ஈடுபட்டனர்.
இதில் செல்வம் குடும்பத்தார் மோகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மோகன் புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது வீட்டிலிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
- Arrested for assaulting mother-brother over land dispute near ரிஷிவந்தியம் கைது செய்யப்பட்டார்.
- வீரம்மாள் முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார்
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது50). இவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தை தனது மகன்கள் ஏழுமலை(30), முனியன்(28) ஆகியோருக்கு சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் மொத்த நிலத்திலும் ஏழுமலை விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீரம்மாள், ஏழுமலையிடம் உன்னுடைய பங்கில் மட்டும் விவசாயம் செய்ய வேண்டும், முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோர் வீரம்மாளை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்த முனியனையும் அவர் தாக்கியதாக தொிகிறது. இதுகுறித்து வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, கிரிஜா ஆகிய 2 பேர் மீது ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- திருநாவலூர் அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
- ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கங்கை அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 36). விவசாயி. இவருக்கும் இவருடைய சகோதரர் அன்னப்பன் (40), இருவருக்கும் சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ராஜாராமன் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு வரப்பை மண்வெட்டியால் கழித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அன்னப்பன் ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அண்ணப்பன் கையில் வைத்திருந்த ஸ்பிரேயர் மிஷின் பைப்பால் ராஜாராமன் கழுத்தில் அடித்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜாராமன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோக த்தையும் ஏற்படுத்தியது. மேலும், அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
- நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி பாதர்.
முருகேசன் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும் அவரது தம்பி பாதருக்கும் இடையே கடந்த 5 ஆண்டாக நிலம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை விவசாயி பாதரின் வீட்டின் அருகே முருகேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது பாதரின் மகன் தினேஷ் குமார் (31), பெரியப்பா முருகேசனிடம், நிலத்தை எப்போது பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த கட்டையால் முருகேசனை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் முருகேசன் இறந்தார்.
இதுபற்றி ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சட கோபன் (வயது 40). சடகோபனுக்கும் அவரது அண்ணன் சாமுவேலுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோ தம் இருந்து வந்தது
- சாமு வேல், சடகோபனை வழி மறித்து திட்டி தடியால் தலை யில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்தார்.,
கடலூர்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தக்கா கிரா மத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் சட கோபன் (வயது 40). இவர் சென்னை தனியார் கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார். சடகோபனுக்கும் அவரது அண்ணன் சாமுவேலுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோ தம் இருந்து வந்தது.
இந்நிலையில் சடகோ பன் தனது நிலத்தை உழுவதற்காக வழி கேட்டு தாயிடம் சென்றுள் ளார். அப்போது அண்ணன் சாமு வேல், சடகோபனை வழி மறித்து திட்டி தடியால் தலை யில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சடகோபன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சடகோபன் மனைவி வேதநாயகி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகா ரளித்தார். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர்.
- இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
- கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
- ெஜயிலில் அடைத்தனர்
- அளவு கற்கைகளை அகற்றியதால் ஆத்திரம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி ஜமுனா (வயது 52)இவர்களுக்கும் மகிமைதாஸ் என்பவருக்கும் சமீப காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 15-ந் தேதி வருவாய் அலுவலர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தினை சொந்தமானவர்களுக்கு அளவீடு செய்து அளவுகல் நட்டு சென்றனர்.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார், மகிமைதாஸ், ஜெயந்தி, முரளி ஆகிய 4 பேரும் சேர்ந்து அளவு கற்கைகளை அகற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் ஜமுனாவை ஆபாசமாக திட்டியுள்ளனர்.
இதனையடுத்து ஜமுனா வேப்பங்குப்பம் போலீஸ்சில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார், மகிமைதாஸ், ஜெயந்தி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்