என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரதநாட்டியம்"

    • சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் சுபிக்‌ஷா மகாலில் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் ஸ்ரீ வாசவி மகிளா சமாஜம் சார்பில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே சுபிக்‌ஷா மகாலில் நாளை(செவ்வாய்க்கிழமை)நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு வள்ளி, 8.55 மணிக்கு தேவசேனா சமேதராக சுப்பிரமணியசாமி மண்டபத்துக்கு எழுந்தருளல், புண்யாக வாசனம், ரக்‌ஷாபந்தனம், பாலிகை சங்கல்பம், சுப்பிரமணியர் கன்யாதானம், கன்யகாதானம், மாங்கலிய பூஜை ஆகியவை நடக்கின்றன. பின்னர் மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பரதநாட்டியம், அக்சதை ஆசீர்வாதம், மங்கள ஆரத்தி போன்றவையும் நடக்கின்றன.

    • சாய் பரதநாட்டிய குழுவினர் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்சங்கம் ஆகியவை சார்பில் மார்கழி உற்சவ பெருவிழா பல்லடம் பொன்காளியம்மன் கோவில் வளாகத்தில் தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாய் பரதநாட்டிய குழுவினர் சார்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகள் பங்கேற்ற அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியை சேர்ந்த 65க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று கண்கவர் நடனமாடினர்.
    • நிகழ்ச்சியை சிறப்பிக்க பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சர்வோதயா ராமலிங்கம் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.

    சென்னை வில்லிவாக்கத்தில் ப்ரணவம் பரதநாட்டிய பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 4 வயது முதல் ஏராளமான மாணவிகள் பரத நாட்டியம் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் இப்பள்ளியின் 10ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் (5-2-2023) நடைபெற்றது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதீய வித்யாபவன் உள் அரங்கில் ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியின் இயக்குனர் ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவியும், நடன ஆசிரியருமான நந்திதா ஆகியோரின் ஏற்பாட்டில் 10ம் ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், ப்ரணவம் பரதநாட்டிய பள்ளியை சேர்ந்த 65க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு கருப்பொருளின் கீழ் கண்கவர் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 9 மாணவிகளின் சலங்கை பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மேலும், நிகழ்ச்சியை சிறப்பிக்க பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சர்வோதயா ராமலிங்கம் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். சிங்காரம்பிள்ளை பள்ளியின் தாளாளர் கைலாஷ், திரைப்பட டப்பிங் கலைஞர் கோதண்டம் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    பின்னர், நடனம் ஆடிய மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    • 51 குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பாரதநாட்டியதுடன் குச்சிப்புடி, கதக், ஒடிசி மற்றும் மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தொடர்ந்து 20-வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி - நாட்டிய நிகழ்ச்சி நாளை ( சனிக்கிழமை ) தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை 7 நாட்கள் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்விழாவினை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது.

    முதல் நாளான நாளை மாலை 6 மணி முதல் 19-ம் தேதி அதிகாலை 6 மணி வரை இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது சிறப்புக்குரியதாகும்.

    இவ்வாண்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடு களில் இருந்து 51 குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் நாட்டின் புகழ்பெற்ற நடன கலைஞர்கள் வதோதரா ரமேஷ் குபேர்நாத் தாஞ்சுர்கார், பெங்களூர் மிதுன் ஷியாம், அபர்ணா வினோத், சென்னை முனைவர் ஸ்வர்ணமால்யா, சித்ரா முரளிதரன், சிந்து ஷியாம், மும்பை ஹரி கல்யாணசுந்தரம், மைசூர் ஸ்ரீவித்யா ராவ், அகமதாபாத் ஸ்மிதா சாஸ்திரி, ஹைதராபாத் ஆனந்த் ஷங்கர் ஜெயந்த், முனைவர் விஜயபால் பல்ஹோத், ஒடிசா லக்கி மோஹன்த்தி, புதுதில்லி சாந்தனு சக்ரபோர்த்தி, காக்கிநாடா முனைவர் கிருஷ்ணகுமார், கோழிக்கோடு முனைவர் சுகந்திபாரதி சிவாஜி, உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களை சார்ந்த கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

    பாரதநாட்டியதுடன் குச்சிப்புடி, கதக், ஒடிசி மற்றும் மோகினியாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    பிரகன் நாட்டியாஞ்சலி 2023 விழா ஏற்பாடுகளை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் செய்து வருகின்றனர்.

    இவ்விழாவில் திரளான பக்தர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்வினை கண்டுகளித்து சிறப்பிக்க வேண்டுமாறு பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் டாக்டர் வரதராஜன் மற்றும் கவுரவ செயலாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • 22 அணிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
    • ஏராளமான பொதுமக்கள் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியின்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு ருத்ர நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் கலைப்பண்பாட்டுத் துறையுடன் இணைந்து மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி நிகழ்த்திய இவ்விழாவுக்கு, நாட்டியப்பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    விழாவில், கல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 22 அணிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்,

    இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், வணிகர் சங்க பிரமுகர் ஏடிஎஸ்.தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ரியாத், ஜம்புகென்னடி, சூர்யா, நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பரத நாட்டியக் கலைஞர்களை பாராட்டினர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    • 5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
    • பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் குரல் இசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும் , கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பரதநாட்டியம் , கிராமிய நடனம்,, குரல் இசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல் இசை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடக்கிறது.

    இந்த போட்டிகள் 5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

    இதில் கலந்து கொள்ளும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் காலை 9 மணிக்கு வர வேண்டும். இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

    தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம். பக்க வாத்தியங்களையோ, ஒலிநாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் ஐந்து நிமிடம் நடனம் ஆட அனுமதிக்கப்படும்.

    குறலிசை போட்டியில் கர்நாடக இசை, தேசிய பாடல்கள் , சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். ஓவியப்போட்டி தொடங்கப்படும் போது ஒவ்வொரு வயதினருக்கும் தனித்தனியாக தலைப்புகள் அறிவிக்கப்படும். ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.
    • இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் தேசிய பரதநாட்டிய அகாடமி சார்பில் 53-வது அகில இந்திய பரதநாட்டிய திருவிழா நடைபெற்றது.

    விழாவில் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பரதநாட்டிய கலைஞர்கள் 60 குழுக்களாக 100 பேர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை விழாக்குழு அலுவலர் ரவீந்திரக்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில் தனிநபர் பரதநாட்டியம், குழுக்கள் பரதநாட்டியம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரதநாட்டிய விழா நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் கர்நாடக தேசிய பரதநாட்டிய அகடாமி தலைவி அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பரதநாட்டிய கலைஞர் சுவாதி பரத்வாஜ் செய்திருந்தார்.

    • 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளார்கள்.
    • கலந்து கொண்ட நடனக்கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைப்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி தொடக்க விழா நடை பெற்றது.

    பெரிய கோயில் சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

    துரை.கோவிந்த ராஜ் (அறநிலைத்துறை பணி ஓய்வு) வரவேற்பு ரையாற்றினார். தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழிலக்கிய பேரவை நண்டர் குமார் ஒத்துழைப்போடு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன் செய்திருந்தார்.

    நடனக்கு ழுவின் குரு தனவெட்சுமி நன்றி கூறினார்.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள நடன நிகழ்ச்சியில 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளார்கள்.

    இன்றைய நிகழ்ச்சியில் மாநகர மேயர், சதயவிழாக்குழுத்தலைவர், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தென்மா நிலங்கள் பொது செயலர் சந்திரபோஸ் கலந்து கொண்டு நடனக்கலை ஞர்களுக்குச் சான்றிதழ் வழங்க உள்ளனர்.

    • பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சைப்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

    முடிவில் பரதநாட்டிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    பெரிய கோயில் சதய விழாக்குழுத்தலைவர் .து செல்வம் தலைமை தாங்கினார்.

    துரை.கோவிந்தராஜ் (அறநிலையத்துறை பணி ஓய்வு) வரவேற்றார்.

    தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு தென் மாநிலங்கள் பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஏ.பி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரதநாட்டிய கலைஞர்களுக்கு மேயர் சண். ராமநாதன் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழிலக்கிய பேரவை நண்டர் குமார் ஒத்து ழைப்போடு செய்யப்பட்டிருந்தது.

    முடிவில் நடன குழுவின் குரு தனலட்சுமி நன்றி கூறினார்.

    • கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.
    • பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர்.

    திருவண்ணாமலை:

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கிறது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம்.

    அதன்படி இன்று அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் முன்பு வழிபட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பவ்ய ஹாசினி என்ற இளம் பெண் அதிகாலை உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.

    இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர். 

    • மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கம நிகழ்வு நடந்தது.
    • புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம் ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன் கோவில் முத்துராஜம் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் என்ற நிகழ்வு நடந்தது.

    இதில் நேரடியாக 300 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் காணொளி காட்சி (ஆன்லைன்) வாயிலாக 710 வெளி மாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் என ஒரே நேரத்தில் 10 10 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நேரடியாக 300 நடன கலைஞர்கள் புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம், தில்லானா ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர். ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்காடு நிறுவனத்தலைவர் ஜேக்கப் ஞான செல்வம், மேலாளர் ஸ்ரீனிவாசன், சி.இ.ஓ. எஸ் தர், பிரியா உள்ளிட்டோர் உலக சாதனை என அங்கிகரித்து சீர்காழி சங்கமத்தில் பங்கேற்ற பரத கலைஞர்களுக்கு உலக சாதனைக்கான சான்று மற்றும் பதங்கங்களை வழங்கி பரத கலைஞர்களை பாராட்டினர்.

    இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி தாளாளர் சிவசங்கர், நாடி.ஜோதிடர் சிவசாமி, சதாசிவம்,கலைமாமணி தருமை சிவா, பரதகலை ஞர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.
    • ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அடுத்த கோவிலூர் நெல்லி தோப்பில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    தற்போது நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது.

    தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.

    அதன்படி விழாவின் 7-ம் நாளான நேற்று காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீ மூகாம்பிகா அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று 8-ம் நாள் விழா நடந்து வருகிறது.

    விழாவில் மாலையில் நவராத்திரி கலாபக் கலை விழா நடைபெற்றது.

    இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

    இதையடுத்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அறங்காவலர் காத்தாயி அடிமை சுவாமிநாதன் முனையதிரியர் கேடயம், பரிசு வழங்கி பாராட்டினார் .

    ×