search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NASA"

    • விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த 'பபுள் நெபுலா' கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.
    • பபுள் நெபுலா மற்ற நெபுலாக்களை விட மிகவும் பிரபலமானது.

    வாஷிங்டன்:

    விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களை பெற்று வருகின்றன.

    அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ஹப்பின் தொலை நோக்கியை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த அதிநவீன தொலைநோக்கி பல அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

    தற்போது பூமியில் இருந்து 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை, நாசாவின் ஹப்பின் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த 'பபுள் நெபுலா' கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.

    நெபுலாக்கள் என்பது விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிக்கும். இந்த பபுள் நெபுலா வாயுக்களால் ஆன மிகப்பெரிய குமிழால் அல்லது மேகத்தால் மூடப் பட்டுள்ளது.

    இந்த பபுள் நெபுலா மற்ற நெபுலாக்களை விட மிகவும் பிரபலமானது. இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இது இன்னும் 1 முதல் 2 கோடி ஆண்டுகளுக்குள் 'சூப்பர் நோவா' வாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது.

    மேலும், பபுள் நோவா 7 ஒளி ஆண்டுகள் சுற்றளவுக்கு மிகவும் பிரமாண்டமான அளவில் உள்ளது. விண்மீன்கள் வெடித்து சிதறும் நிகழ்வே சூப்பர் நோவா என்று அழைக்கப்படுகிறது. அப்போது சூரியனை போன்ற பல மடங்கு சக்தியை அது வெளியிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    இந்த படத்தை வெளியிட்ட பிறகு நாசா கூறியதாவது:-

    இந்த பபுள் நெபுலா தெளிவாக பார்க்கும் வகையில் உள்ளது. பச்சை நிறத்தில் ஹைட்ரஜன், நீல நிறத்தில் ஆக்சிஜன், சிவப்பு நிறத்தில் நைட்ரஜன் கலந்து வண்ண மயமாக காணப்படுகிறது.

    இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

    • பிரபஞ்சத்தின் தொடக்க கால படங்கள், விண்மீன் திரள்கள் படங்கள் வெளியிடப்பட்டன.
    • புவியின் வட, தென் துருங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரோரா வியாழன் கோளிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை விண்ணில் ஏவியது.

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பிரபஞ்சத்தின் தொடக்க கால படங்கள், விண்மீன் திரள்கள் படங்கள் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்தது.

    இந்தநிலையில் இந்த புகைப்படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து காட்டும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் புவியின் வட, தென் துருங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரோரா வியாழன் கோளிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

    • மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது.
    • நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.

    வாஷிங்டன்:

    உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது.

    இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து 'ஜேம்ஸ் வெப்' என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.

    சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது.

    இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று இரவு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலாஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 1,300 ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில்நெல்சன் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், 'இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திறள்களை காட்டுகிறது. தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ஜூலை 12-ந்தேதி வெளியிடப்படும்' என கூறப்பட்டுள்ளது.

    நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும்.
    • புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.

    இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார்.

    இந்த செயற்கைகோள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கேட்வே என்ற விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் இறங்கு திட்டம் வகுத்துள்ளது.

    புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது. மேலும் செயற்கைகோள் அல்லது விண்வெளி நிலையம் பூமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    ×