என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொறியியல் கல்லூரி"
- விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுபோனவை.
- மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பீகாரில் உள்ள அரசுக் கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட மெஸ் உணவில் இறந்த பாம்பின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசுப் பொறியியல் கால்லூரி தங்கும் விடுதியில் கடந்த வாரம் வியாழனன்று சமைக்கப்பட்ட இரவு உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. அவற்றை சாப்பிடாவிட்டாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாவிட்டாலோ தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் உச்சமாகவே தற்போது பாம்பு கிடந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமான நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பழங்கால, தற்கால அளவை முறைகளைப் பற்றி அனந்த சுப்பிரமணியம் எடுத்துரைத்தார்.
- இரண்டாம் அமர்வில் தமிழ் பிராமி, வட்டெழுத்து , கிரந்தம் ஆகிய மொழிகளை நாகராஜன் அறிமுகம்
நாகர்கோவில் :
சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 2 நாள் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவி ஆண்டே நிஷ்மா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன், துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங், கல்லூரி தாளாளர் டாக்டர் மரியவில்லியம், சிவில் துறை தலைவர் ஜெஸ்சிமோள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக செம்பவளம் ஆய்வு தளம் இயக்குனர் செந்தீ நடராசன் பங்கேற்று கோவில் கட்டிடக்கலை பற்றி விளக்கினார். இரண்டாம் அமர்வில் தமிழ் பிராமி, வட்டெழுத்து , கிரந்தம் ஆகிய மொழிகளை நாகராஜன் அறிமுகம் செய்து பயிற்சி கொடுத்தார். அதன் பின் பழங்கால, தற்கால அளவை முறைகளைப் பற்றி அனந்த சுப்பிரமணியம் எடுத்து ரைத்தார்.
2-ம் நாள் களப்பணியாக பத்மநாபபுரம் தொல்லியல் காட்சியம், திருவதாங்கோடு புனித தோமஸ், பெரியநாயகி அம்மாள் சர்ச்சி கல்வெட்டை மணவர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவில் துறை பேராசிரியர்கள், பேராசிரியர் ஸ்மைலின் சைனி, நூலக அறிவியல் துறை தலைவர் டாக்டர் விஜயகுமார் , தமிழ் மன்ற பொறுப்பாளர் பேராசிரியர் மேரி ஜெனிதா செய்திருந்தனர்.
- திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.
- 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணித்தல், தானியங்கி, மேலாண்மை பொருளாதாரம் மற்றும் பயன்பாட்டு சமூக அறிவியலில் உள்ள போக்குகள் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லூரி முதல்வர் ராஜேஷ், இணை பேராசிரியர்கள் டாக்டர் பெனிஷா, டாக்டர் எம்.ரெஜி கருத்துரை வழங்கினர்.
ஸ்ரீனிவாஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.பி.எஸ்.ஐத்தல் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்கள் பற்றிய விழிப்புணர்வு அளித்து மாணவர்கள் ஆராய்ச்சியை தொடர தூண்டினார். திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.
மேற்கு வங்காளம் ராய்கஞ்ச் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பி.கே. பால், பங்களாதேஷ் பேகம் ரோகேயா பல்கலைக்கழகத்தின் டாக்டர் வஸ்செட், டாக்டர்.நீல் பி.பால்பா மற்றும் பலர் விழாவில் கருத்துரை வழங்கினர். பேராசிரியர் சஞ்சு நன்றி கூறினார்.
கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சுமார் 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன. இக்கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோகிணி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
- 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
நாகர்கோவில், நவ.5-
தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவி லான கருத்தரங்கு நடை பெற்றது. தாளாளர் எபநேசர் ஜோசப் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக இஸ்ரோ சிறப்பு விஞ்ஞானி டாபினி மனோஜா கலந்து கொண்டு கணினி பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
விழாவில் கல்லூரி முதல் வர் ஸ்பென்சர் பிரதாப் சிங், கணினி பொறியியல் துறை தலைவர் ஹாரியட் லிண்டா மற்றும் பலர் கலந்துகொண்ட னர். சுமார் 15 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஷெர்லி கனக பிரியா, துணை ஒருங்கிணைப்பாளர் மகிபா, மாணவர் பிரதிநிதி மெல்வின் சேம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- பிறரோடு ஓப்பிடாமல், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்
- மாணவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் அறிவுரை
நாகர்கோவில்,
சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவரும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாள ருமான இயேசுரத்தினம் தலைமையில் நடந்தது. தாளாளர் மரிய வில்லியம் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் வர வேற்று பேசினார். முதல்வர் மகேஸ்வரன் அறிக்கை சமர்ப் பித்தார். விழாவில் சந்திர யான் விண்வெளி ஆய்வு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் ஆசிர் பாக்கிய ராஜ் பங்கேற்று 512 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் 8 பேருக்கு ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டங்களும், 127 பேருக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களும், 377 பேருக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும் வழங்கப்பட் டன.
தொடர்ந்து விஞ்ஞானி ஆசிர் பாக்கியராஜ் பேசும் போது, பட்டதாரிகளுக்கு நான் கூறுகின்ற அறிவுரை என்ன வென்றால் 'உனக்கு நிகர் நீ. பிறரோடு உன்னை ஒப்பிடுவதை விட்டுவிட்டு உன்னில் இருக்கும் திறமை களை வெளிக்கொணர வேண்டும் என்பதேயாகும்.நீங்கள் எந்த நிலையில் உயர்ந்தாலும் உங்கள் பெற் றோரையும் ஆசிரியர்களை யும் மதித்து செயல்பட வேண்டும் என்றார்.
கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, புல முதல்வர்கள், துறை தலைவர்கள், பேரா சிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.
விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடந்தது
- வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்
நாகர்கோவில் ;
சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் கவின் நுண்கலை மன்ற ஆண்டு விழா நடைபெற்றது. குழித்துறை கத்தோலிக்க மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேராசிரியை சிமிமோள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாரதி கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமிழ்மொழி சிறப்பு குறித்தும், அனைவருக்கும் படிப்பு முதன்மையாக இருக்கவேண்டும் என்றும் எடுத்து கூறினார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் மலையாள திரைநட்சத்திரமுமான நலீப் ஜீயோ விழாவில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் கல்லூரி தாளாளர் மரியவில்லியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கலைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள். விழாவில் கவின் நுண்கலை மன்ற மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பேராசிரியர் ெஜய சுரேண்ராஜ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரியவில்லியம், முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.
- பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி அருகே பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் கிளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக அணுமின் உற்பத்தி நிலையத்தில் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமத்தின் இயக்குனர் விக்னேஸ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் முனிராஜ் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி டீன் மாரிச்சாமி வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கூடங்குளம் அணுமின் நிலையம் கூடுதல் முதன்மை பொறியாளர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அணு மின் நிலையங்களில் முக்கியத்துவம், அணு மின் நிலையங்களில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், கேட் தேர்வின் முக்கியத்துவம் முதலான தகவல்களை மாணவர்களிடம் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் மின்னணு தொடர்பு மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர் புனிதா செய்திருந்தார். இணை பேராசிரியர் அருணா நன்றி கூறினார்.
- நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார்.
- 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார்
மார்த்தாண்டம் :
கருங்கல் அருகே அமைந்துள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் பொறி யாளர் ஐசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்மி பிறேமா அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்து நன்றி கூறினார். சிறப்பு விருந்தினராக ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அதில் மாண வர்கள் வேலைவாய்ப்பு களை உருவாக்கி வேலை கொடுக்கிறவர்களாக மாற வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ள பல காரியங்களை கண்டுபிடிக்க வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தோல்வியை வெற்றியின் படிக்கல்லாக மாற்ற வேண்டும். இது போன்ற பல அரிய கருத்துக்களை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எடுத்து கூறினார்.
தொடர்ந்து 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார். மேலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற முதுகலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி அஸ்வினி, 5-வது இடம்பெற்ற முதுநிலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி திவ்யா, பல்கலை அளவில் 13-வது இடம் பெற்ற இளங்கலை சிவில் பொறி யியல் மாணவி அஜிரா ஆகியோர் பாராட்டப்பட்ட னர். அதனைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
- மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது
- துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஏ.ஐ.சி.டி.இ. ஆலோசகர் டாக்டர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன் கலந்துகாெண்டு பரிசுகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பாெறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- விழாவில் முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவி பவித்ரா வரவேற்று பேசினார்
- தற்போதுள்ள பதவிக்காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.சி.ஏ. சங்க தொடக்க விழா நடை பெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் என்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த மகா கிருஷ்ணன், விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
விழாவில் முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவி பவித்ரா வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் ஆர்.ராஜேஷ் சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜாபர் "கணினி பயன்பாடுகளில் தொழில் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் தொழில்நுட்ப விளக்கத்தை வழங்கினார். சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்போதுள்ள பதவிக்காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.
குழுவில் துணை தலைவர், பொதுச்செயலர், இணை செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் ஆகியோர் சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பா ளரால் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். எம்.சி.ஏ. துறை தலைவர் பேராசிரியர் வஹிதா.கே.தங்கம் சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் முடிவில் தீபக் நன்றி கூறினார்.
- ஒரு நாள் சிறப்பு பொதுநல மருத்துவ முகாம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நாகர்கோவில் :
சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் சிறப்பு பொதுநல மருத்துவ முகாம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் டாக்டர் ஷீன் குமார் வரவேற்றார். கல்லூரி தாளாளர் டாக்டர் மரிய வில்லியம் தலைமை தாங்கினார். நாகர்கோவில் பென்சாம் மருத்துவமனை தலைமை மருத்துவர் எபனேசர் பென்சாம், முகாமினை தொடங்கி வைத்து பேசினார். நாகர்கோவில் டவுண் மற்றும் சுப்ரீம் ரோட்டரி மன்றங்களை சார்ந்த மீரான் கான் சலீம் மற்றும் ஸ்ரீதர் முகமத் இக்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன், துணை முதல்வர் டாக்டர் கிறிஸ்டஸ் ஜெயசிங் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மருத்துவ முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் டாக்டர் ஷின் குமார். தேசிய மாணவர் படை அலுவலர் டாக்டர் எட்வின் கிளாட்சன். நாட்டு நலத்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் ஆக்னல் லிவ்விங்ஸ்டன் மற்றும் ஜாண்பால் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் சிறப்பாக செய்தனர்.
- “நீயா நானா” கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்
- மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந் துள்ள ரோகிணி பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேராசிரியை தங்கம் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் டிவி புகழ் "நீயா நானா" கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்.அப்போது அவர் நேரத்தின் முக்கியத்து வம் பற்றியும், மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது பற்றியும், தன் துறையில் தனித்துவம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்து, மாணவர்களுக்கிடையே வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டு தலையும் ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களைமுதலாம் ஆண்டு துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர். முடிவில் பேராசிரியை ஜார்ஜ் மேரி ஆர்த்தி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்