என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மறியல் போராட்டம்"
- போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சனை நிலுவையில் உள்ளது.
- 106 மாதங்களாக அக விலைப்படி உயர்வு வழங்கப்பட வில்லை.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது:-
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அக விலைப்படி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனை வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.
இந்த பிரச்சனைகளில் விரைந்து தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 16-ந்தேதி முதல் வீடு தோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை நடத்தி உள்ளோம்.
இதன்தொடர்ச்சியாக நாளை (27-ந்தேதி) தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் பல்லவன் இல்லம் அருகே மறியல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள்.
- பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.
சென்னை:
பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12-ந் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்வையற்ற பட்டதாரிகளை நியமன தேர்வு இல்லாமல் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் போலீசார் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள். கோடம்பாக்கம் பாலத்தில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்ட களத்தை மாற்றினர். காலை 10 மணியளவில் வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அதாவது பூந்தமல்லி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை நகரின் முக்கிய சாலையில் நடந்த போராட்டத்தால் போலீசார் பரபரப்பு அடைந்தனர். பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலாக்காக தூக்கி வேனில் ஏற்றினர். பெண்களை மகளிர் போலீசார் ஒன்று சேர்ந்து தூக்கி சென்றனர். இதனால் 45 நிமிடங்கள் வரை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
- அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலகம் முன்பு மறியல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு கல்லூரி சாலையில் நூற்றுக்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வி துறையின் அலுவலக வளாக கதவுகள் பூட்டப்பட்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், மாயவன், அன்பரசு ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். போலீசார் முன் எச்சரிக்கையாக அவர்களை ஒன்று சேர விடாமல் உடனடியாக கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.
மறியலில் ஈடுபட வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதால் மறியல் போராட்டத்தில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. மறியலுக்கு முன்பே 200 பேர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:-
போராட்டம் நடத்தக்கூட அரசு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
பாராளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை நிச்சயமாக வீசும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலசமுத்திரம் தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
- அடிப்படை வசதிகள் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சாலைகளில் மழைநீர் கழிவுநீரோடு தேங்கி நிற்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசு க்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்க ளுக்கு ஒருவாரத்திற்கும் மேலாக குடிநீர் வினி யோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் இன்று காலை பள்ளி மாணவ-மாணவிகளுடன் பந்துவார்பட்டி, பாலசமுத்திரம் வழியாக ஆண்டிபட்டி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்த னர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஊராட்சிமன்ற தலைவர் கனிராஜ் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்து குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி நடந்தது
- சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
நாகர்கோவில் :
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் தே.மு.தி.க. கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் குமரி மாவட்ட தே.மு.தி.க.வினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், அவை தலைவர் அய்யாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் வைகுண்ட மணி, ஒன்றிய செயலாளர்கள் பரமராஜா, மைக்கேல் ரத்தினம், நாகராஜன், தங்ககிருஷ்ணன், புகாரி, ஜஸ்டின் பிரபு, செந்தில் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கியவதி, விஜயா, பாப்பா, வக்கீல் பொன் செல்வராஜன், செந்தில் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்ககோரி கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மறியல் போராட்டத்தையடுத்து திருப்பதிசாரம் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி
- குமரி மாவட்டத்தில் வரும் 7-ந் தேதி நடக்கிறது
நாகர்கோவில், ஆக.26-நாகர்கோவிலில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகிற 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சார பயணம் மேற்கொள்கிறது. 7-ந்தேதி அன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ெரயில் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் 3-ந்தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
7-ந்தேதி 17 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் பிரச்சார நடைபயணம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காபட்டணம் துறைமுகத்தில் உரிய திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் தான் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதில் மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்து சமய அறநிலை துறை கோயில்களில் அரசியல் புகுத்தப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது
- மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் .
தஞ்சாவூர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார்.
நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி விளக்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் மணிப்பூர் மாநில கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது போன்ற மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு செப்டம்பர் 12,13 ,14 ஆகிய மூன்று தேதிகளில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த விடுத்த அழைப்பினை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாட்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் .
இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வீரமோகன், சேவையா, திருநாவுக்கரசு, கோவிந்தராஜன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சந்திரா கூட்டரங்கில் நடைபெற்றது.
- வருகிற 25 முதல் 28-ம் தேதி வரை சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சந்திரா கூட்டரங்கில் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து வருகிற 15-ம் தேதி தருமபுரியில் மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது, இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது.
தொடர்ந்து வருகிற 25 முதல் 28-ம் தேதி வரை சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டங்கள் நடத்துவது, அதானி விவகாரத்தில் பிரதமருக்கு போஸ்டு கார்டு அனுப்பும் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு திருமணங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான தீத்தராமன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சண்முகம், ஜெயசங்கர், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பிற்பட்டோர் அணி தலைவர் நவீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் வட்டார தலைவர்கள் வேலன், காமராஜ், மணி, ஞானசேகர், வஜ்ஜிரம், சந்திரசேகர், வெங்கடாச்சலம், சிலம்பரசன், ராஜேந்திரன் பெரியசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முபாரக், மாவட்ட பிற்பட்டோர் அணி தலைவர் நவீன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சிவலிங்கம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலீபன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ராமசுந்தரம், நகர தலைவர்கள் கணேசன், குமரவேல், மாணிக்கம், ஜெயபால், முருகன், ராபர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தருமபுரி நகர தலைவர் வேடியப்பன் நன்றி கூறினார்.
- தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் போராட்டம்
சென்னை:
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் அபிநயா. 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் சீழ் வந்ததால், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மூச்சுத் திணறல், நெஞ்சுவலி காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிநயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அபிநயாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த ரெயில்வே கேட் வழியாக உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
- இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூரை அடுத்த வேங்காம்பட்டி பகுதியில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.
200 கிராமங்கள்
இந்த ரெயில்வே கேட் வழியாக வேங்காம்பட்டி, வாழ குட்டைப்பட்டி, ஏரியூர், செவந்தாம்பட்டி, பாலம்பட்டி, நெ. 3 குமாரபாளையம், கரட்டுப்பாளையம், ஆலாம்பாளையம், பொன்பரப்பிபட்டி, மின்னக்கல், மூக்குத்தி பாளையம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணிகளுக்கு செல்வோர், விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பகுதியில் நீண்ட காலமாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மல்லூர் பேரூராட்சியில தீர்மானம் நிறைவேற்றியும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
போராட்டம்
இதனை கண்டித்து வருகிற 23-ந் தேதி சுற்று வட்டார கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் தலைமையில் வேங்காம்பட்டி ரெயில்வே கேட் அருகே ரெயில் மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது
- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கைது செய்தார்,
கடலூர்:
மத்தியஅரசை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 சட்டங்கள், 4 ஆக சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கைது செய்து பண்ருட்டி திருமண மண்டபத்தில்தங்க வைத்துள்ளனர்
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
- எஸ்.சாகுல் அமீது, கணேசன்,ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பல்லடம் மாணிக்காபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. பொது செயலாளர் பி.ஆர்.நடராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் இசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் வருகிற 24-ந்தேதி அன்று ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும் மறியல் போராட்டத்தில்,ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் எஸ்.சாகுல் அமீது, கணேசன்,ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்