என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எலினா ரிபாகினா"
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை 6-3 என சபலென்கா வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை6-1 என வென்றார்.
மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை 6-1, 6-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் எலினா ரிபாகினா 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பவுலினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
முன்னதாக, போட்டி தொடங்கும் முன் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் டாஸ் போட்டு ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நெய்மார் கடந்த ஒரு ஆண்டாக போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் அரையிறுதியில் எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா முதல் செட்டை 6-3 என வென்றார். சுதாரித்துக் கொண்ட கிரெஜ்சிகோவா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை சந்திக்கிறார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் காலிறுதியில் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
மற்றொரு காலிறுதியில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் கிரெஜ்சிகோவா 6-4, -6-7 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் எலினா ரிபாகினா, பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்திக்கிறார்.
- துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதியில் ரிபாகினா விலகியதால் பவ்லினி அரையிறுதிக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. 2வது காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியும் மோதுவதாக இருந்தது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் ரிபாகினா விலகினார். இதையடுத்து பவுலினி அரையிறுதிக்கு முன்னேறியதாக
அறிவிக்கப்பட்டார்.
- துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த போட்டியில் ரிபாகினா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, போலந்து வீராங்கனை மக்டலேனாவுடன் மோதினார்.
இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ரிபாகினா கைப்பற்றினார்.
இறுதியில், எலினா ரிபாகினா 7-6 (7-5), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- கஜகஸ்தான் வீராங்கனையை ரஷிய வீராங்கனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ரிபாகினா 2-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த 3-ம் நிலை வீராங்கனையான எலினா ரிபாகினா, தரவரிசையில் 57-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் மோதினார்.
இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இருவரும் சளைக்காமல் மல்லுக்கட்டினர்.
இறுதியில் எதிராளி பந்தை வெளியே அடித்ததன் மூலம் வெற்றிக்குரிய புள்ளியை ஈட்டிய பிளின்கோவா ஒரு வழியாக டைபிரேக்கர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் முடிவில் பிளின்கோவா 6-4, 4-6, 7-6 (22-20) என்ற செட் கணக்கில் ரிபாகினாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக 3-வது சுற்றை எட்டினார்.
- உடல்நலக் குறைவால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார் ரிபாகினா.
- இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் தோர்மோவுடன் மோத இருந்தார்.
வைரஸ் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்ட ரிபாகினா நேற்று முன்தினம் இரவு சரியாக தூங்கவில்லை. எனவே உடல்நலம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ரிபாகினா விலகினார்.
இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது.
- இதில் ரிபாகினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை சந்தித்தார்.
இதில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரிபாகினா வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சபலென்கா, ரிபாகினா இறுதிக்கு முன்னேறினர்.
- நேற்று நடந்த அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரிபாகினா இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோத உள்ளார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரிபாகினா 6-4 என வென்றார். இதையடுத்து சுதாரித்துக் கொன சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
- இதில் லாத்வியா வீராங்கனையை வீழ்த்தி ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி எலினா ரிபாகினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார். இதில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அசரன்கா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்