என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆவணங்கள்"
- சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைப்பு.
- கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு.
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஆவணங்களை தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது.
- வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
சென்னை:
பாராளுமன்றத் தோ்தலில் வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்கள் எவை எவை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த தோ்தல்களைப் போலவே, வரும் பாராளுமன்ற தோ்தலிலும் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டையுடன் சோ்த்து, மொத்தம் 13 வகையான ஆவணங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.
அதன்படி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப் பட்ட தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்த லாம்.
அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது. வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக வாக்காளா் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். மாவட்ட தோ்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் தகவல் சீட்டு வினியோகிக்கப்படும்.
வாக்குச் சாவடியில் வாக்காளா் தகவல் சீட்டைக் காண்பித்து வாக்களிக்க முடியாது. அது அடையாள ஆவணம் இல்லை. ஒரு வாக்காளா் வேறொரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்கலாம். அந்த அடையாள அட்டையையும் இந்திய தோ்தல் ஆணையத்தின் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளருடைய பெயா் வாக்களிக்கச் செல்லும் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.
இதேபோல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 லட்சம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
- முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் சேதமானது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் சேதமான ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதமான ஆவணங்களை பெறுவதற்கு இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பழைய தாசில்தார் அலுவலகம், தாசிதார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரல் வட்டத்தில் பழையகாயல் மரிய அன்னை மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கிராம நிர்வாக அலுவலகம், ஆழ்வார்திருநகரி கிராம நிர்வாக அலுவலகம், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சாயர்புரம் கிராம நிர்வாக அலுவலகம், ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
திருச்செந்தூர் வட்டத்தில் ஆத்தூர் சமுதாயநலக்கூடம், புன்னைக்காயல் புனித வளனார் திருமணமண்டபம், சுகந்தலை சமுதாய நலக்கூடம், திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகம், மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி, மானாடு தண்டு பத்துக்கு வெள்ளாளன் விளை சர்ச் மகால், நங்கைமொழி, லெட்சுமி புரம், செட்டியா பத்து, உடன்குடிக்கு உடன்குடி வருவாய் அலுவலகம், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, இருப்பிச்சான்று, வருமானச்சான்று, வாரிசுச்சான்று, விதவை, ஆதரவற்றோர் சான்று உள்ளிட்டவைகள் வருவாய்த்துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, பட்டா நகல்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு, டிரைவிங் லைசென்சு, பத்திர ஆவணங்கள் மற்றும் சிலிண்டர் இணைப்பு புத்தகம் ஆகியவைகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.
எனவே இன்றும், நாளையும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
- மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.
- மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.
இதேபோல், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து ள்ள செய்தி குறி ப்பில் கூறியிருப்பதாவது வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. எனவே கனமழை தொடர்பாக பொதும க்களுக்கு கீழ்க்க ண்ட முன்னெச்சரிக்கை அறிவு ரைகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடிமின்னலுடன் கனமழை பெய்துவரும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இட ங்களுக்கு செல்லவேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்பஅட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில்,பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், பேரிட ர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசிஎண் - 1077மற்றும் 04142 - 220700, 04142 - 233933மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிட ர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மே ற்படி பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேர டியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி வித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டரிடம் புகார்
- 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் கீழ்குளம் ஆனான் விளையை சேர்ந்தவர் ரெங்கபாய் (வயது 70). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை என் சகோதரிக்கு சொந்தமான நிலத்தை எனக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். தற்போது 4 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
இதுதொடர்பாக நில அபகரிப்பு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த நிலத்தை வேறொரு நபர் பெயரில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னிடம் வெட்டுகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது தொடர் பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது::- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்த வெளியில் நிற்பதை யும், நீர்நிலைகளில் குளிப்ப தையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படு வதற்கு முன்னர் கால்நடை களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய மான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கடலூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற் கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077மற்றும் 04142 - 220700 04142 - 23393 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் புகார் அளித்தார்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மதுரை:
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முறையாக பராமரிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றவியல் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போனதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்ற பதிவாளர் உயர்நீதி மன்ற போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் நீதிமன்ற ஊழியர் ஜான்சன் மற்றும் பாலமுருகன், பிரித்திவிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், ரோஷனை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர்ஸ்டாலின் மற்றும் போலீசார் திண்டிவனம் ரோஷனை ஒலக்கூர் போன்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
- போலி ஆவணங்கள்-பொருட்களை மாற்றி செய்து மோசடி
- குமரி மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு
நாகர்கோவில், ஜூன்.29-
கன்னியாகுமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலராக முன்பு பணியாற்றியவர் ஜோதீந்தர் கீத் பிரகாஷ். கோவில்பட்டி தச்சு மற்றும் கொல்லு தொழிலாளர் குடிசை தொழில்கள் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர் கணேசன். பணம் மோசடி
இவர்கள் கடந்த 2005-06-ம் ஆண்டில் குமரி மாவட்டம், கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு மரசாமான்கள் அனுப்பியதில் முறைகேடு ஏற்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜோதீந்தர் கீத் பிரகாஷ் மற்றும் கணேசன் ஆகியோர் கூட்டு சதி செய்து, கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு தேக்கு மரத்தால் மேஜை, நாற்காலிகள் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 725-க்கு செய்ததாக போலியான ஆவணம் தயார் செய்துள்ளது தெரியவந்தது. மேலும் மேஜை, நாற்காலிகள் தேக்கு மரத்தால் செய்வற்கு பதிலாக வேப்பமரம் பிளைவுட்டினால் செய்துள்ளதும், இதன்மூலம் அரசுக்கு ரூ.90 ஆயிரத்து 65 நிதி இழப்பு ஏற்படுத்தி பணம் கையாடல் செய்துள்ளதும் தெரியவந்தது.
இது தொடர்பாக 2 பேர் மீதும் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனி நீதிபதி கோகுலகிருஷ்ணன் வழக்கை விசாரித்து, ஜோதீந்தர் கீத் பிரகாஷ், கணேசன் ஆகியோருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டைனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்ட தவறினால் 2 மாதங்கள் சாதாரண சிறைதண்டையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜென்ஸி ஆஜரானார்.
ஜோதீந்தர் கீத் பிரகாஷ் கடந்த 2006-ம் ஆண்டு பணியில் இருந்தபோது தனக்கு கீழ் பணியாற்றிய ஆதிதிராவிட மாணவர் விடுதி சமையல்காரரிடம் பணி மாறுதலுக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில், 3 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நடைபெறுவதை ஒட்டி விடுமுறைவிடப்பட்டுள்ளது.
- அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
இந்தியா முழுவதும் நாளை அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நடைபெறுவதை ஒட்டி விடுமுறைவிடப்பட்டுள்ளது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஒலக்கூர் பல்வேறு பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். திண்டிவனம் மரக்காணம் சாலை அருகே திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்