என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார் டிரைவர்"
- ராஜேஷ் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ்(24). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார்.
- வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர்.
அவினாசி:
அவினாசியை அடுத்து வாரணாசி பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர் டாக்சி டிரைவராக உள்ளார். தனது காரை பெருமாநல்லூர் திருப்பூர் ரோட்டில் பூலுவபட்டி நால்ரோடு அருகே நிறுத்தி உள்ளார். அப்போது அதே பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனிடம் இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது .
காரை நிறுத்தக்கூடாது என கூறியதாக தெரிகிறது .அதற்கு மணிகண்டன், பயணிகள் மொபைல் போன் மூலம் புக் செய்து தான் செல்கிறார்கள். எல்லோரையும் ஏற்றி செல்வதில்லை. எதற்காக இங்கு நிறுத்த வேண்டாம் என்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டோ டிரைவர்கள் மணிகண்டனை தாக்கி உள்ளனர். இதனை கண்டித்தும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவினாசி தாசில்தாரிடம் டாக்சி டிரைவர்கள் மனு கொடுத்தனர்.
- திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
- வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
உடுமலை :
உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த சீரங்கன் என்பவரது மகன் சுதாகர் ( வயது 29), கார் டிரைவர்.
திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே தனக்குத்தானே தூக்கு போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை நடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகரி காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அருள் அன்பரசு (வயது 39). இவர் கோவையில் சொந்த மாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அங்குள்ள காந்தி நகர் விடுதியில் இருந்து பேசிய வாலிபர் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று கூறி யுள்ளார். அதன்படி ரூ. 8000 வாடகை பேசி அருள் அன்பரசு அந்த வாலிபரை சென்னை ஆலந்தூரில் இறக்கிவிட்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் தான் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் பேசிய வாடகை பணத்தை விட கூடுதலாக ஆயிரத்தை சங்கர் கொடுத்ததாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்ட சங்கர் 11 பவுன் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்திற்கு ஏலம் வருவதாகவும், அதனை வாங்கிக் கொள்ளு மாறும் அருள் அன்பரசு விடம் கூறியுள்ளார். அவரும் கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதி மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை திரட்டி உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு அருள் அன்பரசு விடம் சங்கர் கூறியுள்ளார். அங்கு 2 பேரும் சந்தித்து பேசினர். அப்போது விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடி அறையில் ஏலம் நடப்பதாகவும், தான் மட்டும் சென்று நகைகளை வாங்கி வருவதாக பணத்துடன் சங்கர் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருள் அன்பரசு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஏலம் நடைபெறவில்லை என தெரியவந்தது.
உடனே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து பார்த்தபோது சங்கர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் அன்பரசு 2 லட்சத்து 62 ஆயிரம் திருடு போனது தொடர்பாக சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
- உடல் நல பிரச்சினைகள் குறித்து பில்சுமியேல் கார் டிரைவருடன் உரையாடி உள்ளார்.
- அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சம்பவங்களை பார்க்கும் போதும், படிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த டிம் லெட்ஸ் என்ற ஊபர் டிரைவர் ஒருவர் தனது காரில் பயணித்த பில்சுமியேல் என்ற பயணிக்கு சிறுநீரக தானம் செய்தது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பில்சுமியேல் ஒருமுறை டயாலிசிஸ் மையத்திற்கு டிம்லெட்ஸ்சின் காரில் சென்றுள்ளார்.
அப்போது தனது உடல் நல பிரச்சினைகள் குறித்து அவர் டிரைவருடன் உரையாடி உள்ளார். அதை கேட்ட டிம்லெட்ஸ் மனமுருகி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன் வந்துள்ளார்.
அதன்படி அவர் சுமியலுக்கு சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். இதற்கான அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார். அவர் டிரைவர் டிம்லெட்சுடன் ஆஸ்பத்திரியில் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது வாழ்க்கை கதையை கூறி இருந்தார். அவரது இந்த பதிவு 1 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
- வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் தினேஷ் (வயது 22 ). கார்டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தினேஷ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
வள்ளியூர்-நாங்குநேரி இடையே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தை சேர்ந்தவர் சுதர்வேல் (வயது 37) கார் டிரைவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுதர்வேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுதர்வேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்டவாளத்தில் பிண மாக கிடந்த சுதர்வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உமாவுக்கு தலைப்பொங்கல் என்பதால் காக்கமூருக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்ல உலகம்மாள் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
- பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் :
பூதப்பாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணிய பிள்ளை. இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி உலகம்மாள் (வயது 75)ஏற்கனவே சுப்பிரமணிய பிள்ளை இறந்து விட்டார்.
இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் பாலசுந்தரம்பிள்ளையின் மகள் உமாவை சுசீந்திரம் அருகே காக்கமூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்தனர்.உமாவுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. உமா தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வருகிறார். உமாவுக்கு தலைப்பொங்கல் என்பதால் காக்கமூருக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்ல உலகம்மாள் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை காரில் உமாவின் தாய் சுபா (55), பாட்டி உலகம்மாள் மற்றும் பிரேமா (45), சுப்புலட்சுமி (55), உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தளவாய் சுந்தரத்தின் மனைவி உமா (50) சுப்புலட்சுமியின் பேத்தி சிபிக் ஷா (2) ஆகியோர் புறப்பட்டனர். காரை அழகிய பாண்டிய புரத்தைச் சேர்ந்த ஜெகன் (28) என்பவர் ஓட்டினார். பூதப்பாண்டி தாழக்குடி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இதில் உலகம்மாள், உமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்ந்த னர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்து குறித்து சுபா கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான உலகம்மாள், உமாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
சத்தியமங்கலம் பழைய தபால் அலுவலக தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). வாடகை கார் டிரைவர். இவருக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மேலும் இதற்கான மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஈரோட்டுக்கு வடிவேல் வந்தார்.
அவர் ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
- சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 68). இவர் டிரைவர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
இவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முருகன் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மகன் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த முருகன் சம்பவத்தன்று நள்ளிரவு தனது வீட்டில் ஒரு அறையில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். சிறிது நேரத்தில் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றுஅவர்பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
- சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி:
சேலம் அழகாபுரம் ஏடிசி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38) இவருக்கு ஜீவிதா (வயது 34) என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் சேலம் போக்சோ கோர்ட் நீதிபதியின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த வினோத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் கோரிமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வினோத்குமார் சென்றுவிட்டார்.ஜீவிதா அவரது பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார், பின்னர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வினோத்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்