என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெப்ப அலை"
- இந்தாண்டு இந்தியாவில் வெப்ப அலை தீவிரமாக வீசியது.
- வெப்ப அலையால் இந்தியாவில் பலர் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தாண்டு இந்தியாவில் கடுமையான வெப்ப அலை தீவிரமாக வீசியது. இதனால் கோடைக்காலத்தில் இந்தியா எங்கும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவானது. வெப்ப அலையால் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இனிமேல் வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசிதழில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், "வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
- தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது
காலநிலை மாற்றம் :
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஆய்வு முடிவுகள் :
அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?
தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.
தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.
வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.
மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
- அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன.
- சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன. குறிப்பாக முதியவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
எனவே அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் டாக்டர், நர்சு உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
மேலும் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தற்காலிக சிறப்பு மருத்துவ முகாம்களையும் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
- மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது.
- பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெப்ப அலை தாக்கியதில் கடந்த நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக எதி அறக்கட்டளை கூறியுள்ளது. இது சிந்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது.
எதி டிரஸ்ட் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில், " கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன. மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
வருத்தமான உண்மை என்னவென்றால், இந்த உடல்களில் பல கடுமையான வானிலையிலும், நிறைய சுமை கொட்டும் பகுதிகளில் இருந்து வந்தவை.
பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டது.
நேற்று மட்டும் 135 உடல்கள் தங்கள் பிணவறைக்கு வந்ததாகவும், திங்கட்கிழமை அன்று 128 உடல்கள் கிடைத்தது" என்றார்.
- ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது.
- சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் உட்பட பல நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவிலும் வெப்ப அலை தொடர்கிறது. வெப்ப அலையின் தாக்கம் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது மெழுகால் செய்யப்பட்ட சிலைகளிலும் காணப்படுகிறது.
அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் 16-வது குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை வடிவகைப்பட்டு இருந்தது.
- பாகிஸ்தானில் கடுமையான வெயில் வாட்டி வதைகிறது.
- பாகிஸ்தானின் 2-வது பெரிய நகரான கராச்சியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெயிலுக்கு 20 பேர் பலியாகினர்.
கராச்சி:
பாகிஸ்தானில் கடுமையான வெயில் வாட்டி வதைகிறது. வெப்ப அலை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் பாகிஸ்தானின் 2-வது பெரிய நகரான கராச்சியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெயிலுக்கு 20 பேர் பலியானதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும்.
- நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம்.
இந்தியாவில் கோடையில் வெப்ப அலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது போல் நம்முடைய ஸ்மார்ட் போன்களுக்கும் சில கவனிப்பு தேவை.
உங்கள் ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், அதிக வெப்பமடைவதை தடுக்கவும் 5 எளிமையான வழிகள்:
1. நேரடி சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும்
செல்போன்கள் செயல்படுவதன் மூலம் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும். நேரடி சூரிய ஒளியில் செல்போன்களை பயன்படுத்தினால், அதன் ஸ்கிரீன் வெளிச்சத்தை அதிகரிக்கலாம். னை நிழலில் பயன்படுத்த வேண்டும். இது ஸ்கிரீன் வெளிச்சத்தை குறைவாக வைத்திருக்க உதவும்.
2. போனுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்
கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும். பயனாளர்கள் செல்போனுக்கு ஓய்வு கொடுத்தால் செல்போன் குளிர்ந்து அதிக வெப்பமடைவதை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.
3. background apps நிர்வகித்தல்
background apps-ஆல் செல்போன் அதிக வெப்பமடையும், பேட்டரி பவர் குறையும். போனில் செயலியை பயன்படுத்தவில்லை என்றால், பயனர் ஆப்களை off செய்துவிட வேண்டும். உங்கள் மொபைலை குளிர்ச்சியாக வைத்திருக்க, டேட்டா அல்லது அழைப்புகள் தேவையில்லாதபோது பயனர், பின்புல செயல்முறைகளைக் குறைக்க Airplane mode-க்கு மாறலாம்.
4. செல்போன் கவரை நீக்க வேண்டும்
ஸ்மார்ட்போன் கவர்கள் போனை பாதுகாக்கும் அதே வேளையில் அவை வெப்பத்தையும் ஏற்படுத்தும். செல்போன்கள் கூடுதல் வெப்பத்தை உருவாக்குவதால், அது சார்ஜிங்-ல் இருக்கும்போது போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மலிவான அல்லது சேதமடைந்த சார்ஜர்கள் அதிக வெப்பத்திற்கு பங்களிக்கும்.
5. நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும்
நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம். வீட்டிற்குள் வேலை செய்கிறீர்கள் என்றால், சூரிய ஒளி நேரடியாக விழும் ஜன்னல்களிலிருந்து போனை ஒதுக்கி வைக்க வேண்டும். அதேபோல, வாகனம் ஓட்டும்போது காரின் டேஷ்போர்டில் செல்போனை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் கடுமையான வெப்பத்தின்போது செல்போனை குளிர்ச்சியாகவும் பயனுடையதாகவும் வைத்திருக்கலாம்.
- ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை.
- வெப்ப அலை தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள்.
மோடி அரசு பதவியேற்ற 15 நாட்களில் 10 சம்பவங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 15 நாட்கள்
1. பயங்கரமான ரெயில் விபத்து
2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்
3. ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை
4. நீட் ஊழல்
5. நீட் முதுகலை ரத்து
6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு
7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டண விலை உயர்வு
8. காட்டுத்தீ
9. தண்ணீர் பஞ்சம்
10. வெப்ப அலை தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள்
தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் அவர் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க மாட்டோம். எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி அழுத்தம் தருவதை தொடரும். பொறுப்பு ஏற்காமல் மோடி தப்ப முடியாது.
- போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.
- அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ரியாத்:
சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர்.
இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மெக்கா, மதீனாவுக்கு 'ஹஜ்' புனித பயணம் செல்கின்றனர். அதன்படி இந்தாண்டு ஹஜ் பயணமாக மெக்காவில் சுமார் 18 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்.
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் வெப்ப அலை காரணமாக 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் கூறும்போது,
ஹஜ் பயணம் சென்ற யாத்ரீகர்கள் இறப்பு எண்ணிக்கை 1,301-ஐ எட்டி உள்ளது. 83 சதவீதம் பேர் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்யப்படாதவர்கள். போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.
வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்ரீகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே, 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாட்டின் பல நகரங்களிலும் வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவில் வீசும் வெப்ப அலையை தாக்கு பிடிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஓமியோபதி மருத்துவரான பூமிகா என்பவர் எக்ஸ் தளத்தில் ஒரு இனிப்பு பெட்டியின் படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் அவரது பதிவில், முதலில் பெட்டி முழுவதும் லட்டுகள் இருந்தது. ஆனால் டெல்லி வெப்பத்தில் அது உருகி அல்வாவாக மாறி விட்டது என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
- கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா்.
புதுடெல்லி:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீட்டித்து வரும் நிலையில், கடந்த மாா்ச் 1-ந் தேதி முதல் ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் 'வெப்பவாதம்' காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், வெப்பவாதத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதொடா்பான முழுமையாக தகவல்களை மாநிலங்கள் வழங்காததால் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் (என்சி.டி.சி.) வெளியிடப்படும் அறிக்கையில் அதிகாரபூா்வ உயிரிழப்புகள் குறித்த இறுதி தகவல்கள் இடம் பெறவில்லை. அதேபோல் சில சுகாதார மையங்களும் வெப்பவாதத்தால் உயிரிழந்தோா் குறித்த எண்ணிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.
வெப்பவாதத்தால் ஜூன் 20-ந் தேதி மட்டுமே 14 போ் உயிரிழந்ததாக அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 போ் இதே காரணத்தால் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாா்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114-யில் இருந்து 143-ஆக அதிகரித்தது.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 35 பேரும் டெல்லியில் 21 பேரும் பீகாா் மற்றும் ராஜஸ்தானில் தலா 17 பேரும் உயிரிழந்தனா். வெப்பவாதத்தால் 41,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
- வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
- தீவிர வெப்ப அலையால் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பீகார், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்