search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழம்"

    • வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
    • சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    ேசலம்:

    சேலம் மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    முலாம் பழம்

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.

    நடப்பாண்டில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் முலாம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு முலாம் பழம் அறுவடை செய்து லாரிகளில் லோடு ஏற்றி சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது.

    குவிப்பு

    ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதேபோல் சாலையோர கடைகளிலும் முலாம்பழம் அதிகளவில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை.
    • 1 கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் பகுதியில் சில தினங்களாக பனிப்பொழிவு குறைந்து பகலில் வெயில் வெயில் அதிகரித்துள்ளது.

    இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள் பழரச கடைகள் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக முலாம்பழம் என்னும் கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருவாரூர் பகுதியில் பழக்கடையில் இடம்பெற்றிருந்த கிர்ணி பழம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரத்திலும் கொட்டி விற்பனை செய்யப்படுகிறது.

    கிர்ணி பழம் ஆந்திராவில் விளைந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் உள்ள மார்க்கெட் வந்து அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் உட் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர் நகருக்கு திருச்சியிலிருந்து கிர்ணி பழம் வருகிறது.

    வியாபாரிகளுக்கு 1கிலோ ரூ 25 க்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தினை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வீதிகளில் வைக்கவும் பிரதிஷ்டை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    • 31-ந் தேதி சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக நகரின் முக்கிய வீதிகளில் சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    நாகர்கோவில், ஆக. 30-

    நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இந்த நாளில் விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் வீதிகளில் வைத்து வழிபாடு செய்வதும் பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வீதிகளில் வைக்கவும் பிரதிஷ்டை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து இருந்தது.

    இந்த ஆண்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கான தடை விலக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நாடு முழுவதும் கோலா கலமாக நடந்தது.

    31-ந் தேதி சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக நகரின் முக்கிய வீதிகளில் சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    குமரி மாவட்டத்திலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்சிச் சென்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை நாளை (31-ந் தேதி) கொண்டாடுவதற்காக வீடுகளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மக்கள் செய்தனர். வீதிகளிலும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு விரிவான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியினர் செய்தி ருந்தனர்.

    இதற்காக பெரிய விநாயகர் சிலைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அதனுடன் வைக்க சிறிய விநாயகர் சிலைகளை பலரும் ஆர்வத்துடன் இன்று வாங்கினர். மேலும் சிறுவர்-சிறுமிகள் தாங்கள் கைகளில் வீடு வீடாக எடுத்துச் செல்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்கினர்.

    இதேபோல் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு பொருட்கள் விற்பனையும் இன்று களைகட்டி காணப்பட்டது. குறிப்பாக பூக்கள், பழங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றார்கள்.அவர்கள் வசதிக்காக குமரி மாவட்டம் முழுவதும் மார்க்கெட்டுகளில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஏராளமாக விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.

    தோவாளை பூ மார்க்கெ ட்டில் இன்று மொத்த வியாபா ரம் மட்டுமின்றி சில்லறை வியாபாரமும் அதிக அளவில் இருந்தது. கோட்டார், வடசேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் சதுர்த்தியை கொண்டாட பூக்கள், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோக மாக நடந்தது.

    ஆனால் விற்பனை வேகத்திற்கு ஏற்ப பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டிருந்தது. வழக்கமான நாட்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் பூக்கள் விலை இன்று 3 மடங்கிற்கு மேல் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நாளை விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடும் எண்ணத்தில் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

    • பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கல பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர்.
    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று ஆடி 18-ம் நாள் விழா அதாவது ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி கரைகளில் ஆடிபெருக்கு விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சையில் பெருக்கெடுத்து ஓடும் கல்லணை கால்வாய் படித்துறைகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர். புதுமண தம்பதிகள் தங்களது மாங்கல்யத்தை கோர்த்து புதிதாக அணிந்து கொண்டனர்.

    திருவையாறு காவிரி புஷ்ய மண்டபதுறையில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபட்டனர். மேலும், ஆடி மாதத்தில் பிரிந்திருந்த புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். 'கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும்' என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டினர்.

    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தீர்த்த குளத்தில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது போட்ட பழைய மாலையை தண்ணீரில் விட்டு பெரியவர்களிடம் ஆசி வாங்கினர். அந்த ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். ஆசியுடன் புதிய மஞ்சள் கயிறு மாற்றி வழிபட்டனர். கும்பகோணம் மகாமககுளத்திலும் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரையில் பொதுமக்கள் பலர் புனித நீராடி வேதாரண்யேஸ்வர சுவாமியை வழிப்பட்டனர். மயிலாடுதுறை துலா கட்டம், பூம்புகார் கடற்கரைகளிலும் புதுமண தம்பதிகள் குவிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

    • கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    நாவல் பழம் சீசன் என்பதால் பழங்களை உண்ண வரும் கரடிகள் சாலைகளில் நடமாடி வருவதுடன் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் சுற்றி வருகிறது.இதனால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இந்நிலையில், கோத்தகிரி அரவேனு பகுதியில் வனத்தை விட்டு வெளியே வந்த கரடி ஒன்று வெகுநேரமாக தோட்டங்களிலேயே சுற்றி திரிந்தது. அப்போது அங்கு இருந்த நாவல் பழ மரத்தை பார்த்ததும் கரடி உற்சாகத்துடன் மரத்தின் மீது ஏறியது. பின்னர் அங்கிருந்த நாவல் பழத்தை பறித்து சாப்பிட்டது.

    ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், கரடி அங்கிருந்து தப்பித்து தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஒடியது. இப்பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ×