என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குறை தீர்க்கும் முகாம்"
- எஸ். பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.
- 83 மனுக்கள் பெறப்பட்டு 83 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் நிலத்தகராறு, அடிதடி, பணப்பிரச்சனை,குடும்ப தகராறு உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ். பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 83 மனுக்கள் பெறப்பட்டு 83 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் பொதுமக்க ளிடமிருந்து புதிதாக 19 மனுக்கள் பெரப்பட்டுள்ளது
இந்த முகாமில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், காவல் துணைகண்காணிப்பாளர் ராமச்சந்திரன், நாகலிங்கம், காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், ஷர்மிளா பானு,சரவணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
- போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
- 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மதுரை
மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் 59 மனுக்கள் பெறப்பட்டதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமயநல்லூரில் 122 மனுக்கள் பெறப்பட்டதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பேரையூர், மேலூரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது.
- இதில் முதியோர் உதவி தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 293 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதியோர் உதவி தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 293 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து அதிகாரிகளிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்பிறகு மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை
- இனி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள்பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்குவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கீழ்தள நுழைவு வாயில் அருகே ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. பின்னர் மனுவானது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் மனு வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்டம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து நேரில் மனு வாங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றுள்ளது. இனி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று இந்த கூட்டம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை வழங்கலாம். மேலும் போலீஸ் நிலையங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்திகரமானதாக இருந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- மொத்தம் 57 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலூகா வரட்டனப்பள்ளி அடுத்த குருவிநாயனப்பள்ளி கிராமத்தில் நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியர் அல்லாபகஷ் பாஷா, வட்ட பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்தப் பகுதியில் மக்களின் ரேஷன் கார்டில் புதியதாக உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் என மொத்தம் 57 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
- 54 மனுக்களுக்கு தீர்வு
- காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காண குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணகுறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குளச்சல், இரணியல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை ஆகிய போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் குளச்சலில் நடந்தது.
இதில் குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) சுந்தர மாணிக்கம், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, மகளிர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சப் - இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
- மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
- காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மதுரை
திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல (எண்5) அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் மேற்கு மண்ட லத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
- 60 பேருக்கு உடனடி நடவடிக்கை
- ஏலகிரிமலையில் நடந்தது
ஜோலார்பேட்டை,
ஏலகிரிமலையில் உணவுப் மற்றும் பொருள் வழங்கல் தேசிய நுகர்வோர் பாதுகாப் புத்துறை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் படி குடும்ப அட்டை தொடர்பான குறைத்தீர்வு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடந்தது.
முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன, வழங்கல் அலுவலர் திருமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வரவேற்றார்.
முகாமில் ஏலகிரிமலையில் உள்ள 14 கிராமங்களில் இருந்து மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு பெயர் திருத் தம், நீக்குதல், தொலைப்பேசி | எண் மாற்றுதல் உள்பட பல் வேறு திருத்தங்களுக்காக 100- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்