search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி குழுமம்"

    • அதானி குழுமம் நிர்வகித்து வரும் பார்சா நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளது.
    • மரங்களை வெட்டுவதை தடுக்க முயற்சிக்கும் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த 350 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பழங்குடியினருக்கும் போலீசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஹஸ்டியோ வனப்பகுதியில் அதானி குழுமம்  நிர்வகித்து வரும் பார்சா நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக அந்த வனப்பகுதியில் வசித்து வரும் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 6 கிராமங்களில் உள்ள சுமார் 5,000 மரங்களை அகற்ற அதிகாரிகள் முயன்றுள்ளனர்.

     

    இதனை எதிர்த்து நேற்றைய தினம் [ வியாழக்கிழமை] பழங்குடியினர் பெரிய அளவில் திரண்டு போராட்டம் நடத்திய நிலையில் போலீசாருக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே அதிகாரிகள் மரங்களை வெட்டும் பணியை துவங்கி உள்ள நிலையில் அங்கு வாழும் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த 350 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜஸ்தான் பாஜக  அரசின் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த பார்சா நிலக்கரித் திட்டத்தின் சுரங்க பணிகளை அதானி குழுமம் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பழங்குடியினர் தாக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சதீஷ்கர் ஆளும் பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • கனமழை காரணமாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
    • அதானி குழுமம் ஆந்திரப் பிரதேச மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது.

    ஆந்திர பிரதேச மாநில வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதானி குழுமம் சார்பில் நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழை காரணமாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

    வெள்ளம் பாதிப்புகளுக்கு உதவும் வகையில் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 25 கோடி வழங்கியதாக கவுதம் அதானி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தார். இது தொடர்பான பதிவில், "ஆந்திராவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சேதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது."

    "அதானி குழுமம் ஆந்திரப் பிரதேச மக்களுடன் ஒற்றுமையாக நிற்பதோடு, ஆந்திர மக்களுக்கு ஆதரவை வழங்கும் வகையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி வழங்குகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2023 ஜனவரி 24 இல் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கை மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஈடுபடவில்லை என்று கடந்த ஆகஸ்ட் 10 ஆம் ஹிண்டன்பா்க் மற்றொரு குற்றச்சாட்டை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.

    இந்த குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அதானி குழுமம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைத்தும் தற்போது மற்றொரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் செபி மாதபியின் மீது காங்கிரஸ் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக அரசு மவுனம் காப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

    செபி தலைவர் சீன நிறுவனங்களில் முதலீடு செய்கிறார் என்ற புதிய குற்றச்சாட்டைக் காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியுமா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

    இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ,

    பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் செபி தலைவர் மாதபி பூரி புச் வணிகம் செய்துள்ளார். இந்தியாவிற்கு வெளியே அதிக மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளார். எல்லைப்பகுதியில் இந்தியா சீனா இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் சூழலில் செபி தலைவரோ, சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த விஷயம் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, செபி தலைவர் கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். உள்நாடு மட்டுமின்றி சீனா உட்பட பல வெளிநாட்டு நிதி திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

    • அதானி நிறுவனம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச்சந்தையில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் சந்தையை தவறாகக் கையாண்டு, கணக்குகளில் மோசடிகள் செய்துள்ளதாக குற்றம்சாட்டி கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.

    இந்த அறிக்கை பங்குச்சந்தையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே, அதானி நிறுவனத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை சுவிஸ் வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது என தகவல் வெளியானது.

    அதில், சுவிட்சர்லாந்தில் கோதம் சிட்டி என்ற புலனாய்வு இணையதள செய்தி நிறுவனம், 2021-ம் ஆண்டு அதானி குழுமம் பண மோசடி, பங்கு பரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டதை ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.

    இதனால் சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி, அதானியின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம், மறுக்கிறோம்.

    அதானி குழுமத்திற்கு சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளில் எந்த தொடர்பும் இல்லை. கூறப்படும் உத்தரவில் கூட சுவிஸ் நீதிமன்றம் எங்கள் குழு நிறுவனங்களைப் பற்றி குறிப்பிடவில்லை.

    இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானது, பகுத்தறிவற்றது மற்றும் அபத்தமானது. இந்த முயற்சியை வன்மையாகக் கண்டில்க்கிறோம் என தெரிவித்துள்ளது.

    • ஜோமோ கென்யாட்டா விமானநிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.
    • இந்த விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    நைரோபி:

    கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.

    இந்த விமான நிலையத்தை அடுத்த 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

    இந்த ஒப்பந்தத்தின்கீழ் விமான நிலையத்தின் 2-வது ரன்வே மற்றும் புதிய பயணிகள் முனையத்தை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப் புதுப்பிக்கவும் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த ஒப்பந்தத்திற்கு கென்யாவில் உள்ள விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இந்த ஒப்பந்தத்திற்கு கென்ய ஜனாதிபதி வில்லியம் ருட்டோ ஆதரவு தெரிவித்தார்.

    இந்நிலையில், அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நைரோபியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணிகள் நீண்ட நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

    • அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்தது
    • 'மோதானி [மோடி- அதானி] மெகா மோசடி பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது'

    அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாகக் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. இது இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. எதிர்க்கட்சிகள் அதானி மற்றும் பிரதமர் மோடியின் நட்படை விமர்சிக்கத்தொடங்கின.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆர்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

    செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், செபி தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டத்தை இன்று [ஆகஸ்ட் 22] நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

    அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார். பங்குச் சந்தை ஒழுங்குமுறை இப்போது கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி தான் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்க் கே.சி வேணுகோபால் தெரிவித்திருந்தார்.

    மேலும், செபி தலைவர் மாதபி பூரி புச் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீதமான குற்றச்சாட்டை விசாரிக்கப் பாராளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்த போராட்டத்தைக் காங்கிரஸ் நடத்த உள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, நாடு முழுவதிலும் 20 மாநாடுகளை நடத்தி, மோதானி [மோடி- அதானி] மெகா மோசடி மூலம் கோடிக்கணக்கான சிறு முதலீட்டாலர்களை ஏமாற்றியும், பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் நடந்த ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார். 

    • அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது
    • இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.

    அதில் 'அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதி நிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாக காட்டி பங்குகளின் விலையை அதிகரித்து முறைகேடு செய்தது' என்று குறிப்பிட்டு இருந்தது.

    ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது. மீள் நடவடிக்கைகள் மூலம் தற்போது உலகின் 12-வது பெரிய பணக்காரராக அதானி திகழ்கிறாா்.

    இதற்கிடையே சந்தையில் ஆதாயம் தேட உண்மைகளை திரித்து பொய் தகவல்களைப் பரப்புவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனத்துக்கு செபி அமைப்பான இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜூன் 26-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

    செபி தலைவர் மாதபி பூரி புச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

    ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்தினுடைய அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. 

    சந்தை மதிப்பு சரிவால், இன்று ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு $2.4 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் தவறவிட்டுள்ளது

    ஹிண்டன்பெர்க் - அதானி பங்குகள் - செபி விவகாரத்தின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் பெரிதளவு தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், இன்றைய வர்த்தகம் சற்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

    • அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 46.65 ரூபாய் குறைந்து 3,140.90 ரூபாயாக உள்ளது.
    • அதானி போர்ட் பங்கு இன்று 35.80 ரூபாய் குறைந்து 1,498 ரூபாயாக உள்ளது.

    அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் என்று ஹிண்டர்பர்க் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.

    இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். முதலீட்டார்கள் லட்சக்கணக்கான கோடிகளை இழக்கும் அபாயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்திருந்தது.

    இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளுடன் ஆரம்பானது. அப்போது சுமார் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. அதன்பின் மெல்லமெல்ல வர்த்தகம் உயர்வை கண்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,106.18 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக 3.30 மணிக்கு வர்த்தகம் சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்ததை வர்த்தகம் 56.99 சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது.

    இந்திய பங்குச்சந்தை நிஃப்டி வெள்ளிக்கிழமை 24,367.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு 24,320.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. சுமார் 47 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் இன்று அதிகபட்சமாக 105 புள்ளிகள் அதிகரித்து 24,472.80 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக நிஃப்டி 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்ததை விட 20.50 சதவீதம் குறைவாகும்.

    அதானியின் டோட்டல் கியாஸ் லிமிடெட் பங்கு 3.95 சதவீதம் குறைந்த 835.50 ரூபாயாக இருந்தது. இன்று 34.35 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

    அதானி எனர்ஜி பங்கு 3.25 சதவீதம் குறைந்து 1067.90 ரூபாயாக உள்ளது. இன்று 35.90 ரூபாய் குறைந்துள்ளது. என்டிடிவி பங்கு 2.32 சதவீதம் குறைந்த 203.50 ரூபாயாக உள்ளது. 4.83 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி பவர் பங்கு 1.24 சதவீதம் குறைந்த 687 ரூபாய் உடன் நிறைவடைந்தது. இன்று 8.40 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி வில்மர் லிமிடெட் பங்கு 4.10 சதவீதம் குறைந்து 369.35 ரூபாயுடன் நிறைவடைந்தது. இன்று 15.80 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 1.46 சதவீதம் குறைந்து 3,140.90 ரூபாய் உடன் உள்ளது. இன்று 46.65 ரூபாய் குறைந்துள்ளது.

    அதானி போர்ட் பங்கு இன்று 2.33 சதவீதம் குறைந்துள்ளது. 1,498 ரூபாயாக உள்ளது. இன்று 35.80 ரூபாய் குறைந்துள்ளது.

    • நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
    • அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.

    அதானி குழும முறைகேடுகளை வெளிப்படுத்திய ஹிண்டன்பர்க் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதானியின் வெளிநாட்டு நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பங்குகளை செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் வைத்திருப்பதனாலேயே முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.

    இந்த புதிய அறிக்கை இன்றைய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தபடியே வாரத்தின் முதல் நாளான இன்றுபங்குச்சந்தை பெரும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.  

    • அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
    • SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?

    முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா.., SEBI தலைவரா.. அல்லது அதானியா?

    இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

    நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது" என்று பேசியுள்ளார்.

    • அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
    • செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலை பேசிய இந்த வீடியோவை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "செபி தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை பேசியதை வரவேற்கிறோம். பிரதமர் மோடி தனது கட்சி மாநிலத் தலைவரின் பேச்சைக் கேட்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக் குழு உடனடியாக இதை விசாரிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
    • அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும். ஹிண்டன்பர்க் ஏற்கனவே அதானி புலி வருகிறது அம்பானி புலி வருகிறது என்று கூறினார்கள். ஆனால் கழுதை புலி கூட வரவில்லை. இந்த முறை செபி புலி வந்திருக்கிறது. அதையும் விசாரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

    ×