search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதை"

    • இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார்.
    • முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆமூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்வர் அரிகிருஷ்ணன் (வயது 20). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக சந்தியா (20) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது ஆமூர் செல்லும் பாதை அருகே வந்த போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென எதிர்பாராமல் திரும்பியது. இதில் நிலைதடுமாறிய அரிகிருஷ்ணன், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அரிகிருஷ்ணனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 8 மாதத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
    • சுடுகாட்டுக்கு ெசல்லும் சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு ஊராட்சி சேனாதிகாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.

    இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேனாதிகாட்டில் உள்ளசுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
    • 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.

    ஆத்தூர்:

    இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த துக்க தினம் புனித வெள்ளியாக இன்று கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் அனு சரிக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சிறப்பு சிலுவைப்பாதை பவனி, ஆலயத்திலிருந்து உடையார்பாளையம் கல்லறைத்தோட்டம் வரை நடைபெற்றது.

    இதில், இயேசு சிலுவையை சுமந்து சென்றபோது, சாட்டையால் அடித்து அவரை துன்புறுத்து வது போன்ற தத்ரூபமான காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இந்த சிலுவைப்பாதை யில் ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டு, 14 சிலுவைப்பாதை நிலைகளையும், இயேசு சிலுவையில் மொழிந்த 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.

    • காட்டாம்பூர் கண்மாய் நடுவே நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் நுராம்பட்டி ஏந்தல் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பாசனம் பெற்று விவசாயம் நடந்து வருகிறது.

    இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவரால் வீட்டுமனை போடப்பட்டு உள்ளது. அதற்கு பாதை இல்லாத காரணத்தினால் கண்மாயின் நடுவே அவர் சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் மற்றும் வருவாய் துறையினரிடமும் புகார் செய்தனர்.

    அதன்பேரில் சேர்மன்சண்முக வடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதைத்தொடர்ந்து சேர்மன் சண்முக வடிவேல் சாலை அமைக்கும் பணியை நிறுத்த அரசு அலுவலர்களின் மூலமாக நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டது.

    திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் கண்மாயில் ஆய்வு செய்து கண்மாய் நடுவே சாலை அமைக்க முயன்ற தனி நபர் மீது புகார் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாயில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாதை அமைக்கப்பட்டதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

    • புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக படிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வது வார்டு பகுதியில் புதுக்குடி கீழூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு என தனியாக சுடுகாடு இல்லாத நிலையில் காலம் காலமாக ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தின் மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இறந்தவர்களைப் புதைத்து வருகின்றனர்.

    நெல்லை, திருச்செந்தூர் பிரதான சாலை ஓரத்தில் இருந்து சுமார் 20 அடி உயரமுள்ள பள்ளத்தில் இறந்தவர்களை ஆபத்தான முறையில் சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர். இதற்கிடையில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.

    இதனால், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழூர் மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இறந்தவர்களை சுமந்து செல்பவர்களும், துக்க நிகழ்வில் பங்கேற்ப வர்களும் தடுப்புக் கம்பியை தாண்டி சுமார் 20 அடி உயர பள்ளத்தில் இறங்கி ஏறுகின்றனர்.

    இந்நிலையில், இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் தடுப்பு கம்பிகள் அகற்றி பள்ளத்தில் இறங்குவதற்கு வசதியாக படிகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கீழுரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வியாபாரி நேற்று உடல் நலம் இன்றி இறந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கொண்டு சென்று பெரும் சிரமங்களுக்கிடையே தடுப்பு கம்பிகளை தாண்டி 20 அடி பள்ளத்தில் அவரது உடலை சுமந்து சென்று நல்லடக்கம் செய்தனர். பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடியாக தடுப்பு கம்பிகளை அகற்றி படிகள் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல வருடங்களாக புதுப்பிக்கபடாததால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
    • சாலை ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 13 வது வார்டு அரையபுரம் கேட்டுத்தெரு, தோப்புத் தெருசாலை பல வருடங்களாக புதுப்பிக்கப்படாததால் சாலையை கிராமமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    மேலும் சாலை புல் பூண்டுகள் மண்டிய நிலையில் ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.

    சேதமடைந்த சாலையை புதுப்பிக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராமமக்கள் வலியுறுத்தியும் நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது அரையபுரம்கேட்டுத்தெரு, தோப்புதெரு சாலை போடபட்டு 30 வருடத்திற்கு மேல் ஆகிறது.

    தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து இருசக்கர வாகனங்கள் கூட போக முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.

    எனவே பழுதான சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர்.

    • மயானத்துக்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.
    • பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா இரும்புதலை கீழ ஆதிதிராவிடர்தெரு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.

    இதனால் கிராமத்தில் ஒருவர் இறந்தால் வயல்வெளி வழியே உள்ள வயல்வரப்பு பாதையில் சேறும் சகதியுமாக உள்ள மண் சாலை வழியாக தான் கொண்டு செல்ல வேண்டும்.

    சாலை வசதி கேட்டு பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அவதியடைந்து வருகின்றனர்.

    பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. எனவே உடனடியாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
    • இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் நிலக்கரி லோடு மிக அதிக அளவு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் ஆரம்பத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தது. அதனை அகல ரெயில் பாதையாக மாற்றினர். ஆனால் மேட்டூர் அணைக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் சேலம்- மேட்டூர் அணை பாதையை இருவழித்தடமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

    இதன்படி சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டத்திற்கு கடந்த 2012- ஆண்டு மத்திய அரசு ரூ.220 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை ரெயில்வே நிர்வாகம் ெதாடங்கியது. இப்பணியை 3 பகுதிகளாக பிரித்து கட்டுமானப்பிரிவு மேற்கொள்ளப்பட்டது. அதாவது மேட்டூர் அணை- மேச்சேரி ஒரு பகுதியாகவும், மேச்சேரி- ஓமலூர் ஒரு பகுதியாகவும், ஓமலூர்- சேலம் ஒரு பகுதியாகவும் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல் இரு கட்ட பணிகள் நிறைவடைந்து, அப்பாதையில் மின்வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 3-ம் கட்ட பணியாக சேலம் - ஓமலூர் இடையே சுமார் 15 கிலோ மீட்டருக்கு புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை தற்போது ெரயில்வே கட்டுமானப்பிரிவு தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலம்- பெங்களூரு மார்க்கத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு, புதிதாக அகல ரெயில் பாதை தண்டவாளங்களை அமைக்க இடத்தை தயார்படுத்தினர்.

    தொடர்ந்து தற்போது சேலம் ஜங்சன் யார்டு பகுதியில் இருந்து ரெட்டிப்பட்டி, மேக்னசைட் வழியே புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இப்பணியை இன்னும் 6 மாத காலத்திற்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது இணை தண்டவாள பாதையாக விளங்கும். இந்த பணியை விரைந்து முடித்து மின்வழித்தடத்தையும் ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ×