search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுப்பு"

    • போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவர் மினி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

    விஜயகுமார், படந்தாலு மூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மினி பஸ்கள் நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளார். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினி பஸ்சாக விற்பனை செய்து கடனை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டில் முகாமிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் மினி பஸ் உரிமையாளர் விஜய குமாரின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மகன் வினேஷ் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனவும்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று விஜயகுமாரின் உற வினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட போவதாக தெரி வித்துள்ளனர்.

    • பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கூறினார்.
    • காதலன் மறுப்பு தெரிவித்ததால் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த 25 வயது பெண்.

    இவரும் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்த லெனின் (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் நாம் உடனே திருமணம் செய்து கொள்வோம் என லெனினிடம்கூறினார்.

    அதற்கு அவர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண் கேட்டபோது, லெனின் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

    இது குறித்து அந்த பெண் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் ஒன்று மேட்டூரில் இருந்து சேலத்துக்கு இருமுறையும், ெதாடர்ந்து சேலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு முறையும் இயக்கப்படுகிறது.
    • தினமும் 700 கி.மீட்டர் பஸ் இயங்கும் நிலையில் கூடுதலாக 210 கி.மீட்டர் இயக்க நிர்பந்தம் செய்கின்ற–னர். ஒரே டிரைவர் இந்த அளவு இயக்க இயலாது.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் ஒன்று மேட்டூரில் இருந்து சேலத்துக்கு இருமுறையும், ெதாடர்ந்து சேலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு முறையும் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மேட்டூரில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு அந்த பஸ் வந்தது. அந்த பஸ்சில் டிரைவர் மதியழகன், கண்டக்டர் குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். கண்டக்டர் குமார், புதிய பஸ் நிலைய கண்காணிப்பாளர் அறையில், விழுப்புரம் செல்ல நேரம் குறிப்பிட சென்றபோது, அங்கிருந்த உதவி மேலாளர் கணேஷ்குமார், சென்னைக்கு சிறப்பு பஸ்சாக இயக்க அறிவுறுத்தினார்.

    அதற்கு டிரைவர், கண்டக்டர் மறுத்துவிட்டனர். இதனால் இருவருக்கும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து டிரைவர், கண்டக்டர் கூறியதாவது-

    தினமும் 700 கி.மீட்டர் பஸ் இயங்கும் நிலையில் கூடுதலாக 210 கி.மீட்டர் இயக்க நிர்பந்தம் செய்கின்ற–னர். ஒரே டிரைவர் இந்த அளவு இயக்க இயலாது. மீறி இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பஸ்சை இயக்க மறுத்த நிலையில் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோட்ட அதிகாரிகள் எங்கள் மீதான நடவடிக்கைையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தோப்பு உற்சவத்துக்கு சாமி தூக்குவதற்கு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் ஊர்வலமாக காராமணிக்குப்பம் விநாயகர் கோவில் அருகே தோப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று காலை வழக்கம் போல் பாடலீஸ்வரர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது கோவில் வளாகத்தில், கோவில் முன்பு உள்ள சிறு வியாபாரிகள் திடீரென்று திரண்டு வந்தனர். அவர்களுடன் சாமி தூக்குபவர்களும் வந்தனர். பின்னர் சாமி தூக்குபவர்கள் திடீரென்று நாங்கள் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்க மாட்டோம் என தெரிவித்ததால் கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் சிறு வியாபாரிகள் கூறுகையில், பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது. அதற்கு மாறாக முன்பு யார் கடை வைத்திருந்தார்களோ அவர்களே மீண்டும் கடை வைத்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக தான் சாமி தூக்குபவர்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று பேசி முடிவு செய்வோம். 

    தற்போது தோப்பு உற்சவம் என்பது மிக முக்கியமான உற்சவம் ஆகும். ஆகையால் இதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது. மேலும் சாமி தூக்குபவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். ஆகையால் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசி நடவடிக்கை மேற்கொள்வோம். ஆகையால் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்கிக்கொண்டு காராமணிக்குப்பத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சிறு வியாபாரிகள் அங்கிருந்து கலந்து சென்றனர். மேலும் சாமி தூக்குபவர்கள் தோப்பு உற்சவத்திற்கு செல்வதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனை தூக்கிக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×