என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபயிற்சி"

    • கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன.
    • ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    வயதாகும்போது தசையின் நிறை, வலிமை, செயல்பாடுகள் படிப்படியாக பலவீனமடைய நேரிடும். இந்த நிகழ்விற்கு என்ன பெயர் தெரியுமா? இது மருத்துவ துறையில் `சர்கோபீனியா' என அழைக்கப்படுகிறது.

    வயது ஏற ஏற தசை இழப்பு ஏற்படும். இதனால், நடையின் வேகம் குறையும். கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியாது. இதன் தாக்கத்தின் தன்மை மனிதர்களுக்குள் மாறுபடும். முதுமை தவிர, புகைப்பிடித்தல், மது பழக்கம், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, வைட்டமின் டி, புரதச்சத்து குறைபாடு ஆகியவையும் காரணிகளாக கூறப்படுகிறது. சர்கோபீனியாவை எவ்வாறு தடுப்பது என்று பார்ப்போம்.

    சுறுசுறுப்பாக இருங்கள்

    தசை இழப்பை தடுக்க எப்பொழுதும் உடலானது இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்கள் முடிந்தவரை நிற்க முடிந்தால் நில்லுங்கள், உட்கார முடியுமாயின் சிறிது நேரம் உட்காருங்கள். எப்பொழுதும் படுத்தே இருக்க அனுமதிக்காதீர்கள். தசை இழப்பை தடுப்பதற்கு சிறந்த வழி இயங்கி கொண்டே இருப்பதுதான்.


    வயதானவர்களை நடக்க ஊக்கப்படுத்துங்கள்

    வயதானவர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்களை எப்பொழுதும் படுத்தே இருக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ ஊக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் தடுமாற்றமின்றி நடப்பதற்கு உதவுங்கள். இல்லையெனில் அவர்கள் முன்பை விட மிகவும் பலவீனமாகிவிடுவார்கள்.


    ஒரு வாரம் அவர்கள் படுக்கையில் இருந்தால், தசை நிறையில் 5 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். மேலும் அவர்களால் இந்த இழப்பை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்க முடியாது.

    ஆஸ்டியோபோரோசிஸை விட பாதிப்பு அதிகம்

    எலும்பின் வலிமை குறைந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறும் ஒரு நிலைக்கு `ஆஸ்டியோபோரோசிஸ்' என்று பெயர். இதனால் அவர்கள் எளிதில் கீழே விழுந்து எலும்பை உடைத்துக் கொள்வார்கள். ஆனால் இதை விட சர்கோபீனியா அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தசை நிறை குறைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுத்துவிடும்.


    ஓய்வில் இருந்தால் விரைவான தசை இழப்புக்கும் வழிவகுக்கும்

    கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன. எனவே உடலின் இயக்கத்திற்கு அவை மிகவும் முக்கியமானவை. வயதானவர்கள் உட்கார்ந்து அல்லது படுத்தே இருப்பதால் கால்களின் இயக்கம் குறைகிறது. இது கால்களின் தசையை பலவீனப்படுத்துகிறது.

    கால்களில் உள்ள தசைகள் எப்பொழுதும் ஓய்வில் இருந்தால், அது மோசமான விளைவை சந்திக்கிறது. நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் தசை நிறையை சரியாக பராமரிக்க உதவும் சிறந்த வழிகளாகும்.


    வயதாகி முதுமை எட்டும்போது, கால்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தசைகள் வலிமைப்படும். இரண்டு வாரங்களுக்கு கால்களை அசையாமல் வைத்திருந்தால், பத்து வருட காலத்திற்கு அதன் வலிமையை இழக்க நேரிடும்.

    சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் தசை வலிமையை பராமரிக்க உதவிடும். எனவே கால்களின் வலிமையை பராமரிக்க ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களில் 5 முதல் 13 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 முதல் 50 சதவீதம் பேரும் சர்கோபீனியா பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த 40 ஆண்டுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இது பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தசை இழப்பை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், சுறுசுறுப்பாக இருந்தால் அதன் தீவிரத்தைக் குறைக்கலாம்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பைச்சேர்ந்தவர் மாதவன். மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவர் காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, 3 நபர்கள் சாலையில் தள்ளிகொண்டு சென்றதை பார்த்து, நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தள்ளிகொண்டு சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். 

    தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராஜகண்பாதி, சார்லஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் விசாரித்தபோது, திருவாரூர் அண்ணாநகர் பின்னவாசலைச்சேர்ந்த சதீஷ்(வயது18) அவருடைய நண்பர் திருவாரூர் தாமரைக்குளம் தெருவைச்சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து, இருவரும் ஏற்கெனவே திருடிய ஒரு மோட்டார் சைக்கிளுடன் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு சிலர் வந்து கேட்டனர்.
    • நடைபயிற்சி, கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு சிலர் வந்து கேட்டனர். பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி கால்பந்து விளையாடுவதற்கு பள்ளி மைதானத்தில் அனுமதிக்க முடியாது என்று பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். எனவே நடைபயிற்சி, கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

    • கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி.
    • சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, கொள்ளிடம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. ஆனால் இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை 8 மணி வரையும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

    பனிப்பொழிவு காரணமளாக நடைபயிற்சி செய்பவர்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மைதானத்தை சீரமைத்துத்தர வேண்டும்.
    • மைதானம் புதர் மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக மைதானம் சீரமைப்பு செய்து தர வேண்டும். முறையான பராமரிப்பு இன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அதிகளவில் புதர் மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடுவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.

    புதர் அதிகளவில் இருப்பதால் பகலிலேயே விஷ பூச்சிகள் இங்கு அடைக்கலம் ஆகும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பள்ளி மாணவர்கள்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவ ர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டுமென அரசுக்கு பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய நலமன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புனம் ஆர்ட் அகாடமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் 2 பெண்கள் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைகிறார்கள்.
    • சுண்ணாம்பு மற்றும் கருப்பு தூள் மூலம் வட்டத்தை நிரப்புகிறார்கள்.

    சிலர் வித்தியாசமாக செய்யும் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடும்.

    அந்த வகையில் 2 பெண்கள் தரையில் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைந்து நடைபயிற்சி செல்வது போன்ற ஒரு வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    புனம் ஆர்ட் அகாடமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் 2 பெண்கள் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைகிறார்கள். அதன் பிறகு சுண்ணாம்பு மற்றும் கருப்பு தூள் மூலம் வட்டத்தை நிரப்புகிறார்கள். பின்னர் அந்த வட்டத்தில் அவர்கள் நடைபயிற்சி செல்வது போல காட்சிகள் உள்ளது.

    வைரலாக பரவும் இந்த வீடியோவை 1.14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
    • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி ரம்யா (வயது36). இவர்கள் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று ஆலம்பட்டி-திருமங்கலம் மெயின் ரோட்டில் பாய்ஸ் டவுன் பகுதியில் ரம்யா நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது அங்கு இருசக்கர வாகனத் தில் வந்த 2 மர்ம நபர்கள், ரம்யா கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தங்க தாலி செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி செல்லாச்சி (வயது76). இவரும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் 2 பெண்களும் புல்லலக் கோட்டை சாலையில் இன்று காலை நடைபயிற்சி சென்றனர். முனியசாமி கோவில் அருகே சென்ற போது அங்குள்ள பாலத்தில் 2 மர்ம நபர்கள் அமர்ந்திருந்தனர்.

    அந்த நபர்கள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களை நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சென்றுள்ளனர். பாலத்தில் இருந்து இறங்கி செல்லும்போது சற்று இடைவெளி விட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த மர்மநபர்கள் அவர்களின் பின்னால் வந்துள்ளனர்.

    திடீரென மர்மநபர்கள் செல்லாச்சி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செல்லாச்சி மற்றும் உடன் வந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, பாண்டியன்நகர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மாரிமுத்து, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • நடைபயிற்சி மற்றும் மெல்லோட்டம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
    • கார்டியோ உடல் எடையை குறைக்க உதவுகிறது

    எடை இழப்பு என வரும்போது எந்த உடற்பயிற்சியை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பலரும் குழப்பமாக இருப்பீர்கள். தொடக்கத்தில், நீங்கள் திறம்பட எடை இழக்க விரும்பினால் சில ஏரோபிக் பயிற்சிகளை சேர்க்க வேண்டும்.

    உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் நடைபயிற்சி மற்றும் ஓட்டம் மிகவும் பிரபலமான இரண்டு பயிற்சிகள். இவை இரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, தசைகளை வலுப்படுத்துகின்றன.

    நடைபயிற்சி மற்றும் மெல்லோட்டம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. கார்டியோ உடல் எடையை குறைக்க உதவுகிறது, சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது மற்றும் கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது.

    நடைபயிற்சி மற்றும்மெல்லோட்டத்தில் பல நன்மைகள் இருப்பதால், கூடுதல் கிலோவைக் குறைக்க உதவும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம்.

    நடைபயிற்சி என்பது ஓடுவதை விட குறைவான தீவிரமான ஏரோபிக் உடற்பயிற்சியாகும், இது அவர்களின் உடலின் வடிவத்தை வைத்திருக்க உதவுகிறது. இது ஒரு மணி நேரத்திற்கு 3 மைல் / 5 கிமீ வேகத்தில் நடப்பது என்று வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், இந்த குறைந்த தாக்க கார்டியோ உடற்பயிற்சி ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பயனளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இதய நோய்கள், நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைத்து, உங்கள் மன ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

    நடைபயிற்சிக்கு வரும்போது, இது குறைந்த-தீவிரம் கொண்ட பயிற்சி ஆகும், இது வேறு எந்த ஏரோபிக் உடற்பயிற்சியையும் விட குறைவான காயங்களை உருவாக்குகிறது. இயங்கும் காயங்கள் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, குறிப்பாக முழங்கால்களில்.

    ஓடும் காயம் ஏற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் நீடித்த சேதத்தை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. காயங்களுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

    அதிக தீவிரம் கொண்ட வொர்க்அவுட்டாக இருப்பதால், ஓடுவது ஓட்டத்தின் இரு மடங்கு கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் அது அர்த்தமல்ல, நடைபயிற்சி எந்த கலோரிகளையும் எரிக்காது. ஓடுவதற்கு தேவையான வேகத்தை அனைவருக்கும் பராமரிக்க முடியாது மற்றும் நடைபயிற்சி இன்னும் உடல் வடிவத்தை பெற உதவும். உண்மையில், நீங்கள் மிகவும் நிலையானநடைபயிற்சி மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும்.

    உதாரணமாக, விறுவிறுப்பான நடைபயிற்சி உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. பவர் ரன்னிங், வழக்கமாக, 3mph முதல் 5mph வரை, ஓடுவது போன்ற முடிவுகளைக் கொண்டுள்ளது.

    ஓடுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அதாவது இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக்கும். இருப்பினும், தவறாமல் நடப்பதால் மக்களில் இருதய நோய் அபாயமும் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஓடுவது நிச்சயமாக எடை இழக்க ஒரு சிறந்த வழியாகும். ஆனால் இது உங்கள் உடலில் கடினமாக இருக்கும் மற்றும் காயங்களுக்கு வழிவகுக்கும் அதிக தாக்க உடற்பயிற்சி ஆகும்.

    மேலும், ஓட்டப்பந்தய வீரர்களை விட உடற்பயிற்சி தொடர்பான காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் உடற்பயிற்சி செய்ய புதியவராக இருந்தால், நடைபயிற்சி என்பது ஒரு சிறந்த தேர்வாகும், இது உங்களை வடிவமைக்க உதவும்.

    நீங்கள் எதை தேர்வு செய்தாலும், ஒரு புதிய உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

    • ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர்.
    • அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை 6 மணி முதல் 6.45 மணி வரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நடைபயிற்சி மேற்கொள்வார் என்பதால் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போலீசார் தடை விதித்திருந்தனர்.

    இன்று காலை 5.25 மணிக்கே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையிலிருந்து ஜனாதிபதி நடைபயிற்சிக்கு கிளம்பினார்.

    தொடர்ந்து ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். ஜனாதிபதி நடைபயிற்சிக்காக துப்புரவு பணியாளர்கள் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தியிருந்தனர். நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் கடற்கரையில் இருந்தனர்.

    ஜனாதிபதி முன்கூட்டியே நடைபயிற்சி தொடங்கியதை தொடர்ந்து அவர்களும் ஜனாதிபதியோடு நடந்தனர். புஸ்சி வீதி விருந்தினர் மாளிகையிலிருந்து பழைய கலங்கரை விளக்கம் வரை ஜனாதிபதி நடந்து சென்று திரும்பினார்.

    அப்போது காந்தி சிலையை நின்று பார்த்தார். அங்கிருந்த அதிகாரிகள், சிலை வரலாறு குறித்து தெரிவித்தனர். பழைய கலங்கரை விளக்கம், புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகச்சுவர், தேசிய கொடிக்கம்பம் ஆகியவற்றை ஜனாதிபதி பார்த்தார். அவரோடு நடந்து வந்த அதிகாரிகள் சிலர் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    மீண்டும் ஜனாதிபதி 6.05 மணிக்கு விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். சுமார் 40 நிமிடம் ஜனாதிபதி நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் காலை உணவு சாப்பிட்ட பின் புதுவை முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன் பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தார்.

    அதனைதொடர்ந்து அங்கிருந்து ஜனாதிபதி ஆரோவில் சென்றார். அங்குள்ள மாத்ரி மந்திரில் தியானம் செய்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்.

    அதன்பின்னர் அங்கு நடந்த அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசினார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி புதுவை ஆரோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும்.
    • சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    வார்சா:

    எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    நடைபயிற்சி குறைந்த அழுத்தத்தை எலும்புகளுக்கும் தசைகளுக்கும் கொடுப்பதால், சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    உட்கார்ந்த வாழ்க்கை முறை பல்வேறு நோய் பாதிப்புக்கு மூல காரணமாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளாதவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

    இந்நிலையில், தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாம் என போலந்து மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

    போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

    அதிக தூரம் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

    ஒருவர் இவ்வளவு தூரம்தான் நடக்க வேண்டுமென்பதற்கு உச்சபட்ச அளவீடுகள் இல்லை.இருப்பினும், இது உங்கள் உடல் திறன் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

    இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் 2,337 அடிகள் நடப்பது. அதாவது 25 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியமானது.

    இளம் வயதில் ஏற்படும் மரணத்தைத் தடுக்க தினமும் 3,967 அடிகள் நடப்பது, அதாவது 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது அவசியம்.

    ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது.

    60 வயதிற்கு மேற்பட்டோர் எனில் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடப்போருக்கு, அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும். இது ஆண், பெண் என இருபாலினத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூட்டுகளை இலகுவாக்குகிறது. எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
    • நல்ல தூக்கம் வர உதவுகிறது. கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

    நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது.

    நடைபயிற்சி மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதை பகுதியை குறைக்க உதவுகிறது.

    தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

    ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்

    தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

    உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும்.

    நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

    நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

    நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

    அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.

    அடிவயிற்றுத் தொப்பையை குறைக்கிறது.

    மூட்டுகளை இலகுவாக்குகிறது.

    எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.

    கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.

    'கொலஸ்ட்ரால்' அளவைக் குறைக்கிறது.

    மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

    உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.

    நல்ல தூக்கம் வர உதவுகிறது.

    கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்

    ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.

    சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்

    நடைபயிற்சியின்போது செய்ய கூடாதவை

    ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் நடப்பதால் எந்த பயனும் இல்லை.

    இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்து வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி.

    உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை

    அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.

    மேடு, பள்ளம் உள்ள இடத்தில நடைபயிற்சி மேற்கொள்ளகூடாது..

    எவ்வாறு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

    நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தவாறு நடக்க வேண்டும்.

    நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களை சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருக்க வேண்டும்..

    கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு நடக்க வேண்டும்.

    உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடக்க வேண்டும்.

    ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

    நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித்தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் நடக்க வேண்டும்.

    இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள்.

    நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள் ளுங்கள்.

    நடைபயிற்சியின் அவசியம்

    அதிகாலையில் நடப்பது மிகவும் நல்லது.அந்த நேரத்தில் நடப்பதால் தூய்மையான காற்றினை நாம் சுவாசிக்க முடியும்.

    அதிகாலையில் நடக்க முடியாதவர்கள் இரவு உணவுக்கு பின் அரை மணி நேரம் நடக்கலாம்.

    எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.

    அதிகாலையில் நடக்கிறவங்க, அதுக்கு முன்னாடி அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக்கலாம்.

    உடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்புகளில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

    ×